கிரிக்கெட் (Cricket)
null

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல்: இம்பேக்ட் பிளேயர் விருதை வென்ற 2 இந்திய வீரர்கள்

Published On 2026-02-27 11:16 IST   |   Update On 2026-02-27 11:29:00 IST
  • டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் மோதின.
  • இந்த ஆட்டத்தில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே - இந்தியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மோதின.

இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, வெறும் 30 பந்துகளில் 55 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அதேபோல ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கிய திலக் வர்மா, மின்னல் வேகத்தில் விளையாடி 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் விளாசினார்.

இவர்களின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 186 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா தட்டிச் சென்றார்.

இந்நிலையில் போட்டி முடிவில் இந்திய அணி சார்பாக இம்பேக்ட் பிளேயர் விருது வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த போட்டியின் 'இம்பாக்ட் பிளேயர்' பதக்கம் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் தங்களின் சிறப்பான ஆட்டத்திற்காக 'இம்பாக்ட் பிளேயர்'  பதக்கங்களை வென்றுள்ளனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News