இந்தியா
BMW, பென்ஸ், ஆடி, ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை குறைகிறது - வாங்க தயாரா!
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- கார்களுக்கான வரிகள், அதிகபட்சமான 110%-லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்தியா - EU வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரிகள், தற்போதுள்ள அதிகபட்சமான 110%-லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.
இதன்மூலம் BMW, BENZ, AUDI, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாகக் குறையவுள்ளன