அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சொதப்பல்: இந்தியா பவர்பிளேயில் 53/2
- அபிஷேக் சர்மா 11 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இஷான் கிஷன் 6 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியது. இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார்.
2-வது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை ஹொசைன் வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த இஷான் கிஷ் 4-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 6 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.