உலக கோப்பையில் வெளியேற்றம்: பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா நீக்கம்?
- பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது.
- கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்ற முடிவு.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. கரூப் சுற்றுப் போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி இன்றிரவு (மார்ச் 1) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய சூழலில் நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா என மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேற முடியும். இந்தத் தொடரில் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது.
நடபப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. லீக் சுற்றில் அந்த அணி இந்திய அணியிடமும், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியுடனும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்காக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமை சிறப்பாக இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இதைத் தொடர்ந்து அவரை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் இதர வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.