என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் 15 மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும், இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஐரோப்பிய யூனியன் பிறப்பித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. டைப் சி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், ஐபோன் 14 மாடலில் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 35 வாட் பவர் அடாப்டரை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே பிரத்யேக அம்சமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: 9To5Mac
- விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது.
- இந்த இயர்பட்ஸ் கேமிங் மோடில் அதிகபட்சம் 40ms வரையிலான லோ-லேடன்சி மோட் வசதியை வழங்குகிறது.
விங்ஸ் லைஃப்ஸ்டைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்- ஃபுளோபட்ஸ் 100-ஐ அறிமுகம் செய்தது. புதிய மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபுளோபட்ஸ் 200 மாடலினை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3 மற்றும் AAC கோடெக் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபிடிலிட்டி டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகின்றன.

யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் கேமிங் மோடில் அதிகபட்சம் 40ms வரையிலான லோ-லேடன்சி மோட் வசதியை வழங்குகிறது.
புதிய விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ்: புளூ, பிளாக் மற்றும் வைட் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
- விவோ நிறுவனத்தின் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- விவோ V29e ஸ்மார்ட்போன் 50MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய விவோ V29e சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போனிற்கென அந்நிறுவனம் பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போனின் டிசைன் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் படங்கள் இடம்பெற்றுள்ளன. விவோ V29e ஸ்மார்ட்போனின் டீசர்களில் "தி மாஸ்டர்பீஸ்" (The Masterpiece) என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் மெல்லிய, குறைந்த எடை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் 50MP செல்ஃபி கேமரா, 64MP பிரைமரி கேமரா, OIS வசதிகள் வழங்கப்படுகின்றன. முதல் முறையாக விவோ ஸ்மார்ட்போனில் "வெட்டிங் போர்டிரெயிட்" அம்சம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய விவோ V29e ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி என இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 அல்லது ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. விவோ V29e மாடலை தொடர்ந்து விவோ நிறுவனம் விவோ V29 மற்றும் விவோ V29 ப்ரோ என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.
- ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- ஸ்மார்ட்போன்களுடன் புதிய ரியல்மி பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11x 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அசத்தல் டீசர்களை ரியல்மி வெளியிட்டு உள்ளது. அதன்படி ரியல்மி 11 5ஜி மாடல் பெரிய கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 67 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், ரியல்மி 11 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன், 108MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

பிரீமியம் டிசைன் ஒன்றை உருவாக்குவதற்காக தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி துறைக்கான முதலீட்டை இருமடங்கு அதிகப்படுத்தி இருப்பதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. புதிய டிசைன் குலோரி ஹாலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுலை சுற்றி கோல்டன் ரிங் வழங்கப்படுகிறது. இவை ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.
ரியல்மி 11x 5ஜி மாடலுக்கான டீசர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இதன் விலை ரியல்மி 11 5ஜி மாடலை விட குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ரியல்மி 11 5ஜி மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில், இரு சாதனங்களும் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படலாம்.
- ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது.
- ரெட்மி நோட் 13 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்களில் ஃபிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்.
ரெட்மி பிரான்டு சீன சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாத வாக்கில் சீன சந்தையில் அறமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய ரெட்மி நோட் 13 சீரிசில்- ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என குறைந்தபட்சம் மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் பற்றிய புது விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது.

கோப்புப் படம்
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிசில், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா, 4x ஜூம் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசைனை பொருத்தவரை ரெட்மி நோட் 13 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்கள் ஃபிளாட் டிஸ்ப்ளேவும், நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் வளைந்த எட்ஜ் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி GT 5 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- ரியல்மி மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனமும் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்.
ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 5200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 240 வாட் சார்ஜிங் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் 150 வாட் சார்ஜிங் வசதி மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதே ஸ்மார்ட்போனின் 240 வாட் சார்ஜிங் வசதி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி GT 5 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ரியல்மி மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனமும் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சொல்யுஷன் எனும் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக தெரிகிறது.
எனினும், இந்த ஸ்மர்ட்போனில் மிக குறைந்த திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் ரியல்மி GT நியோ 5 மாடலின் 150 வாட் சார்ஜிங் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரியல்மி GT 3 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டுள்ளது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட A58 ஸ்மார்ட்போன் 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது A58 ஸ்மார்ட்போனினை சத்தமின்றி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6.72 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் குளோயிங் சில்க் டிசைன் உள்ளது. ஒப்போ குளோவின் புதுமைமிக்க டிசைன் மூலம் இது சில்க்-சாடின் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ஒப்போ A58 அம்சங்கள்:
6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு சார்ந்த கலர் ஒஎஸ் 13.1
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP போர்டிரெயிட் கேமரா
8MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒப்போ A58 ஸ்மார்ட்போன் குளோயிங் பிளாக் மற்றும் டேஸ்லிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இத்துடன் ரூ. 1500 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி ரக்கட் டேப்லெட் மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
- ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலில் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
5ஜி கனெக்டிவிட்டி கொண்ட உலகின் முதல் ரக்கட் டேப்லெட்- ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி 32000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் 2 ஆயிரத்து 720 மணி நேரத்திற்கு ஸ்டான்ட்-பை வழங்கும்.
பிரீமியம் ரக்கட்ட டேப்லெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி வரையிலான ரேம் (12 ஜிபி ரேம், 12ஜிபி வரை நீட்டிக்கும் வசதி), மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர், MIL-STD-810H சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69K சான்று பெற்றுள்ளது.

இதில் வழங்கப்படும் 32000 எம்ஏஹெச் பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 20MP நைட் விஷன் சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலின் விலை 999.97 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 82 ஆயிரத்து 681 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி ப்ளிப்கார்ட், சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- இந்த டிவியில் ஸ்மார்ட் வொர்க், கேமிங் மற்றும் ஸ்மார்ட் வாட்சிங் மோட்கள் உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பிளாக்ஷிப் ஸ்மார்ட் அம்சங்களான மல்டி வாய்ஸ் அசிஸ்டன்ட், ஸ்லிம்பிட் கேம் கொண்ட வீடியோ காலிங், சோலார் ரிமோட் மற்றும் IoT லைட் சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த டிவி தரமான பிக்சர் மற்றும் சவுன்ட் அனுபவத்தை வழங்கும் பர்கலர் மற்றும் க்ரிஸ்டல் பிராசஸர் 4K உள்ளது. பர்கலர் அம்சம் ஒரு பில்லியன் ட்ரூ கலர், க்ரிஸ்டல் பிராசஸர் 4K,குறைந்த ரெசல்யூஷன் கொண்ட தரவுகளை 4K தரத்துக்கு மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள HDR கான்டிராஸ்ட்-ஐ மேம்படுத்தி, பயனர்கள் அதிக நிறங்கள் மற்றும் தெளிவான விஷூவலை பார்க்க செய்கிறது.

மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 3D சரவுன்ட் சவுன்ட், இரண்டு விர்ச்சுவல் ஸ்பீக்கர்கள், அடாப்டிவ் சவுன்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த டிவியில் பில்ட்-இன் IoT ஹப் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் டிவியின் பிரைட்னசை தானாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் ஆட்டோ லோ லேடன்சி மோட், மோஷன் எக்செல்லரேட்டர் அம்சங்கள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் வொர்க், கேமிங் மற்றும் ஸ்மார்ட் வாட்சிங் மோட்கள் உள்ளன. இந்த டிவியுடன் வழங்கப்படும் சோலார் ரிமோட்-ஐ அறையில் உள்ள மின்விளக்கு மற்றும் வைபை ரவுட்டர்களை கொண்டே சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 43 இன்ச் மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 490
சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 55 இன்ச் மாடல் விலை ரூ. 46 ஆயிரத்து 990
சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி 65 இன்ச் மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 990
புதிய சாம்சங் க்ரிஸ்டல் விஷன் 4K UHD டிவி ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவி-க்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.
- நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் வசதி 10 நிமிட சார்ஜில் 180 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்குகிறது.
நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஸ் VS104 மேக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் மாடல் அதிகபட்சம் 25db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.
இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, குவாட் மைக் ENC உள்ளிட்டவைகளின் மூலம் சிறப்பான காலிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இன்ஸ்டாசார்ஜ் வசதி மூலம் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பிளேபேக் பெற முடியும்.

நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் அம்சங்கள்:
எர்கோனோமிக் டிசைன்
13 மில்லிமீட்டர் டிரைவர்கள்
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி
SBC, AAC கோடெக் சப்போர்ட்
டச் கன்ட்ரோல்
குவாட் மைக் மற்றும் ENC
25db வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
டிரான்ஸ்பேரன்சி மோட்
45 மணி நேரத்திற்கு பிளேபேக்
ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி
இன்ஸ்டா சார்ஜ் - 10 சார்ஜில் 180 நிமிடங்களுக்கு பிளேடைம்
50ms வரை லோ லேடன்சி
ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்
IPX5 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் இயர்பட்ஸ் மாடலை அமேசான் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் அறிமுக சலுகையாக ரூ. 1699 விலையில் வாங்கிட முடியும். இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- ரியல்மி நிறுவனத்தின் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- சமீபத்தில் ரியல்மி 11 5ஜி மாடல் தாய்வான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்னும் பத்து நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் தாய்வான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இதன் அம்சங்கள், டிசைன் மற்றும் இதர விவரங்கள் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவம் கொண்ட பெரிய கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மற்ற ரியல்மி 11 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.

ரியல்மி 11 5ஜி அம்சங்கள்:
6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
16MP செல்பி கேமரா
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் புதிய ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- மிவி நிறுவனம் கடந்த மாதம் டுயோபாட்ஸ் K6 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.
- புதிய டுயோபாட்ஸ் D3 மாடலில் 13mm சக்திவாய்ந்த டிரைவர்கள் உள்ளன.
மிவி நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் டுயோபாட்ஸ் D3 என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் டுயோபாட்ஸ் k6 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய டுயோபாட்ஸ் D3 மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய மிவி டுயோபாட்ஸ் D3 மாடலில் "ஸ்டேரி நைட் எபெக்ட்" வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ் தோற்றத்தை அழகாக காட்சியளிக்க செய்கிறது. இதில் உள்ள 13mm சக்திவாய்ந்த டிரைவர்கள், தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த இயர்பட்ஸ்-இல் டூயல் மைக் ஏ.ஐ., என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் உள்ளன.

மிவி டுயோபாட்ஸ் D3 அம்சங்கள்:
13mm டிரைவர்கள்
டூயல் மைக் AI-ENC சிப்
AI என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
50ms அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட்
ப்ளூடூத் 5.3
AAC, SBC கோடெக் சப்போர்ட்
380 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்), 40 எம்ஏஹெச் x2 பேட்டரி (இயர்பட்ஸ்)
50 மணி நேரத்திற்கு பிளேபேக்
ஸ்விப்ட் சார்ஜ் தொழில்நுட்பம்
10 நிமிட சார்ஜில் 500 நிமிடங்கள் பயன்படுத்தலாம்
IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மிவி டுயோபாட்ஸ் D3 மாடல் ஆர்க்டிக் புளூ, கோபால்ட் பிளாக், ஹசெல் கிரீன் மற்றும் லைம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது. விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாளை (ஆகஸ்ட் 3) மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.






