என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா நிறுவனம் விரைவில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட் மற்றும் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த மாத இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது எட்ஜ் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டை மோட்டோரோலா உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது.

     மோட்டோ எட்ஜ் 20 பியூஷன்

    தற்போதைய டீசர்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கின்றன. எட்ஜ் 20 பியூஷன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் 20 லைட் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். மற்றபடி எட்ஜ் 20 ஸ்மார்ட்போன், சர்வதேச சந்தையில் அறிமுகமான வேரியண்டே இங்கும் அறிமுகமாகும் என தெரிகிறது.



    அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்களில் 6.7 இன்ச் OLED பேனல், FHD+ 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்., எட்ஜ் 20 மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை பார்ப்போம்.
    அமேசான் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கும் பல்வேறு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சாம்சங், ரியல்மி, ரெட்மி என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது கூடுதல் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள அசத்தல் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்


    அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 19,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும்போது ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் மற்றும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஐகூ Z3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 16,740 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ரெட்மி நோட் 10எஸ்

    ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 18,990 விலையில் அறிமுகமாகி தற்போது ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம் பூமி பந்தை சுற்றி நிகழும் அற்புதங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என ரம்மியமான புகைப்படங்களால் அதன் சமூக வலைதள பக்கங்களை நாசா அலங்கரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டு உள்ளது.

     நாசா வெளியிட்ட படம்

    53 புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் நிலவின் புகைப்படத்திற்கு "false-colour mosaic" என நாசா பெயரிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் டிசம்பர் 7, 1992 ஆம் ஆண்டு நிலவின் வடக்கு பகுதிகளில் எடுக்கப்பட்டவை ஆகும். இவற்றை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது. 

    வியாழன் கிரகத்தை நோக்கிய பயணத்தின் போது இந்த புகைப்படங்களை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது. நிலவின் வண்ணமயமான புகைப்படங்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது. 

    பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்கள் அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கின்றன.


    பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஹெட்போன்களில் ஹை-பை ஆடியோ, லோ லேடன்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பிலிப்ஸ் SBH2515BK/10  மற்றும் TAT3225BK மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இரு மாடல்களும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பிலிப்ஸ் SBH2515BK/10 மாடலில் 110 மணி நேரத்திற்கும் அதிக பிளேடைம், யு.எஸ்.பி. சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கிறது.

     பிலிப்ஸ் TAT3225BK

    இந்த சார்ஜிங் கேஸ் ஹெட்போன் மட்டுமின்றி போனினையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் TAT3225BK 13 mm ஸ்பீக்கர் டிரைவர், ப்ளூடூத் 5.2, IPX4 தர சான்று பெற்று இருக்கிறது. இந்த ஹெட்போன் 110 மணி நேர பிளேடைம் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேசில் 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    பிலிப்ஸ் TAT3225BK மாடலில் ப்ளூடூத் 5.2, IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய பிலிப்ஸ் SBH2515BK/10  மற்றும் TAT3225BK மாடல்கள் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 9 வரை நடைபெற இருக்கிறது.


    இந்தியாவில் சியோமி நிறுவன சாதனங்கள் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. Mi Independence Sale பெயரில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    அந்த வகையில் எம்ஐ 11X மாடலை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி, எம்ஐ 11X ப்ரோ மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, எம்ஐ 10 மாடலுக்கு 1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர எம்ஐ 11 லைட் துவக்க விலை தற்போது ரூ. 20,499 என மாற்றப்பட்டு இருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11 லைட்

    எம்ஐ 11X பேஸ் வேரியண்ட் ரூ. 27,999, 8 ஜிபி வேரியண்ட் ரூ. 29,999, எம்ஐ 11X ப்ரோ மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரெட்மி டிவி சீரிஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி X 50இன்ச் மாடல் ரூ. 36,999 விலையிலும், 55 இன்ச் மாடல் ரூ. 43,999 விலையிலும், 65 இன்ச் மாடல் ரூ. 60,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    எம்ஐ டிவி 4X சீரிஸ் 50 இன்ச் மாடல் ரூ. 36,999, 55 இன்ச் மாடல் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எம்ஐ டிவி QLED 4K மாடல் ரூ. 58,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் தனது வரலாற்றில் முதல்முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் விற்பனை மாதாந்திர அடிப்படையில் 26 சதவீதம் வளர்ச்சி பெற்று இருந்தது. 

    மேலும் ஜூன் மாதத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாகவும் சியோமி இருந்தது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    2011 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் சியோமி இதுவரை சுமார் 80 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த தகவல்கள் தனியார் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.

    "சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்திக்க துவங்கியது முதல் சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க சியோமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹூவாய் மற்றும் ஹானர் பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற சந்தைகளில் சியோமி கூடுதல் கவனம் செலுத்த துவங்கியது." என தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வு பிரிவு இயக்குனர் தருன் பதாக் தெரிவித்தார்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் புதிய நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனினை - மார்னிங் மிஸ்ட், பைன் கிரீன் மற்றும் ஸ்டெல்லார் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    தற்போது ஒன்பிளஸ் 9 ப்ரோ வைட் நிற வேரியண்ட் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நிற வேரியண்டிற்கான டீசரை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புது வேரியண்டில் நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

     ஒன்பிளஸ் 9 ப்ரோ

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ LTPO AMOLED டிஸ்ப்ளே, 3216x1440 பிக்சல் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அடிரினோ 660 GPU வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 50 எம்பி சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ சென்சார், 2 எம்பி மோனோகுரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டைப் சி சார்ஜிங் போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30 ஸ்மார்ட்போன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டிருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் நார்சோ 30 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் அறிமுகமான நார்சோ 30 தற்போது 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 13,499 ஆகும்.

    புதிய மெமரி தவிர அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி நார்சோ 30 மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நார்சோ 30 பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 30 வாட் டார்ட் சார்ஜ்  வழங்கப்பட்டு இருக்கிறது.

     நார்சோ 30

    ரியல்மி நார்சோ 30 அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
    - 900MHz மாலி-G76 3EEMC4 GPU
    - 4 ஜிபி  / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5mm ஆடியோ ஜாக் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் புது சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    உலகம் முழுக்க சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை ரியல்மி பெற்று இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளரும் பிராண்டாக ரியல்மி இருந்தது.

     ரியல்மி

    2021 இரண்டாவது காலாண்டில் ரியல்மி நிறுவனம் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    "பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு ஆதரவளித்த ரியல்மியின் இளம் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களின் அடுத்த இலக்கு 2022 வாக்கில் மற்றொரு 10 கோடி யூனிட்களும், 2023 இறுதியில் மேலும் 10 கோடி யூனிட்களையும் விற்பனை செய்வது தான்," என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி தெரிவித்தார்.

    சவுண்ட்கோர் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, நீண்ட நேர பேட்டரி பேக்கப் அம்சங்களை கொண்டிருக்கிறது.


    ஆன்கர் நிறுவனத்தின் ஆடியோ சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் சவுண்ட்கோர் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. சவுண்ட்கோர் R100 என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் இன்ஸ்டன்ட் ஆட்டோ பேரிங், 25 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 10mm கிராபீன் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஹால்-சென்சார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹால்-சென்சார் தொழில்நுட்பம் சீரான கனெக்டிவிட்டி வழங்குகிறது. இயர்பட்ஸ் கேசை திறந்ததும் மூன்றே நொடிகளில் இயர்பட்ஸ் இணைப்பை சாத்தியப்படுத்துகிறது. 

    சவுண்ட்கோர் R100

    சவுண்ட்கோர் R100 மாடலில் IPX5 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. மேலும் இதன் சார்ஜிங் கேஸ் 25 மணி நேரத்தற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

    புதிய சவுண்ட்கோர் R100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 1799 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    போக்கோ பிராண்டின் சி சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைனில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.


    போக்கோ நிறுவனம் 20 லட்சத்திற்கும் அதிகமான சி3 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ஆன்லைனில் அதிகம் விற்பனையாகும் சி3 தொடர்ந்து பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என போக்கோ தெரிவித்து இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 மாடலில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ சி3

    இத்துடன் 5 எம்பி செல்பி கேமரா, டூ-டோன் டிசைன், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ஸ்பிலாஷ் ப்ரூப் P2i கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் போக்கோ சி3 (3 ஜிபி + 32 ஜிபி) விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஒப்போ நிறுவனம் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொழில்நுட்பம் புகைப்படங்களின் தரம் குறையாமல் அழகான செல்பிக்களை எடுக்க வழி செய்யும். முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பங்கள் புகைப்படங்களின் பிக்சல்களை குறைத்து வந்தன. 

    ஒப்போ செல்பி கேமரா sample | ஸ்கிரீன் தோற்றம்

    ஒப்போவின் புதிய தொழில்நுட்பம் சிறிய பிக்சல்களை பயன்படுத்தி 440 PPI தரத்தில் புகைப்படங்களை மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது. நாள்பட்ட பயன்பாட்டில் பயனர்களால் ஸ்கிரீனின் கீழ் உள்ள கேமரா பகுதியை பார்க்கவே முடியாது. இதனால் தலைசிறந்த அனுபவம் கிடைக்கும். டிஸ்ப்ளே பயன்பாட்டின் போதும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

    அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் நீண்ட காலமாக உருவாக்கி வருகிறது. முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் 2019 ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த தொழில்நுட்பம் இதுவரை ஒப்போ ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவில்லை. 
    ×