கிரிக்கெட் (Cricket)

கடைசி போட்டியில் 185 ரன்களில் படுதோல்வி: இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

Published On 2026-03-01 17:33 IST   |   Update On 2026-03-01 17:33:00 IST
  • ஆஸ்திரேலியா 409 ரன்கள் குவித்தது.
  • இந்தியா 224 ரன்களில் சுருண்டது.

ஆஸ்திரேலியா- இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா களம் இறங்கியது.

ஆனால், முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது. அலிசா ஹீலி 158 ரன்கள் குவித்தார். பெத் மூனி ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 410 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். இந்திய அணி 45.1 ஓவரில் 224 ரன்னில் சுருண்டு 185 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்திய அணியில் ஸ்னே ராணா அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். அடுத்தப்படியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்கள் அடித்தார். ஸ்மிரிதி மந்தனா டக்அவுட் ஆனார். ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் அலான கிங் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்தியாவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

Similar News