கிரிக்கெட் (Cricket)

தசுன் ஷனகா போராட்டம் வீண்: இலங்கையை போராடி வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2026-02-28 22:53 IST   |   Update On 2026-02-28 22:53:00 IST
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய இலங்கை 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பல்லேகலெ:

டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

Tags:    

Similar News