என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அமேசான் தளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆப்பிள் டேஸ் பெயரில் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த விற்பனையில் ஐபோன் 12 சீரிஸ், ஐபேட் மினி, மேக்புக் ப்ரோ என பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ஐபோன்

    அமேசானில் ஆப்பிள் டேஸ் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபோன் 12 மினி மாடல் ரூ. 67100 துவக்க விலையில் கிடைக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 2800 குறைவு ஆகும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐபோன் 11 ப்ரோ விலை ரூ. 79,900 என மாறி இருக்கிறது. இதுதவிர ஐபேட் மாடல்களுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான சேமிப்பு, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு தள்ளுபடி, கேஷ்பேக் தவிர, ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இன் சீரிசில் புது ஸ்மார்ட்போன் இன் 1 பெயரில் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடல் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து உள்ளது.

    இதற்காக மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு இருக்கும் டீசர்களை கொண்டு பார்க்கும் போது, புது மாடல் மல்டிமீடியா சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் எந்த விவரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

     மைக்ரோமேக்ஸ் இன் 1

    எனினும், இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன் 1பி மற்றும் இன் நோட் 1 மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. முந்தைய இன் நோட் 1 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் 4 ஜிபி ரேம் கொண்டிருந்தது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம் சீரிசில் புது மாடல்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டுக்கான பிளாக்ஷிப் எஸ் சீரிஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது கேலக்ஸி ஏஷ எப் மற்றும் எம் சீரிஸ் மாடல்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் மற்றொரு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் கேலக்ஸி எம்42 பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இதில் 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி எம்42 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் பேண்ட் வைபை சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    5ஜி வழங்கப்படும் பட்சத்தில் கேலக்ஸி எம்42 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி 5ஜி, சியோமி எம்ஐ 10ஐ மற்றும் ரியல்மி எக்ஸ்7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    விவோ நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்60 சீரிஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக தெரிவித்து இருக்கிறது. முன்னதாக விவோ எக்ஸ்60 சீரிசில் மூன்று மால்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இவை இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன.

     விவோ எக்ஸ்60

    புதிய எக்ஸ்60 சீரிசில், விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ், விவோ எக்ஸ்60 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்60 மாடல்கள் உள்ளன. எனினும், இவை மூன்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது ஒன்றிரண்டு மாடல்கள் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    விவோ எக்ஸ்60 மாடல்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11, 6.56 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றன. 
    ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்ட புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. புது அப்டேட் பல்வேறு பிழைகளை கொண்டிருப்பதால் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மார்ச் மாத துவக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கியது. 

     ஒன்பிளஸ் நார்டு

    புது அப்டேட் ஏற்படுத்தும் பிழைகள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், பலர் செயலிகள் கிராஷ் ஆவதாக ஒன்பிளஸ் போரம்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவை முதல் ஒபன் பீட்டாவில் ஏற்படாமல், தற்போதைய ஆக்சிஜன் ஒஎஸ் 11 பதிப்பில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    பிழை ஏற்படுவதால், புது ஒஎஸ் வெளியீட்டை ஒன்பிளஸ் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. பிழைகள் சரி செய்யப்பட்டு விரைவில் புது அப்டேட் மிக விரைவில் வெளியிடுவதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் ரக பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இது பார்க்க பிக்சல் 4ஏ போன்றே காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 5ஏ மற்றும் பிக்சல் 6 மாடல்களில் சிறிய ஹோல்-பன்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 6 மாடலில் செல்பி கேமரா ஸ்மார்ட்போனின் நடுவில் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி பன்ச்-போல் முந்தைய மாடலை விட 10 பிக்சல் அளவு சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

     கூகுள் பிக்சல் 5

    பிக்சல் 5ஏ பன்ச் ஹோல் 55 பிக்சல் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற பிக்சல் போன்களில் இது 65 பிக்சலாக இருக்கிறது. முந்தைய தகவல்களில் பிக்சல் பட்ஸ் இயர்போன் ஏப்ரல் மாதத்திலும், புதிய பிக்சல் போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    தற்போது அந்த மாடல் பிக்சல் 5ஏ தான் என கூறப்படுகிறது. வெளியீடு தவிர புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் தற்சமயம் வெளியாகவில்லை.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 உற்பத்தி குறித்து புதிய தகவலை அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது.


    இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தி துவங்கி இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் விரைவில் இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தி துவங்கும் என தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக ஐபோன் 12 உற்பத்தியை இந்தியாவில் துவங்குவதில் பெருமை கொள்கிறோம் என ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. எனினும், எந்த நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறது என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     ஐபோன் 12

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் இயங்கி வரும் தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஆலையில், ஐபோன் 12 உற்பத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. எனினும், இதனை ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    சீனாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியை பெருமளவு குறைக்கும் நடவடிக்கைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வாஷிங்டன் மற்றும் பீஜிங் இடையிலான வர்த்தக போட்டியே இதற்கு முக்கிய காரணம் ஆகும். முன்னதாக பாக்ஸ்கான் நிறுவனம் ஐபேட் மற்றும் மேக்புக் உற்பத்தியை சீனாவில் இருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியானது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்குகிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.1 அப்டேட் வழங்க துவங்கி உள்ளது. முன்னதாக கேலக்ஸி எம்51, எஸ் சீரிஸ் மற்றும் நோட் சீரிஸ் மாடல்களுக்கு இதே அப்டேட் வங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

    புது அப்டேட் 1.93 ஜிபி அளவு M31FXXU2CUB1 எனும் பில்டு நம்பர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு அப்டேட் மட்டுமின்றி பிப்ரவரி 2021 மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது. பிளாக்ஷிப் மாடல்களை தொடர்ந்து கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களுக்கும் புது அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

    வரும் வாரங்களில் மீதம் இருக்கும் கேலக்ஸி எம் மற்றும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் புது அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எம்31எஸ் மாடலில் புது ஒஎஸ் அப்டேட் யுஐ, தோற்றம், கஸ்டமைசேஷன் என பல்வேறு மாற்றங்களை வழங்குகிறது. இத்துடன் பல்வேறு அம்சங்கள் முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தப்படுகிறது.  
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல் உற்பத்தியை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒட்டுமொத்த ஐபோன் 12 மினி உற்பத்தியை 20 சதவீதம் வரை குறைக்க ஆப்பிள் திட்டமிடுகிறது என கூறப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 7.5 கோடி ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படலாம். இதில் புதிய ஐபோன் 12 சீரிஸ் மற்றும் சில பழைய மாடல்களும் இடம்பெறுகிறது. முந்தைய கணிப்புகளின் படி 9.6 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்பட்டது. 

     ஐபோன் 12 மினி

    அமெரிக்காவில் புதிய ஐபோன் 12 சீரிஸ் முந்தைய ஐபோன் 11 சீரிசை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. ஐபோன் 12 மாடல் அதிக யூனிட்களும், ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவை கடந்த ஆண்டு ப்ரோ வேரியண்ட்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 

    2021 முதல் காலாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 11,140 கோடி டாலர்களை வருவாயாக ஈட்டி உள்ளது. ஐபோன் உற்பத்தியை குறைப்பதோடு, பபுதிய மேக்புக் மாடல்களின் உற்பத்தியை மே அல்லது ஜூன் மாத வாக்கில் துவங்க ஆப்பிள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    மோட்டோரோலா நிறுவனம் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை டீசர் மூலம் தெரிவித்துள்ளது. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போனின் ஹெட்போன் ஜாக், பவர் பட்டன், மோட்டோரோலா லோகோ மற்றும் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோரோலா ஜி100 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் டீசர்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     மோட்டோரோலா டீசர்

    ஒருவேளை ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் எஸ் மாடல் மோட்டோ ஜி சீரிசில் வெளியிடப்பட்டால், இதில் டூயல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 64 எம்பி குவாட் கேமரா சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதுய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமராக்கள், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்12

    சாம்சங் கேலக்ஸி எம்12 அம்சங்கள்:

    - 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர் 
    - மாலி-G52
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6,000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி +64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 ஆகும். இதன் விற்பனை மார்ச் 18 ஆம் தேதி துவங்குகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரோக் போன் 5 மாடலை அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 18 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 24 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

     அசுஸ் ரோக் போன் 5

    அசுஸ் ரோக் போன் 5 அம்சங்கள்:

    - 6.78 இன்ச் 2448x1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் 
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 16 ஜிபி (ரோக் போன் 5 ப்ரோ) LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி
    - 18 ஜிபி (ரோக் போன் 5 அல்டிமேட்) LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ 
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
    - 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.0
    - 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் ரோக் போன் 5 பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டாம் வைட், கிளாசி பேக் நிறங்களிலும், ரோக் போன் அல்டிமேட் லிமிடெட் எடிஷன் ஸ்டாம் வைட் மற்றும் மேட் பினிஷ் கொண்டுள்ளது. புதிய ரோக் போன் 5 8 ஜிபி+ 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரோக் போன் 5 ப்ரோ பேண்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 16 ஜிபி + 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 69,999 ஆகும். ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்டாம் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 18 ஜிபி + 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79,999 ஆகும். இது ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×