search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்கிறது.
    • குறைந்த விலை மேக்புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் M2 சிப்செட் குறைபாடு காரணமாக இந்த ஆண்டு மேக்புக் மாடல்களின் வினியோகம் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்து M2 பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

     

    இவ்வாறு செய்வதன் மூலம் மேக்புக் மாடல்கள் விற்பனை அதிகரிக்கலாம். ஒருவேளை இது பலனளிக்கவில்லை எனில், 2025 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ரிடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இதற்காகவே ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    குறைந்தவிலை மேக்புக் மாடல்களை கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஆண்டிற்கு 8 முதல் 10 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. குறைந்த விலை மேக்புக் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் சீரிஸ் மாடல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏர்பாட்ஸ் டிசைன், கேஸ் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்து ஆடியோ தரத்தை மேம்படுத்த திட்டமிடுவதாக ஆப்பிள் வல்லுனர் மார்க் குர்மேன் தெரிவித்துள்ளார்.

    இத்துடன் 2024 ஆண்டு ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற பெயரில் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுவதாகவும், 2025 ஆண்டு ஏர்பாட்ஸ் ப்ரோ வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புதிய ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் மேம்பட்ட ஆடியோ கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

     

    புதிய ஏர்பாட்ஸ் அறிமுகமாகும் போது, தற்போது விற்பனை செய்யப்படும் இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக இரண்டு நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல்கள் வெவ்வேறு விலை பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலில் யு.எஸ்.பி. சி வகை சார்ஜிங் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. 2025 ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரிடைசன் செய்யப்பட்டு அதிவேக சிப்செட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலா கான்செப்ட் போன் அறிமுகம்.
    • மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம்.

    மடிக்கக்கூடிய சாதனங்களின் விற்பனை மெல்ல வளர்ந்து வரும் நிலையில், மோட்டோரோலா இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் புதிய கான்செப்ட் போன் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற லெனோவோ டெக் வொர்ல்டு 2023 நிகழ்வில் மோட்டோரோலாவின் ஃபிளெக்சிபில் pOLED டிஸ்ப்ளே கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனில் FHD + pOLED ஸ்கிரீன் உள்ளது. இதனை பின்புறமாக மடித்து மணிக்கட்டில் வாட்ச் அல்லது ரிஸ்ட்பேண்ட் போன்று அணிந்து கொள்ளலாம். இந்த அதிநவீன அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட் பல்வேறு நிலைகளில் வைத்துக் கொள்ளலாம். அடாப்டிவ் டிஸ்ப்ளேவினை வழக்கமான ஆண்ட்ராய்டு போன் போன்றும் பயன்படுத்தலாம், அல்லது மணிக்கட்டில் அணிந்த படியும் பயன்படுத்தலாம்.

     

    மடிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் அளவில் முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. மடிக்கப்பட்ட நிலையில், இது 4.6 இன்ச் அளவில் மாறிவிடும். மடிக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை மோட்டோரோலா ரேசர் பிளஸ் மாடலின் கவர் ஸ்கிரீன் போன்று பயன்படுத்தலாம்.

    மோட்டோரோலாவின் புதிய வகை கான்செப்ட் போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக இந்த கான்செப்ட் போனிற்கான முன்னோட்டம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

    மோட்டோரோலா மட்டுமின்றி விவோ, டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் மற்றும் டி.சி.எல். போன்ற நிறுவனங்களும் புதிய வகை ரோலபில் டிஸ்ப்ளேவினை உருவாக்கி வருகின்றன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனம் "ஸ்கேரி ஃபாஸ்ட்" என்ற பெயரில் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி அக்டோபர் 31-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஆப்பிள் ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 24 இன்ச் அளவில் ஐமேக் மாடலையும், மேம்பட்ட மேக்புக் ப்ரோ சீரிஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு M1 சிப்செட் கொண்ட 24-இன்ச் ஐமேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் தற்போது பழையதாகி விட்டதால், புதிய ஐமேக் மாடலில் அதிநவீன M2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவன வழக்கப்படி இந்த நிகழ்வும் ஆப்பிள் வலைதளம், ஆப்பிள் டிவி செயலி உள்ளிட்டவைகளில் நேரலை செய்யப்பட இருக்கிறது.

    • பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
    • முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பிக்சல் 8 யூனிட்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    இம்மாத துவக்கத்தில் கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் கூகுள் நிறுவனத்தின் டென்சார் G3 சிப் மற்றும் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்படுகிறது. இத்துடன் இரட்டை பிரைமரி கேமரா சென்சார்கள் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 72 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகின்றன.

    பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஸ்மார்ட்போன் யூனிட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் புதிய நிறுவனமாக இணைய இருக்கிறது.

    இந்திய உற்பத்தி காரணமாக பிக்சல் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இது பற்றி தற்போதைக்கு எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும்.
    • புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் சப்போர்ட் செய்கிறது.

    ஐபேட் பயனர்களுக்கு அதிக விருப்பங்களை வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மற்றும் சற்றே குறைந்த விலை ஆப்பிள் பென்சில் (யு.எஸ்.பி. சி) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்டைலஸ்-இல் பிக்சல் பெர்ஃபெக்ட் அக்யூரசி, லோ லேடன்சி மற்றும் டில்ட் சென்சிடிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய ஆப்பிள் பென்சில் மாடலில் மிக மெல்லிய வடிவமைப்பு, மேட் ஃபினிஷ் மற்றும் மேக்னடிக் ஃபிளாட் சைட் உள்ளது. இதை கொண்டு பென்சிலை ஐபேட்-இன் பக்கவாட்டில் கச்சிதமாக வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள யு.எஸ்.பி. சி போர்ட் ஐபேட் உடன் இணைந்து கொண்டு யு.எஸ்.பி. சி கேபிள் மூலம் சார்ஜ் ஆகும்.

     

    பேட்டரியை சேமிக்கும் நோக்கில், இதனை ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும். இந்த மாடலில் பிரெஷர் சென்சிடிவிட்டி அம்சம் வழங்கப்படவில்லை. புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் முழுமையாக சப்போர்ட் செய்கிறது. இந்த மாடல் யு.எஸ்.பி. சி போர்ட் கொண்ட ஐபேட் மாடல்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் பென்சில் யு.எஸ்.பி. சி மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த மாத துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இந்த மாடலை ரூ. 6 ஆயிரத்து 900 விலையிலேயே வாங்கிட முடியும்.

    • குறைந்த விலை ஹெட்செட்-இல் விஷன் ப்ரோ மாடலின் விசேஷ அம்சம் நீக்கப்படலாம்.
    • ஐசைட் அம்சம் அணிந்திருப்பவருக்கு எந்த வகையிலும் பலன் அளிப்பதில்லை.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-இன் குறைந்த விலை மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஹெட்செட் விலை 1500-இல் துவங்கி அதிகபட்சம் 2500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தகைய குறைந்த விலையில், புதிய ஹெட்செட் உருவாக்கும் போது ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர் ரீதியில் சில அம்சங்களை வழங்காது என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய குறைந்த விலை ஹெட்செட்-இல் விஷன் ப்ரோ மாடலின் விசேஷமான ஐசைட் (EyeSight) எனும் அம்சம் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

     

    இந்த அம்சம் பயனர்கள் ஹெட்செட் அணிந்திருக்கும் போது, மற்றவர்களால் பயனரின் கண்களை பார்க்க செய்யும். ஐசைட் அம்சம் அணிந்திருப்பவருக்கு எந்த வகையிலும் பலன் அளிப்பதில்லை என்பதால், இதனை நீக்குவது சாதனத்தின் விலையை குறைக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.

    முன்னதாக வெளியான தகவல்களில் விஷன் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருந்த மேக் தர ஆப்பிள் சிலிகான் சிப்-க்கு மாற்றாக ஐபோன் சிப்செட் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. மேலும் பிரைமரி ஸ்கிரீனின் ரெசல்யூஷன் குறைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அமெரிக்க சந்தையில் ஆப்பிள் விஷன் ப்ரோ விலை 3 ஆயிரத்து 500 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஐடெல் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் 35 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • ஐடெல் இயர்பட்ஸ் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் - T1 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. மிக குறைந்த எடை, அழகிய தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஐடெல் T1 ப்ரோ இயர்பட்ஸ் 10mm டிரைவர்களை கொண்டிருக்கிறது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவம் மற்றும் மேம்பட்ட பேஸ் வழங்குகிறது.

    மேலும் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஏ.ஐ. மூலம் இயங்கும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி (ENC) வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் மூலம் ஆடியோ அனுபவத்தை எளிதில் கட்டுப்படுத்த முடியும். இத்துடன் ப்ளூடூத் 5.3 மூலம் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 30 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் கொண்டு இயர்பட்களை அதிகபட்சம் ஆறு முறை சார்ஜ் செய்ய முடியம். இத்துடன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ யு.எஸ்.பி. டைப்-சி மூலம் சார்ஜிங் செய்ய முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ஐடெல் T1 ப்ரோ இயர்பட்ஸ் விலை ரூ. 849 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் டீப் புளூ மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஐடெல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
    • ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்வு மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் பெயரில் ஓபன் என்ற வார்த்தை புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பை உணர்த்துவதோடு, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் கொண்டிருக்கும் விருப்பத்தை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     

    இதற்காக ஒன்பிளஸ் சூட்டி இருக்கும், "Open for Everything" என்ற வாக்கியத்தின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் முயற்சிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது.
    • ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் CAD ரெண்டர்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதமே அறிமுகமாகும் என்று கூறப்படும் நிலையில், ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிரஸ் ரெண்டர்கள் வெளியாகி உள்ளன.

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனரும் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

     

    இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: winfuture

    • சியோமி நிறுவனம் ஸ்மார்ட் பன்டில் பெயரில் சிறப்பு சலுகை வழங்குகிறது.
    • சிறப்பு சலுகை ப்ளிப்கார்ட், அமேசான் வலைதளங்களிலும் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய சந்தையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகையின் கீழ் ரூ. 33 ஆயிரத்து 696 மதிப்புள்ள சாதனங்களை வங்கி சலுகைகள் சேர்த்து ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிக் கொள்ள முடியும். சியோமி நிறுவனத்தின் நான்கு சாதனங்களை பயனர்கள் மிக குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

    சியோமி ஸ்மார்ட் டெக் பன்டிலில் வழங்கப்படும் சாதனங்கள்:

    ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் மிஸ்டிக் புளூ, மேட் பிளாக், சன்ரைஸ் கோல்டு மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன்

    ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் சார்கோல் பிளாக், பிளாட்டினம் கிரே

    ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் பேஸ் பிளாக், ஏர் வைட்

    10000 எம்.ஏ.ஹெச். எம்.ஐ. பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ பிளாக்

    சியோமி அறிவித்து இருக்கும் நான்கு சாதனங்களின் விலை ரூ. 33 ஆயிரத்து 696 ஆகும். ஆனால் குறுகிய காலத்திற்கு இவற்றை ரூ. 21 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் கார்டுகள், ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 250 உடனடி தள்ளுபடி பெற முடியும். அதன்படி பயனர்கள் இவற்றை ரூ. 19 ஆயிரம் பட்ஜெட்டிலேயே வாங்கிட முடியும்.

    ஸ்மார்ட் பன்டில் தவிர பயனர்கள் ரெட்மி நோட் 12 5ஜி மாடலை ரூ. 13 ஆயிரத்து 749 விலையில் வாங்கிட முடியும். சிறப்பு சலுகை வழங்கும் விற்பனை தற்போது Mi வலைதளம், அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

    • ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது.
    • கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படலாம்.

    சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிகபட்சம் 432MP கேமரா சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுவரை அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் அதிகபட்சம் 200MP கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் இரண்டு 432MP சென்சார்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை ISOCELL HW1 மற்றும் HW2 பிராண்டிங் கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் 1-இன்ச் சென்சார்கள் ஆகும். 108MP மற்றும் 200MP சென்சார்கள் வரிசையில், சாம்சங் செமிகண்டக்டர்ஸ் நிறுவனம் சற்றே அளவில் பெரிய சென்சார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டர் ரெவக்னஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் ISOCELL HW1 மற்றும் HW2 சென்சார்கள் இரண்டும் 432MP ரெசல்யூஷன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இவற்றில் 36:1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

    புதிய 432MP சென்சாரின் உற்பத்தி அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 2025 அல்லது 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    ×