கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2024-05-26 08:18 GMT   |   Update On 2024-05-26 08:18 GMT
  • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
  • மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று 2-வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சாஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாபிரிக்க அணி தரப்பில் நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது. அதிகபட்சமாக டீகாக் 41 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News