search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஹீலோ ஜி99 பிராசஸருடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    ஹீலோ ஜி99 பிராசஸருடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய மோட்டோ G72 வெளியீடு மோட்டோரோலா ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில் மோட்டோ G72 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+pOLED 10 பிட் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G72 ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களைம், ஒரு ஆண்டுக்கு ஒஎஸ் அப்டேட்டையும் பெறும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G72 ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    மோட்டோ G72 அம்சங்கள்:

    6.55 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+pOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    Arm மாலி G57 MC2 GPU

    6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 12

    108MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் டர்போ சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ G72 ஸ்மார்ட்போன் மெடியோரைட் பிளாக் மற்றும் போலார் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

    Next Story
    ×