என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இன்று மதியம் 12 மணி அளவில் நடிகர் மிலிந்த் சோமன் இந்த போனை அறிமுகம் செய்ய உள்ளார்.
    ஆசுஸ் நிறுவனம் தனது 'ஆசுஸ் 8z' ஸ்மார்ட்போன இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. 

    ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, ஸ்னாப்டிராகன் 888 SoC தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் என 2 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆசுஸ் 8z

    இது தவிர 4000mAh பேட்டரி, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. 

    8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மதியம் 12 மணி அளவில் நடிகர் மிலிந்த் சோமன் இந்த போனை அறிமுகம் செய்ய உள்ளார். இதன் அறிமுகம் நிகழ்ச்சியை ஆசுஸ் யூடியூப் சேனலில் காணலாம்.
    இந்த பிக்சல் 7 சீரிஸ் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிக்சல் 6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகாத நிலையில் 7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    பிக்சல் 7 சீரிஸில் பிக்சல் 7, பிக்சல் 7ஏ, பிக்சல் 7 ப்ரோ என 3 ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளது.

    இந்த புதிய போன்களில் புதிய டென்சார் சிப்பில் இயக்கும் என்றும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் பிக்சல் 7 போன் பிக்சல் 6-ஐ விட குறைந்த அளவில் இருக்கும். கூகுள் பிக்சல் 7 ப்ரோவை பொறுத்தவரை 6.7 அல்லது 6.8 இன்ச் டிஸ்பிளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் இடம்பெறவுள்ளது.

    இந்த பிக்சல் 7 சீரிஸை அக்டோபரில் அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
    இந்த ஐபோன் எஸ்.இ 2022 ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் எஸ்.இ 2022-ஐ வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஐபோனின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    இதன்படி இந்த போனின் விலை அமெரிக்காவில் 300 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.22,500-ஆக வருகிறது.

    இந்நிலையில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் அதன் விலை ரூ.25,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஐபோன் எஸ்இ 2022 A15 Bionic SoC பிராசஸரை கொண்டுள்ளது. இதே பிராசஸர் தான் ஐபோன் 13 சீரிஸிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போன் ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங்கின் இந்த சேவைக்காகவே அதன் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்களுக்கு 70,000 முன்பதிவுகள் வந்துள்ளன.
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து மென்பொருள் அப்டேட் கொடுப்பதில் பிற நிறுவனங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் 6 போன்களுக்கு அடுத்த மாதத்திற்கான செக்யூரிட்டி ஆப்டேட் அனுப்புவதற்கு முன்னரே, சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்களுக்கு மார்ச் மாதத்திற்கான செக்யூரிட்டி அப்டேட்டை இந்த மாதம் முடிவதற்கு முன்னரே அனுப்பிவிட்டது.

    தற்போது சாம்சங் நிறுவனம் மட்டுமே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களில் 4 வருடங்களுக்கு ஓ.எஸ் அப்டேட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 3 வருடங்களுக்கு ஓ.எஸ் அப்டேட்டை வழங்குகிறது.

    பிற நிறுவனங்கள் 2 வருட ஓ.எஸ் அப்டேட் மட்டுமே வழங்குகின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு 6 வருட மென்பொருள் அப்டேட்டை வழங்கி வந்தாலும், ஆண்ட்ராய்டு போன்களில் சாம்சங் மட்டுமே அதிகபட்ச மென்பொருள் அப்டேட்டை வழங்கி வருகிறது.

    சாம்சங் எஸ்22 சீரிஸ்

    தற்போது சாம்சங்கின் 4 வருட ஓ.எஸ் அப்டேட் திட்டம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ், கேலக்ஸி Z ஃபோல்ட் 3, கேலக்ஸி Z Flip 3 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த திட்டம் பிற போன்களுக்கும் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங்கின் இந்த திட்டத்திற்காகவே இந்தியாவில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போனுக்கு 70,000 முன்பதிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்22 சீரிஸ் போன்கள் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அமையவுள்ளன.
    இந்த போனில் புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

    இந்த போனில் Unisoc T606 octa-core chipset வழங்கப்பட்டுள்ளது. மேலும்  6.5-inch HD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ.கோர் 3.1 ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கேமராவை பொறுத்தவரை இரண்டு பின்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் டெப்த் சென்சார் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவுடன், புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ03

    இதில் உள்ள ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள் கேமரா செல்ஃபிக்கள் எடுக்கும்போது தானாக வைட் ஆங்கிளுக்கு மாறும் தன்மையை கொண்டுள்ளது.

    இந்த போனில் 5000mAh பேட்டரி தரப்பட்டுள்ளது.

    இந்த போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,499-ஆகவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கடந்த வாரம் இந்த போன்கள் குறித்த டீசர் வெளியான நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசர் வெளியிட்டது.

    இந்நிலையில் தற்போது இந்த இருபோன்களும் மார்ச் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த போன்களில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 108 மெகாபிக்ஸல் மெயின் கேமரா ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி நோட் ப்ரோ+ 5ஜி

    மேலே கூறிய அம்சங்கள் ரெட்மி நோட் 11 ப்ரோ குளோபல் மாடலில் இடம்பெற்றிருந்தன. இதனால் அந்த போனில் உள்ள அம்சங்கள் சிறிய வேறுபாடுகளுடன் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி நோட் 11 ப்ரோ, நோட் 11 ப்ரோ+ 5ஜி-ல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த இரு போன்களும் ஹசெல்பிளாட் நிறுவன மென்பொருள் ஆப்டிமைசேஷன், மரிசிலிக்கான் எக்ஸ் சிப் ஆகியவற்றை பெற்றுள்ளன.
    ஒப்போ நிறுவனம் ஃபைன்ட் எக்ஸ்5 மற்றும் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 

    இதன்படி ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்5 போனில் 6.55-inch OLED டிஸ்பிளே, ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன், 120Hz ரெஃபிரேஷ்ஷுடன் இடம்பெற்றுள்ளது. இதன்புறம் மேட் கிளாஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போனில்  Snapdragon 888 chipset, கலர் ஓ.எஸ் 12.1-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி f/1.8 lens, optical image stabilisation கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா,  f/2.2 அப்பரச்சர், Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் டெலி போட்டோ சென்சார் ஆகிவை வழங்கப்பட்டுள்ளன.

    இதில் உள்ள 6nm neural processing unit (NPU) மற்றும் image signal processor (ISP) ஆகியவற்றை இணைத்த MariSilicon X chip மற்றும் multi-tier memory architecture இதன் புகைப்பட தரத்தை மேம்படுத்துகிறது.

    மேலும் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு Sony IMX615 32 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    4,800mAh டூயல் செல் பேட்டரி, 80W SuperVOOC வேகமான ஒயர்ட் சார்ஜிங், 30W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளன.

    இந்த போனின் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.84,500-ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒப்போ ஃபைன்ட் எக்ஸ் 5 மற்றும் எக்ஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

    ஒப்போ ஃபைன்ட் எக்ஸ் 5 ப்ரோ போனில் 6.70-inch 10-bit QHD+ (1,440x3,216 pixels) AMOLED டிஸ்பிளே, குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide (LTPO) தொழில்நுட்பம், 120Hz adaptive ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த போன் HDR10+ சப்போர்ட்டையும் பெற்றுள்ளது.

    இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி f/1.7 lens, optical image stabilisation கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா,  f/2.2 அப்பரச்சர், Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் S5K3M5 சென்சார், f/2.4 அப்பார்ச்சர் கொண்ட டெலி போட்டோ சென்சார் ஆகிவை வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரைமரி சென்சாரில் 5 ஆக்ஸிஸ் ஓ.ஐ.எஸ் மற்றும் 13 சேனல் ஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    எக்ஸ்5 போன் போலவே இதிலும் புகைப்படத்தை மேம்படுத்தும் மரிசிலிக்கான் எக்ஸ் சிப் தரப்பட்டுள்ளது.

    இந்த போனில் f/2.4 லென்ஸ், 32 மெகாபிக்ஸல் Sony IMX709 செல்ஃபி சென்சார் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த போனில் யூடியூப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஏர் கெஸ்டர் என்ற அம்சமும் தரப்பட்டுள்ளது.

    இந்த போனிலும் 5000mAh டூயல் செல் பேட்டரி, 80W SuperVOOC, 50W AirVOOC, and 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,09,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    மேற்கூறிய இரண்டு போன்களும் ஹசெல்பிளாட் நிறுவன மென்பொருள் ஆப்டிமைசேசனை பெற்றுள்ளன.

    இந்தியாவில் இந்த போன்கள் அறிமுகமாகும் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
    இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோவுடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த போன் MediaTek Helio G96 chipset பிராசஸரை கொண்டுள்ளது.  கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    நார்சோ 50 ஸ்மார்ட்போன்

    ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.ஸில் இயங்கும் இந்த போனில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    இந்த போனின் 4 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம்.
    சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிக விலை போன்களையே அறிமுகம் செய்து வந்த நிலையில் தற்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

    இதன்படி கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் வசதியுடன் தரப்பட்டுள்ளது.

    மேலும் இந்த போனில் UNISOC T606 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாகவும், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை 48 எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு பின்புற கேமராக்கள் தரப்படவுள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டுகளில் வருகிறது.

    மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி தரப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.11,999-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐபோன் 12 மினி போன் வாங்குபவர்களுக்கு டிஸ்கவரி+ சந்தாவில் 25 சதவீதம் தள்ளுபடியும், ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், ரூ.201 மதிப்புள்ள பிட்காயினும் வழங்கப்படும்.
    ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 12 மினி (64ஜிபி ஸ்டோரேஜ்) போனுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ.59,900-க்கு விற்கப்பட்டு வரும் ஐபோன் 12 மினி இன்று ரூ.18,601 விலை குறைக்கப்பட்டு ரூ.41,299-க்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.15,500 வரை தள்ளுபடி பெற்று ரூ.25,799-க்கு ஐபோன் மினியை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஐபோன் 12 மினி போனின் 128 ஜிபி வேரியண்ட் ரூ.9901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.54,999-ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் ரூ.9901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.64,999-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் மினி 12

    இது தவிர இந்த போனை யூபிஐ பரிவர்த்தனையில் வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். விசா கிரெடிட் கார்டுகள், யெஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள், ஐ.டி.எஃப்.சி கிரெடிட் கார்டுகளுக்கு வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.

    இது தவிர ஐபோன் 12 மினி போன் வாங்குபவர்களுக்கு டிஸ்கவரி+ சந்தாவில் 25 சதவீதம் தள்ளுபடியும், ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், ரூ.201 மதிப்புள்ள பிட்காயினும் வழங்கப்படும்.
    இந்த போனின் அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு மோட்டோ யூடியூப் சேனலிலில் ஒளிபரப்பப்படும்.
    மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    இந்த போனில் 6.7-inch FHD+ AMOLED டிஸ்பிளே 144Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸருடன், 8 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128 ஜிபி யூ.எஃப்.எஸ் 3.1 மெமரியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போனில் பின்பக்கம் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. 50 மெகா பிக்ஸல் OmniVision OV50A40 பிரைமரி சென்சார், 50 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், செஃல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 60 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5000 mAh பேட்டரி, 68W அதிவேக சார்ஜிங், வைஃபை 6இ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்பட்டிருக்கும் இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.50,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த போனின் அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு மோட்டோ யூடியூப் சேனலிலில் ஒளிபரப்பப்படும்.
    ஐபோன் 13 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டாலும், ஐபோன் 13 மினிக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு இந்தியாவில் இன்று விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு அமேசான் தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13-ன் பேஸ் மாடல் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.5000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று ஐபோன் 13-ன் 256 ஜிபி வேரியண்டின் விலையும் ரூ. 89,900-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.84,900-க்கும், 512 ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,09,900-ல் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.1,04,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஐபோன் 13 போன்

    இது தவிர ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி ஐபோனை வாங்குபவர்களுக்கு ரூ.6,000 உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

    ஐபோன் 13 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டாலும், ஐபோன் 13 மினிக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை. மேலும் இந்த விலை குறைப்பு எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
    ×