என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,600 வரை நிர்ணயம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    இது உண்மையாகும் பட்சத்தில் இது சாம்சங் நிறுவனத்தின் விலை உயர்ந்த வயர்லெஸ் இயர்போனாக இருக்கும். புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மற்றும் சோனி WF-1000XM3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி இயர்பட்ஸ்

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் லைவ் எனும் பெயரில் புதிய இயர்போன் மாடலை அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் விலை சர்வதேச சந்தையில் 169 டாலர்கள் என்றும் இந்தியாவில் இது ரூ. 14,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    அந்த வகையில் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் சோனி WF-1000XM3 மாடல் ரூ. 19,990 என்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.
    பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலை பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் ரூ. 199 பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    புதிய சலுகை தவிர பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை பலன்களை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 998 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. 

     கோப்புப்படம்

    பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த சலுகை மாற்றம் பிஎஸ்என்எல் கேரளா வட்டாரத்திற்கான ட்விட்டர்பக்கத்திலும், ரூ. 199 பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு ராஜஸ்தான் வட்டாரத்திற்கான ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மற்றும் ரூ. 998 சலுகை மாற்றம் அந்தந்த வட்டாரங்களில் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. விரைவில் இவை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்கள் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் புதிதாக பேஸ் மாடல் மற்றும் ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களில் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களில் ஒன்பிளஸ் 9 லைட் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி கொண்டிருக்கும் என தெரிகிறது. அதன்படி அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா செட்டப், டிஸ்ப்ளே செட்டிங், மென்பொருள் அனுபவம் கொண்டிருக்கும்.

    சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 9 லைட் மாடல் விலை 600 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    டைவா நிறுவனத்தின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    இந்தியாவை சேர்ந்த மின்சாதன உற்பத்தியாளரான டைவா 43 இன்ச் அளவில் D43QFS ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவியில் புல் ஹெச்டி ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் பில்ட் இன், தி பிக் வால் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இதில் உள்ள பில்ட் இன் அலெக்சா மூலம் பயனர்கள் புதிய திரைப்படங்கள் அல்லது நினைவூட்டல் போன்ற அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டு அலெக்சா சார்ந்த ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கலாம்.

     டைவா ஸ்மார்ட் டிவி

    புதிய டைவா ஸ்மார்ட் டிவி ஏ53 குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 8 இயங்குதளம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் தி பிக் வால் மென்பொருள் வழங்கப்பட்டு உள்ளது. இது டைவா நிறுவனத்தின் சொந்த யுஐ ஆகும்.

    இந்த யுஐ 25000000+க்கும் அதிக மணி நேரங்களுக்கான தரவுகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இரோஸ் நௌ, வூட், அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இருந்து வழங்குகிறது. 43 இன்ச் புல் ஹெச்டி பேனல் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் டைவா D43QFS ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 24,490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை அனைத்து சில்லறை விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது.

    விவோ நிறுவனத்தின் வி20 2021 ஸ்மார்ட்போன் ரூ. 24,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி20 2021 ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி20 போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், புதிய விவோ வி20 2021 மாடலில் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் விவோ வி20 2021 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்,  8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    விவோ வி20

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது கேமரா,  2 எம்பி மோனோ சென்சார்,  44 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10,  டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் விவோ வி20 2021 பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் புதிய விவோ வி20 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது.
    இந்திய சந்தையில் புதிய ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் அளவில் வட்ட வடிவ எல்சிடி டச் ஸ்கிரீன் ஆட்டோ பிரைட்னஸ் வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. 

    இது IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் வசதி, அலுமினியம் அலாய் கேஸ், 16 ஸ்போர்ட்ஸ் மோட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல், அதிகபட்சம் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

     ரியல்மி வாட்ச் எஸ்

    ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோ மாடலில் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், ஆட்டோ பிரைட்னஸ், ஆம்பியன்ட் லைட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 100-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் எஸ் மாடல் விலை ரூ. 4999 என்றும் வாட்ச் எஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கில் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 20 எம்பி சினி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    ஒன்பிளஸ் 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே,  ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்,  50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கில் லென்ஸ்,  20 எம்பி சினி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ்,  12 எம்பி டெலிபோட்டோ கேமரா, கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். 

    டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் HD+ 20:9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், IMG பவர்விஆர் GE8320 GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 

     டெக்னோ ஸ்பார்க் 6 கோ

    ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ் 6.2 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் 3.5mm ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்,  4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் மிஸ்ட்ரி வைட், ஐஸ் ஜடைட் மற்றும் அக்வா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தயாவில் இதன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    சாம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் The First Look 2021 எனும் தலைப்பில் ஜனவரி 6 ஆம் தேதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வில் புதிய டிவி மற்றும் இதர டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    இந்த நிகழ்வில் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என சாம்சங் அறிவித்து உள்ளது. டீசர் படத்தில் மாணிட்டர்கள், தொலைகாட்சிகள் மற்றும் இதர டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

     சாம்சங் டீசர்

    முன்னதாக இந்த ஆண்டு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் QLED 8K டிவி, புதிய 88 மற்றும் 150 இன்ச் மைக்ரோ எல்இடி மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு சாம்சங் புதிய QLED 8K டிவி, தி செரிப் QLED டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் புதிய குவாண்டம் மினி LED டிவிக்களை 55, 65, 76 மற்றும் 85 இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுதவிர டேப்லெட்கள், லேப்டாப் மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அறிவித்து உள்ளது. இது சியோமி கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் ஆகும்.

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானதோடு, பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

     சியோமி டீசர்

    சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4820mAh பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்  

    அமேசான் நிறுவன ஊழியர்கள் ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கியயுள்ளனர்.


    அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் போன்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிடங்கில் கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிடங்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குருகிராம் கிடங்கில் இருந்து ஊழியர்கள் மொத்தம் 78 மொபைல் போன்களை திருடி உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 40 போன்கள் தொடர்ந்து மாயமாக உள்ளது. கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. பின் அமேசான் நடத்திய ஆய்வில் இரு ஊழியர்கள் மொபைல் போன்களை திருடி சென்று விற்றதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூவாமி நிறுவனம் ரூ. 12,999 விலையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.


    ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஹெச்டி ரெசல்யூஷன், அலுமினியம் பாடி, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், spo2 மாணிட்டரிங், ஜிபிஎஸ் வசதி, 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2

    அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்

    - 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
    - 3D கிளாஸ்
    - ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
    - 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் 
    - ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
    - ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
    - அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
    - ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ் 
    - 3 ஜிபி மெமரி 
    - மைக்ரோபோன்
    - 246mAh பேட்டரி 

    அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    ×