அமெரிக்கா- ஈரான் மோதல்: வீரர்களின் மாற்று விமான பயணத் திட்டம் குறித்து யோசனை- ஐசிசி
- அமெரிக்கா- ஈரான் மோதலால் துபாய் விமான நிலைய சேவை பாதித்துள்ளது.
- வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பு துபாய் விமான நிலையம் முக்கிய மையமாக விளங்குகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் சூப்பர் 8 சுற்று போட்டிகள் முடிவடைகிறது. அதன்பின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த நிலையில்தான் அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் துபாயில் விமான நிலைய சேவை பாதித்துள்ளது. உலகக் கோப்பையில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு துபாய் விமான நிலையம் முக்கிய மையமாக உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடியும் வரை அமெரிக்கா- ஈரான் மோதல் நீடித்தால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்ப மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நிலையில் மாற்று ஏற்பாடுக்கான பணியை செய்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை மார்ச் 8-ந்தேதி முடிவடைகிறது.