கிரிக்கெட் (Cricket)

தோல்வியில் இருந்து வெற்றி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய வில் ஜாக்ஸ்

Published On 2026-02-28 02:01 IST   |   Update On 2026-02-28 02:03:00 IST
  • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வென்றது.

கொழும்பு:

டி20 உலகக் கோப்பை தொடரின் 49-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 39 ரன்னும், டிம் சைபர்ட் 35 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறஙகிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கடைசி 3 ஓவரில் வெற்றிபெற 43 ரன்கள் தேவைப்பட்டது. வில் ஜாக்ஸ்-ரெஹான் அகமது ஜோடி அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். வில் ஜாக்ஸ் 32 ரன்னும், அகமது 7 பந்தில் 19 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், பந்து வீச்சு, பேட்டிங்கில் சிறந்து விளங்கிய வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தோற்கும் நிலையில் இருந்த அணியை அதிரடியாக ஆடி வெற்றிக்கு அழைத்து சென்றதால் வில் ஜாக்ஸ் டிரெண்டிங் ஆனார்.

Tags:    

Similar News