என் மலர்
தொழில்நுட்பம்

விவோ Y72 5ஜி
விவோ நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
விவோ நிறுவனத்தின் புதிய Y72 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் அம்சங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய விவோ Y72 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் சீன சந்தையில் விவோ Y52s எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ Y72 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y72 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ Y725ஜி மாடல் ப்ரிசம் மேஜிக், ஸ்லேட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20,990 ஆகும். புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story






