டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் யார் யாருடன்? எங்கே- எப்போது?- முழு விவரம்
- முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
- 2-வது அரையிறுதி 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியுடன் நிறைவடைகிறது. அதன்பின் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
அரையிறுதி போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதி மார்ச் 4-ந்தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.
2-வது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 5-ந்தேதி இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.
குரூப் 8 சுற்றில் 8 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தது. இதில் தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஈடன்கார்டனில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது இடத்தை பிடிக்கும்.
குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தன. இங்கிலாந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை மூலம் 3 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடித்துள்ளது.
குரூப் 1-ல் முதல் இடம் பிடித்த அணியும், குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்த அணியும் முதல் அரையிறுதியில் மோதும்.
குரூப் 2-ல் முதல் இடம் பிடித்த அணியும், குரூப் 1-ல் 2-வது இடம் பிடித்த அணியும் 2-வது அரையிறுதியில் மோதும்.
அதன்படி மார்ச் 4-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் குரூப் 1-ல் முதல் இடம் பிடிததுள்ள தென்ஆப்பிரிக்காவும், குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மார்ச் 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் குரூப் 2-ல் முதலிடம் பிடித்த இங்கிலாந்தும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று குரூப் 1-ல் 2-வது இடம் பிடிக்கும் இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தும்.
மார்ச் 8-ந்தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.