இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
- இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பேச்சுவார்த்தை 2007-ல் தொடங்கப்பட்டது.
- கடந்த 18 ஆண்டாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை தற்போது உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த பேச்சுவார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 18 ஆண்டாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை தற்போது உறுதி செய்யப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருதரப்பும் தங்களுடைய பொருட்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் சுங்க வரிகளை தளர்த்தவேண்டும்.
தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வரும்.
இந்தியா இதுவரை மேற்கொண்ட அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலும் இந்தக் கோரிக்கை முக்கியமானதாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.