என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

    ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்து இருந்தது. அறிமுகம் செய்யப்படும் போதே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் ரியல்மி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுவதும், பின்புறத்தில் ரேசிங் கொடி இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது.


    ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் ரியல்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. மேலும் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரிப்ரெஷ் ரேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    ரியல்மி GT நியோ 3T சர்வதேச வேரியண்ட் அம்சங்கள்:

    ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 GPU மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து விட்டது.
    • மேலும் புது ஐபோன்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இரு மாடல்களிலும் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன் 12 சீரிசில் அறிமுகம் செய்யப்பட்ட செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 12MP பிரைமரி கேமரா, முன்புறம் புதிய ட்ரூ டெப்த் கேமரா, அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஐபோனின் ஒவ்வொரு கேமரா லென்சிலும் அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே போன்று வீடியோ சீராக காட்சியளிக்க செய்யும் வகையில் புதிதாக ஆக்‌ஷன் மோட் வழங்கப்பட்டு உள்ளது.


    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்:

    6.1 இன்ச் 2532x1170 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே - ஐபோன் 14

    6.7 இன்ச் 2778x1284 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே - ஐபோன் 14 பிளஸ்

    6-கோர் ஏ15 பயோனிக் பிராசஸர்

    128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்

    ஐஒஎஸ் 16

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

    டூயல் சிம்

    12MP வைடு ஆங்கில் கேமரா

    12MP அல்ட்ரா வைடு இரண்டாவது கேமரா

    12MP செல்பி கேமரா

    முக அங்கீகார வசதி வழங்க ட்ரூ டெப்த் கேமரா

    5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    லித்தியம் அயன் பேட்டரி

    பாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் மிட்நைட், பர்பில், ஸ்டார்லைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஐபோன் 14 (128 ஜிபி) ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜிபி) ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜிபி) ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜிபி) ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    புதிய ஐபோன் 14 சீரிஸ் இந்திய முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐபோன் 14 விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதியும் ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி C33 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக ரியல்மி C31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய C33 மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 5MP செல்பி கேமரா, யுனிசாக் டி612 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ எஸ் எடிஷன் ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 0.3MP (VGA) டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 8.3 மில்லிமீட்டர் மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி C33 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.


    ரியல்மி C33 அம்சங்கள்:

    6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்

    யுனிசாக் டி612 பிராசஸர்

    மாலி G57 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ எஸ் எடிஷன்

    50MP பிரைமரி கேமரா

    0.3MP (VGA) டெப்த் கேமரா

    5MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    ரியல்மி C33 ஸ்மார்ட்போன் அக்வா புளூ, நைட் சீ மற்றும் சேண்டி கோல்டு என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி C33 ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 12 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.

    • சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 11 பிரைம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
    • புதிய ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல்களின் விலை பட்ஜெட் பிரிவில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி A1 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை குறி வைத்து புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

    ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல்கள் பெயருக்கு ஏற்றார்போல் 4ஜி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைக்கின்றன. ரெட்மி 11 பிரைம் மாடலின் அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ M5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இரு மாடல்களும் தோற்றத்தில் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் சீன சந்தையில் கிடைக்கும் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.


    சிறப்பம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டியு-டிராப் நாட்ச், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 4ஜி மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி 11 பிரைம் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 பிராசஸர், ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் LPDDR4x ரேம், UFS2.2 மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி 11 பிரைம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 999

    ரெட்மி 11 பிரைம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 999

    ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 13 ஆயிரத்து 999

    ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15 ஆயிரத்து 999

    புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக், க்ரோம் சில்வர் மற்றும் மீடோ கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் பெப்பி பர்பில், பிலாஷி பிளாக் மற்றும் பிளேஃபுல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. ரெட்மி 11 பிரைம் விற்பனை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

    • போக்கோ நிறுவனத்தின் புதிய M5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6ஜிபி ரேம், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    போக்கோ நிறுவனம் புதிய போக்கோ M5 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5ஜி, ஆண்ட்ராய்டு 12, MIUI 13, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய போக்கோ M5 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனுடன் 22.5 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.


    போக்கோ M5 அம்சங்கள்:

    6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD, அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    Arm மாலி G57, MC2

    4 ஜிபி, 6ஜிபி LPDDR4x ரேம்

    64 ஜிபி, 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 11 MIUI

    50MP பிரைமரி, f/1.8, எல்இடி பிளாஷ்

    2MP டெப்த் கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    8MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    போக்கோ M5 ஸ்மார்ட்போன் ஐசி புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ் செப்டம்பர் 13 ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.

    அறிமுக சலுகையாக போக்கோ M5 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி, கூடுதலாக ரூ. 500 மதிப்புள்ள சூப்பர் காயின், முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, முதல் நாள் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு இலவச ஸ்கிரீன் ப்ரோடெக்‌ஷன் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
    • புது ஐபோன் 14 ப்ரோ மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக முன்புற டிஸ்ப்ளேவில் மாத்திரை வடிவ கட்-அவுட் வழங்கப்படுகிறது. இதில் செல்பி கேமரா மற்றும் பேஸ் ஐடி பொருத்தப்படுகிறது. இதே டிசைனை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான ரெண்டர் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்த நிலையில் புது ஐபோனில் உள்ள இரு பன்ச் ஹோல்கள் இடையில் உள்ள இடைவெளியை பயனர்கள் எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பதை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில் ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள மாத்திரை வடிவ கட்-அவுட் செல்பி கேமராவுடன் இணைந்து ஒற்றை கட்-அவுட் போன்று மாறுகிறது. இது மென்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.


    நாட்ச் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆப்பிள் தனது பயனர்களுக்கு பிரைவசி நோட்டிபிகேஷன்களை வழங்க முடியும் என்பதால் இந்த அம்சம் பயனுள்ளதாகவே தெரிகிறது. தற்போதைய வீடியோவில் இருப்பது உண்மையில் ஐபோன் 14 ப்ரோ தானா அல்லது ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டுக்கு பின் வெளியாகும் மாக் ஐபோன் மாடலா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வீடியோவில் உள்ள யுஐ வழக்கமான ஐஒஎஸ்-ஐ விட வித்தியாசமாகவே இருக்கிறது.

    செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் "பார் அவுட்" நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ்/மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது ஐபோன் சீரிஸ் மூலம் ஆப்பிள் தனது மினி சீரிஸ் மாடல்களை நிறுத்துகிறது. இதுதவிர புது ஐபோன் சீரிசின் ப்ரோ மற்றும் ப்ரோ அல்லாத மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட இருக்கிறது.

    ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மேம்பட்ட ஏ16 பயோனிக் பிராசஸர்கள் வழங்கப்பட உள்ளன. ஐபோன் 14 மாடலில் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ப்ரோ மாடல்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    Image Credit: 9to5Mac

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 சீரிஸ் முன்பதிவு துவங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்கள் முன்பதிவில் புது மைல்கல் எட்டியுள்ளன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவை கடந்த மாதம் இந்தியாவில் துவங்கியது. இன்று புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்களை வாங்க இதுவரை பலர் முன்பதிவு செய்து வருவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    செப்டம்பர் 1 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது. இத்தனை யூனிட்கள் முன்பதிவாகி இருக்கும் நிலையில், இந்தியாவில் பிரபலமான போல்டபில் சாதனங்களாக கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 உள்ளன.


    இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 விலை ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலை வாங்க முன்பதிவு செய்வோருக்கு ரூ. 34 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 46 மில்லிமீட்டர் ப்ளூடூத் வெர்ஷனை ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 வாங்குவோர் ரூ. 31 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 42 மில்லிமீட்டர் ப்ளூடூத் மாடலை ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் அல்ல்து டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது கேலக்ஸி Z போல்டு 4 மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் அப்கிரேடு போனஸ் பெறலாம். இதே சலுகையில் கேலக்ஸி Z ப்ளிப் 4 வாங்கும் போது ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய A57e ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. முன்னதாக ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒப்போ A57e மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    இதில் 6.56 இன்ச் HD+IPS LCD பேனல், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP மோனோக்ரோம் கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டச்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1 கொண்டிருக்கிறது.


    ஒப்போ A57e அம்சங்கள்:

    6.56 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1

    13MP பிரைமரி கேமரா

    2MP மோனோக்ரோம் கேமரா

    8MP செல்பி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஒப்போ A57e ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • 90Hz டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி A சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி A04s ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி A03s ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் ஆக்டா கோர் பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.


    சாம்சங் கேலக்ஸி A04s அம்சங்கள்:

    6.5 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD 90Hz டிஸ்ப்ளே

    எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்

    மாலி G52

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ கோர் 4.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    5MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய சாம்சங் கேலக்ஸி A04s ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன், வைட் மற்றும் ஆரஞ்சு காப்பர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மொபைல் போன் தோற்றம் முந்தைய நோக்கியா ப்ளிப் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2660 ப்ளிப் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக கடந்த மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பீச்சர் போன் மைக் மற்றும் இயர்பீசை உங்கள் அருகில் கொண்டு வந்து, பயன்படுத்துவதை எளிமையாக்குகிறது.

    இதே மாத துவக்கத்தில் நோக்கியா 8210 4ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் உள்ள எமர்ஜன்சி பட்டன் மூலம் விரும்புபவரை மிக எளிதில் தொடர்பு கொள்ள முடியும். ஏதேனும் அவசர சூழலில் அதிகபட்சம் ஐந்து காண்டாக்ட்களுக்கு இது பற்றிய தகவல் அனுப்பப்பட்டு விடும். இந்த போனில் ஹியரிங் ஏய்ட் கம்பேடிபிலிட்டி உள்ளது.


    நோக்கியா 2660 ப்ளிப் அம்சங்கள்:

    2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

    1.77 இன்ச் 160x128 பிக்சல் QVGA இரண்டாவது டிஸ்ப்ளே

    அதிகபட்சம் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி107 சிங்கில் கோர் பிராசஸர்

    48MB ரேம்

    128MB மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    எஸ்30 பிளஸ் ஒஎஸ்

    விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்

    4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி 2.0

    1450 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 2660 ப்ளிப் போன் பிளாக், ரெட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனின் விற்பனை நோக்கியா இந்தியா ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோரில் நடைபெறுகிறது.

    • இந்திய சந்தையில் புது ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • எனினும், இது பற்றி ரெட்மி தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அடுத்த வாரமே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இதே ஸ்மார்ட்போன் ரெட்மி 10 5ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.


    இந்தியாவில் புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் 6.58 இன்ச் IPS LCD 1080x2048 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த MIUI 13 கொண்டிருக்கும். இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புது Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • முன்னதாக இதே ஸ்மார்ட்போன் மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விவோ நிறுவனம் Y35 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ 90Hz LCD ஸ்கிரீன், 16MP செல்பி கேமரா, வி வடிவ நாட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 4ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெசத் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 70 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 34 நிமிடங்களே ஆகும்.


    விவோ Y35 அம்சங்கள்:

    6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+90Hz LCD ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP மேக்ரோ கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    விவோ Y35 ஸ்மார்ட்போன் அகேட் பிளாக் மற்றும் டான் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விவோ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம். இத்துடன் ரூ. 750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ×