search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பிக்சல் 7 சீரிஸ் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்
    X

    பிக்சல் 7 சீரிஸ் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்

    • கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
    • இந்தியாவில் இரு பிக்சல் ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    கூகுள் நிறுவனம் கடந்த ஜூலை மாத வாக்கில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், பிக்சல் 5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யவில்லை. இதே போன்று பிக்சல் 4a மாடலை மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்த கூகுள், பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4XL போன்ற மாடல்களை ரேடார் கண்ட்ரோல் வழங்கியதால் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை.

    தற்போது பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    இரு பிக்சல் போன்களும் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது மட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது ரூ. 27 ஆயிரத்து 699 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×