சூப்பர் 8 சுற்று: தென்ஆப்பிரிக்காவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே
- சிகந்தர் ரசா 43 பந்தில் 73 ரன்கள் விளாசினார்.
- மடாண்டே 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே அணியின் மருமணி, பிரையன் பென்னெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பென்னெட் 15 ரன்னிலும், மருமணி 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த தியோன் மையர்ஸ் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் கேப்டன் சிகந்தர் ரசா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மடாண்டே 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மபாகா மற்றும் போஸ் தலா 2 விக்கெட்டும் லிண்டே, லுங்கி நிகிடி, நோர்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.