கிரிக்கெட் (Cricket)

இலங்கையுடன் இன்று மோதல்... பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு செல்ல என்ன வழி?

Published On 2026-02-28 08:11 IST   |   Update On 2026-02-28 08:11:00 IST
  • இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற வேண்டும்.
  • பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்

20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன் இலக்கை கூட நெருங்க முடியாமல் 95 ரன்னில் சுருண்டு போனது. முக்கியமான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. இனி உள்ளூர் ரசிகர்கள் முன் ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்ய முனைப்பு காட்டுவார்கள்.

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு முடிவில்லை. ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) என ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் பணிந்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, ரன்ரேட்டிலும் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும். அதாவது முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்திலோ அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடித்தாலோ அரைஇறுதி அதிர்ஷ்டம் அடிக்கும்.

எனவே சுழற்பந்து வீச்சில் வலுவாக உள்ள பாகிஸ்தான் பேட்டிங்கிலும் அசத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Tags:    

Similar News