கிரிக்கெட் (Cricket)

தெறிக்கவிட்ட பொவேல்- ஹோல்டர் ஜோடி: இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2026-03-01 20:50 IST   |   Update On 2026-03-01 20:50:00 IST
  • ராஸ்டன் சேஸ் 25 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
  • ரோவன் பொவேல்- ஹோல்டர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் குவித்தது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று கடைசி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷாய் ஹோப் நிதானமாக விளையாட, சேஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது. 8.5 ஓவரில் 68 ரன்கள் எடுத்திருக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் முதல் விக்கெட்டை இழந்தது. ஷாய் ஹோப் 33 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் 14.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரோவன் பொவேல் உடன் ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது.

அடுத்து வந்த ஹெட்மையர் 12 பந்தில் 27 ரன்கள் விளாசினார். சேஸ் 25 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 15 ஓவர் முடிவில் 125 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 24 ரன்கள் சேர்த்தது.

வருண் சக்ரவர்த்தி வீசியா 17-வது ஓவரில் 14 ரன்கள் அடித்தது. இதனால் 17 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.

18-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் அடித்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர் முடிவில் 175 ரன்கள் சேர்த்தது.

19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 187 ரன்கள் சேர்த்தது.

கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. பொவேல் 19 பந்தில் 34 ரன்களும், ஹோல்டர் 22 பந்தில் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 35 பந்தில் 76 ரன்கள் குவித்தது.

Tags:    

Similar News