இந்திய பேட்ஸ்மேன்களை பார்த்து எதிரணி பவுலர்கள் பயப்பட வேண்டும்- திலக்
- தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது முக்கியம்.
- 'பவர்-பிளே'யில் 3-4 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட அதிரடியாக ஆடும் பாணியை மாற்றக்கூடாது.
சென்னை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி அபிஷேக் ஷர்மா (55 ரன்), ஹர்திக் பாண்ட்யா (50 ரன்), திலக் வர்மா (44 ரன், 16 பந்து, 3 பவுண்டரி, 4 சிக் சர், இஷான் கிஷன் (38 ரன்) ஆகியோரின் 'சரவெடி' ஷாட்டுகளால் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தியது. 20 ஓவர் உல கக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 184 ரன் னில் அடங்கி தோல்வியை தழுவியது.
பின்னர் இந்திய வீரர் திலக் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு அணியாக அதிக ரன் குவிப்பதை எதிர்நோக்குகிறோம். 'பவர்-பிளே'யில் 3-4 விக்கெட்டுகளை இழந்தாலும் கூட அதிரடியாக ஆடும் பாணியை மாற்றக்கூடாது என்பது குறித்து ஆலோசித்துள்ளோம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்போது தான் 3, 4-வது மற்றும் 5-வது வரிசை பேட்டர்கள் அதே நம்பிக்கையுடன் தொடருவார்கள். அந்த வகையில் சஞ்சு சாம்சன் (24 ரன்) அருமையான தொடக்கத்தை தந்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க தயாராக இருக்கிறார்கள் என்ற அச்சத்தை எதிரணி பந்து வீச்சாளர்களிடம் பார்க்க விரும்புகிறோம். அந்த மனநிலையுடன் தான் இந்த ஆட்டத்தில் விளையாடினோம்.
ஜிம்பாப்வே ஆட்டத்துக்கு முன்பாக சிறந்த மனநிலையுடன் களத்திற்கு செல்வது குறித்தும், உற்சாகமாக விளையாடுவது குறித்தும் விவாதித்தோம். 20 ஓவர் கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக நாங்கள் எப்படி ஆடினோம் என்ற வீடியோவை பார்த்தோம். இந்த வீடியோவை பார்த்த பிறகு ஒவ்வொருவருக்கும் புதிய நம்பிக்கை வந்தது.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கடந்த ஓராண்டாக நாம் எப்படி 20 ஓவர் கிரிக்கெட்டை விளையாடி வெற்றிகளை குவித்தோம். உள்ளூரில் தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியதை நினைவில் கொள்ளுங்கள். எத்தகைய நிலைமை இருந்தாலும் ஒரு தனிநபராக மகிழ்ச்சியோடு உற்சாகமாக அனுபவித்து விளையாடுங்கள் என்று அறிவுறுத்தினார். கடந்த கால ஆட் டங்களின் வீடியோ மற்றும் கம்பீர் அளித்த உத்வேகம் சாதிக்க உதவியது.
இவ்வாறு திலக் வர்மா கூறினார்.