இந்தியா

VB-G RAM G விவகாரம்: சட்டம் இயற்றிய பின், அதை நாம் பின்பற்ற வேண்டும்- அமைச்சர் கிரண் ரிஜிஜு

Published On 2026-01-27 15:00 IST   |   Update On 2026-01-27 15:00:00 IST
  • நாடாளுமன்றம் நாளை கூட இருக்கும் நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
  • VB-G RAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் VB-G RAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளிக்கையில் "சட்டம் ஒருமுறை நிறைவேற்றப்பட்டு நாட்டு மக்களின் முன் வந்துவிட்டால், நாம் அதைப் பின்பற்ற வேண்டும். நம்மால் பின்னோக்கிச் சென்று கடந்த காலத்திற்குத் திரும்ப முடியாது. அது நடக்காது. மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நமக்கு பேச்சு சுதந்திரம் உண்டு. ஆனால் கேட்பதும் நமது கடமையே" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News