கிரிக்கெட் (Cricket)

ஒரே உலகக் கோப்பையில் இரண்டு சதம்: சாதனைப் படைத்த சஹிப்சதா பர்கான்

Published On 2026-02-28 21:03 IST   |   Update On 2026-02-28 21:03:00 IST
  • நமீபியாவிற்கு எதிராக ஃபர்கான் சதம் விளாசியிருந்தார்.
  • இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெற்று வரும் சூப்பர் 8 போட்டியில் குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சஹிப்சதா பர்கான், ஃபகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஃபகர் ஜமான் 27 பந்திலும், ஹகிப்சதா பர்ஹான் 32 பந்திலும் அரைசதம் விளாசினர்.

இருவரும் சதம் நோக்கி சென்றனர். இறுதியாக ஃபகர் ஜமான் 42 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.5 ஓவரில் 176 ரன்கள் குவித்தது.

ஆனால், சஹிப்சதா பர்கான் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 59 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் 60 பந்தில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் இது அவருடைய 2-வது சதமாகும். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பையில் 2 சதம் விளாசிய முதல் வீரர்கள் சாதனையை ஃபர்கான் படைத்துள்ளார்.

Similar News