இந்தியா

வர்த்தக ஒப்பந்தத்தால் 144க்கும் மேற்பட்ட ஐரோப்பிய துறைகளில் நுழையும் இந்திய நிறுவனங்கள்!

Published On 2026-01-27 19:16 IST   |   Update On 2026-01-27 19:16:00 IST
  • இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
  • ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையான அங்கீகாரம் கிடைக்கும்

நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் இனி எளிதாக நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக IT, ITeS, கல்வி, நிதிச் சேவைகள், சுற்றுலா, கட்டுமானம், தொழில்முறை ஆலோசனைகள் உள்ளிட்ட 144க்கும் மேற்பட்ட ஐரோப்பிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் அல்லது சுயதொழில் செய்யும் நிபுணர்கள் இனி எளிதாக நுழைய முடியும்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு இணையான அங்கீகாரமும், சமமான வாய்ப்புகளும் இந்திய நிறுவனங்களுக்கு இனி வழங்கப்படும்.

இந்தியாவில் இருந்துகொண்டே ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் நிபுணர்களுக்கும், தற்காலிகமாக அங்கு சென்று பணிபுரியும் நிபுணர்களுக்கும் இது உதவும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News