டி20 உலகக் கோப்பை: உலக சாதனையை சமன் செய்த வில் ஜாக்ஸ்
- நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ், 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை (மொத்தம் 4 விருதுகள்) வென்ற வீரர் என்ற சாதனையை வில் ஜாக்ஸ் படைத்துள்ளார்.
இதன் மூலம் கெவின் பீட்டர்சன், லூக் ரைட், ஜோஸ் பட்லர் மற்றும் அடில் ரஷித் (தலா 3 விருதுகள்) ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 4 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சனின் (2012-ல் படைத்த சாதனை) உலக சாதனையை வில் ஜாக்ஸ் தற்போது சமன் செய்துள்ளார்.
அடுத்த போட்டிகளில் வில் ஜாக்ஸ் மீண்டும் ஆட்டநாயகன் விருது வெல்லும் பட்சத்தில், ஷேன் வாட்சனின் உலக சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார்.