கிரிக்கெட் (Cricket)

மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது ஐபிஎல் 2026 சீசன்

Published On 2026-02-27 20:10 IST   |   Update On 2026-02-27 20:10:00 IST
  • மார்ச் 26-ந்தேதி தொடர் தொடங்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.
  • தற்போது 2 நாட்கள் கழித்து தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

ஐ.பி.எல். 2026 சீசன் மார்ச் 28-ந்தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 2 நாட்களுக்குப் பிறகு தொடங்கப்படுகிறது. மே 31-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனத் தகவல் கசிந்துள்ளது.

பொதுவாக இந்த நேரத்தில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும். தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எல்எஸ்ஜி அணிக்கு சொந்தமான மைதானங்களை கொண்ட தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிடலாம் என பிசிசிஐ உள்ளது. அதேவேளையில் அணி உரிமையாளர்கள் பகுதி நேர அட்டவணையாவது வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிகிறது.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பிசிசிஐ காத்திருக்குமா? அல்லது பகுதி நேர போட்டி அட்டவணை வெளியிடப்படுமா? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News