என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
விவோ நிறுவனத்தின் புதிய Y72 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் அம்சங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் சீன சந்தையில் விவோ Y52s எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ Y72 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y72 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ Y725ஜி மாடல் ப்ரிசம் மேஜிக், ஸ்லேட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20,990 ஆகும். புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேஸ்பிட் GTR 2 LTE ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 2 LTE ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் இசிம் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

புதிய LTE தவிர மற்ற அம்சங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ்பிட் GTR 2 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அமேஸ்பிட் GTR 2 LTE வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப், இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய அமேஸ்பிட் GTR 2 LTE விலை 249 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 21,900 ஆகும். இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ F3 GT ஸ்மார்ட்போனிற்கான புது டீசரை வெளியிட்டு இருக்கிறது.
போக்கோ இந்தியா நிறுவனம் போக்கோ F3 GT ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய டீசரின் படி போக்கோ F3 GT கிளாஸ் பாடி, ஸ்லிப்-ஸ்டிரீம் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதன் பின்புறம் கைரேகை பதியாத வகையில் மேட் பினிஷ் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏரோஸ்பேஸ்-ரக அலுமினியம் அலாய் பிரேம் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இத்துடன் போக்கோ F3 GT மாடல் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, HDR 10+, டிசி டிம்மிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. முன்னதாக வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
புதிய போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் கன்மெட்டல் சில்வர், பிரிடேட்டர் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் மெமரி ஆப்ஷன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் ஒற்றை மெமரி ஆப்ஷனில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 14,999 என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முதல் விற்பனைக்கு சியோமி அறிமுக சலுகைகளை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த ஸ்மார்ட்போன் புளூ, கிரீன், கிரே மற்றும் சில்வர் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த இலவச சேவையில் திடீர் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது.
தற்போது கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச வரம்பற்ற க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது.
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
ஒப்போ ரெனோ 6 5ஜி மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஒப்போ நிறுவனத்தின் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். முன்னதாக ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டன.
இவற்றில் இரு வேரியண்ட்கள் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. ஒப்போ ரெனோ 6 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11.3, 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 6.55 இன்ச் FHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ரெனோ 6 5ஜி மாடலில் உள்ள சென்சார்களுடன் கூடுதலாக 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 6 5ஜி மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 6 5ஜி விலை ரூ. 29,990 ஆகும். ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 39,990 ஆகும். இரு மாடல்களும் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா, ஒப்போ வலைதளம் மற்றும் இதர விற்பனை மையங்களில் கிடைக்கும்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான மேக்சேஃப் பேட்டரி பேக்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்சேஃப் பேட்டரி பேக் (Magsafe Battery Pack) ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமாக ஐபோன் மாடல்களுக்கென பேட்டரி கேஸ் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்யும். ஆனால் இம்முறை அறிமுகமாகி இருக்கும் மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோனின் பின்புறம் காந்த சக்தி மூலம் ஒட்டிக்கொள்ளும்.

புதிய மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு பொருந்தும். இதை கொண்டு ஐபோன்களின் பேட்டரி ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த பேட்டரி பேக் ஐபோனின் பின்புறம் வைத்ததும், ஐபோன் சார்ஜ் ஆக துவங்கி விடும்.
இதனை சார்ஜ் செய்வதற்கான கேபிள் வழங்கப்படவில்லை. இதனால் ஐபோனிற்கு கொடுக்கப்பட்ட கேபிள் கொண்டு மேக்சேஃப் பேட்டரி பேக் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோனினை 5வாட் திறன் கொண்டு சார்ஜ்செய்யும். இந்தியாவில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான ஆப்பிள் மேக்சேஃப் பேட்டரி பேக் விலை ரூ. 10,990 ஆகும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ22 வெளியீட்டை தொடர்ந்து இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பாவில் கேலக்ஸி ஏ22 5ஜி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 20,100 ஆகும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜுலை 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், நார்டு 2 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மிக மெல்லிய பெசல்கள், ஸ்கிரீனின் இடதுபுறத்தில் பன்ச் ஹோல் காணப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் இரட்டை செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், புது ரென்டர்களின்படி நார்டு 2 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
இத்துடன் புது ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் வால்யூம் பட்டன்கள், வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புது நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் விரைவில் வெளியிட இருக்கிறது.

இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இரு சாதனங்களின் தென் கொரிய விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி இசட் போல்டு 3 விலை 1655 டாலர்களில் துவங்கி அதிகபட்சம் 1,741 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய மதிப்பில் ரூ. 1,23,241 முதல் ரூ. 1,29,645 ஆகும்.
கேலக்ஸி இசட் ப்ளிப் 3 விலை 1,045 டாலர்களில் துவங்கி அதிகபட்சம் 1,110 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 77,816 துவங்கி ரூ. 82,657 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சென்ஹெய்சர் நிறுவனத்தின் HD 25 லிமிடெட் எடிஷன் ஹெட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
சென்ஹெய்சர் HD 25 ஹெட்போனின் ஸ்பெஷல் புளூ லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன்களில் புளூ இயர்பேட்கள் உள்ளன. அதிக சத்தமுள்ள பகுதிகளில் பயன்படுத்தும் போது இந்த ஹெட்போன்கள் சிறப்பான ஆடியோவை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

இந்த ஹெட்போன் டி.ஜெ. மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் சென்ஹெய்சர் HD 25, ஆடியோவை ஒரே காதில் மட்டும் கேட்க செய்யும் வசதி கொண்டுள்து.
சென்ஹெய்சர் HD 25 ஸ்பெஷல் புளூ லிமிடெட் எடிஷன் விலை ரூ. 8,499 ஆகும். இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை முறையிலும் இதனை வாங்கிக் கொள்ளலாம்.
சூப்பர் மேரியோ 64 கேம் கன்சோல் அமெரிக்காவை சேர்ந்த ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனமான ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ், திறக்கப்படாத நிலையில் இருந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. இந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஒருவர் 15.6 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 11,62,00,500 கொடுத்து வாங்கி உள்ளார்.
திறக்கப்படாத நிலையில் இருந்ததால், இந்த கேம் சேகரிக்கும் பொருளாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் நின்டென்டோவின் பல கேம்களுக்கு ஏல விற்பனையில் நல்ல விலை கிடைத்து இருக்கிறது. நின்டென்டோ கேம்களான லெஜண்ட் ஆப் செல்டா, பைனல் பேண்டஸி 3 மற்றும் சூப்பர் மேரியோ ப்ரோஸ் போன்றவை முந்தைய விற்பனைகளில் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளன.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கன்சோல் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான சமயத்தில் இருந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது. என்64 கன்சோல் நின்டென்டோ நிறுவனத்திற்கு பெரும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இது பல லட்சம் கேமர்களை கவர்ந்த கன்சோல் ஆகும்.
முன்னதாக லெஜண்ட் ஆப் செல்டா கேமினை ஒருவர் 8,70,000 டாலர்கள் கொடுத்து வாங்கி இருந்தார். இதுவே, அதிக தொகைக்கு விற்பனையான கேமாக இருந்து வந்தது. இதற்கு முன் சூப்பர் மேரியோ ப்ரோஸ் கேம் 6,60,000 டாலர்களுக்கு விற்பனையானது அதிகபட்ச தொகையாக இருந்தது.
திறக்கப்படாத நிலையில் இருக்கும் சூப்பர் மேரியோ 64 கேமினை இத்தனை கோடிகளுக்கு வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.






