என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் புது வேரியண்டை அறிமுகம் செய்தது.
    • இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ, டெப்த் சென்சார்களை கொண்டிருக்கிறது.

    விவோ நிறுவனம் முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் T1 5ஜி ஸ்மார்ட்போனினை சில்கி வைட் எனும் நிறத்தில் அறிமுகம் செய்oது இருக்கிறது. வரும் வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 23) துவங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விவோ நிறுவனம் தனது T1 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

    விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் 6.58 இன்ச், 120Hz FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ மற்றும் டெப்த் கேமரா, 16MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பண்டச் ஒஎஸ் 12, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.


    முன்னதாக விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் ரெயின்போ ஃபேண்டசி மற்றும் ஸ்டார்லைட் பிளாக் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ T1 5ஜி அனைத்து நிறங்களிலும் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ T1 5ஜி அம்சங்கள்:

    6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் சில்கி வைட் நிற வேரியண்ட் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோர் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 990 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனைக்கு வர உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் பிரைம் புளூ எடிஷன் வெளியீட்டை கடந்த வாரம் உறுதிப்படுத்தி இருந்தது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஒன்பிளஸ் 10R மாடல் சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒன்பிளஸ் தனது ட்விட்டர் தளத்தில் ஒன்பிளஸ் 10R பிரைம் புளு எடிஷன் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளது.

    அதன்படி இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலின் போது இந்த மாடல் விற்பனைக்கு வருகிறது. அமேசான் மட்டுமின்றி ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.


    இந்தியாவில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4800 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட வேரியண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 150 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 ஆகும்.

    ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட வெர்ஷன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு வெர்ஷன்களிலும் 80 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 38 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 42 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பிரைம் புளூ எடிஷன் ஒன்பிளஸ் 10R அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 12, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • தற்போது பொது மக்கள் கோரிக்கையை ஏற்று மோட்டோரோலா அசத்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    அசத்தல் வடிவமைப்பு, கேமரா மற்றும் அம்சங்கள் என மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பல்வேறு பிரிவுகளில் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், இதன் ஸ்டோரேஜ் விவரங்களில் மோட்டோரோலா பலரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக ஸ்மாபர்ட்போன் வெளியீட்டுக்கு பின் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை போக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    இத்துடன் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 200MP பிரைமரி கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாக்‌ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அதிகளவு ரேம் மற்றும் மெமரி இன்றி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் விலை ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    புதிய அறிவிப்பின் படி மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் புது வெர்ஷன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. 200MP கேமரா, 8K தர வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனில் 128 ஜிபி என்பது மிகவும் குறைந்த மெமரி ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படவில்லை.

    • லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி மற்றும் நிற ஆப்ஷன்களை வெளிப்படுத்தும் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • புதிய லாவா ஸ்மார்ட்போன் நான்கு விதமான நிறங்களில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் நிற ஆப்ஷ்களை அறிவிக்கும் டீசர் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புது லாவா ஸ்மார்ட்போன் அடுத்த வார துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் லாவா தனது சமூக வலைதள அக்கவுண்ட்களில் டீசர்களாக வெளியிட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. லாவா நிறுவனம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இவை எந்தெந்த நிறங்கள் என தெரிவிக்கவில்லை.


    முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனின் ரியர் டிசைன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. ரெண்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். முன்னதாக ஜூலை மாத வாக்கில் லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லாவா பிளேஸ் ப்ரோ இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பிளாக், கிளாஸ் புளூ, கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் ரெட் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    • ரியல்மி நிறுவனம் தனது சாதனங்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து இருக்கிறது.
    • இதில் ரியல்மி ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது.

    ரியல்மி நிறுவனம் "ரியல்மி பெஸ்டிவ் டேஸ்" சிறப்பு விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் இதர சாதனங்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இத்துடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி நடத்தும் சிறப்பு விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.

    சிறப்பு விற்பனை ரியல்மி ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. இதே தேதியில் தான் ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் 2022 மற்றும் அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2022 விற்பனைகள் துவங்க இருக்கின்றன.


    ரியல்மி பெஸ்டிவ் டேஸ் சேல் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு துவங்குகிறது. சிறப்பு விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்க இருக்கிறது. சிறப்பு விற்பனையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனைக்கு வருகிறது.

    முந்தைய தகவல்களில் இந்த சலுகையுடன் சேர்க்கும் பட்சத்தில் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக ரியல்மி GT நியோ 3T இருக்கும் என கூறப்பட்டது. இது தவிர ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரியல்மி நார்சோ 50 5ஜி மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 துவக்க விலையில் விற்பனைக்கு வருகிறது.

    • ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய F21s ப்ரோ சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
    • F21s சீரிசில் இரண்டு மாடல்கள் அறிமுகமாகி இருக்கும் நிலையில், இவை ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் புதிய F21s ப்ரோ சீரிசில் F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், இவை டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றுடன் ஒப்போ நிறுவனத்தின் குளோ டிசைன் கொண்டிருக்கிறது.

    ஒப்போ F21s ப்ரோ அம்சங்கள்:

    6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

    அட்ரினோ 610 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா

    2MP மைக்ரோஸ்கோப் கேமரா

    32MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்


    ஒப்போ F21s ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 60Hz AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 12

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா

    2MP மோனோக்ரோம் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ F21s ப்ரோ மற்றும் F21s ப்ரோ 5ஜி மாடல்கள் டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 22 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 25 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஒப்போ ஸ்டோர், அமேசான் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் செப்டம்பர் 19ஆம் தேதி கிடைக்கிறது.

    • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொண்டிருக்கிறது.

    விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டிமென்சிட்டி 900 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 8 ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V25 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே இந்த ஸ்மார்ட்போனிலும் நிறம் மாறும் ஏஜி கிளாஸ் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.


    விவோ V25 5ஜி அம்சங்கள்:

    6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1

    12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12

    64MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    50MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சர்பிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

    • ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+LCD ஸ்கிரீன், புதிய யுனிசாக் டி612 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ ஆர் எடிஷன் ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டேஜ் லைட் டிசைன் மற்றும் பின்புறத்தில் ரிகட் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது. இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.


    ரியல்மி 50i பிரைம் அம்சங்கள்:

    6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+LCD ஸ்கிரீன்

    1.82 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி612 பிராசஸர்

    மாலி G-57 GPU

    3 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி UFS 2.2 மெமரி

    4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ ஆர் எடிஷன்

    8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    5MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    4ஜி வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் டார்க் புளூ மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். இத்துடன் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

    • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் Y22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ Y22 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் HD+ ஹாலோ டிஸ்ப்ளே, 50MP டூயல் கேமரா, 8MP செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், அல்ட்ரா கேம் மோட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12, IP5X டஸ்ட், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2.5டி வளைந்த டிசைன், மேம்பட்ட சர்பேஸ் டெக்ஸ்ச்சரிங் டெக்னிக் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.


    விவோ Y22 அம்சங்கள்:

    6.51 இன்ச் 1600x720 பிக்சல் HD+LCD ஸ்கிரீன்

    மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்

    மாலி G52 MC2 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஓஎஸ் 12

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்

    புதிய விவோ Y22 ஸ்மார்ட்போன் ஸ்டார்லிட் புளூ மற்றும் மெட்டாவெர்ஸ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இதே ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலை சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் நிறங்களில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்து இருந்தது. இன்று அந்நிறுவனம் இதே ஸ்மார்ட்போனின் பிரைம் புளூ எடிஷன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    மற்ற இரு நிறங்களை போன்று இல்லாமல் புதிய பிரைம் புளூ எடிஷன் மாடலில் கிரேடியண்ட் பினிஷ் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் ஒரு புறத்தில் புளூ நிறத்தில் இருந்து மறுபுறத்திற்கு வைலட் நிறமாக மாறுகிறது. புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


    ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலில் 6.7 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 150 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

    • ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது அவ்வப்போது பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.
    • சமீபத்தில் ஸ்மார்ட்போன் மாடல் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் பரபரப்பு.

    ரெட்மி 6A ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதால் ஸ்மார்ட்போனில் பலத்த சேதங்கள் ஏற்பட்டதாக யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருந்தார். சில சீன பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறுவது அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாகி விட்டது. எனினும், இதன் மூலம் பாதிப்பு பெரியதாகும் போது சில சம்பவங்கள் வைரலாகின்றன.

    சமீபத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யூடியூபரின் உறவினர் தனது ஸ்மார்ட்போனை தலையணை அருகில் வைத்துவிட்டு உறங்கி இருக்கிறார். அவர் உறங்கிய சில நிமிடங்களில் ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறி இருக்கிறது. இந்த சம்பவம் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏற்பட்டது. ஸ்மார்ட்போன் வெடித்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    "ரெட்மி 6A ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வந்த எனது உறவினர் நேற்று இரவு உயிரிழந்து விட்டார். அவர் தனது ஸ்மார்ட்போனை தனது முகத்தின் அருகில் உள்ள தலையணையில் வைத்து இருந்தார். அவர் உறங்கி கொண்டிருந்த போது ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியது. இது எங்களுக்கு மோசமான நேரம். இந்த நேரத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பிராண்டின் பொறுப்பு," என யூடியூபர் ட்விட்டரில் தகவல் தெரிவித்து இருக்கிறார். இத்துடன் தனது பதிவில் ட்விட்டர் இந்தியா, மனு குமார் ஜெயின் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

    பேட்டரி வெடித்ததால் ஸ்மார்ட்போன் முழுமையாக எரிந்தது. இதன் காரணமாக அதில் இருந்த டிஸ்ப்ளே உடைந்து பின்புற பேனல், முழுமையாக சேதமடைந்து விட்டது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை உணர முடியும். இத்துடன் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் உயிரிழந்த பெண் படுத்திருந்த பகுதி முழுக்க இரத்தத்தை காண முடிகிறது.

    ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவம் உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து சந்தையில் சியோமி நிறுவனம் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. மேலும் உயிரிழப்பு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் சியோமி நிறுவனம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Photo Courtesy: MD Talk

    • ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பழைய ஐபோன் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
    • சமீபத்தில் தான் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 2022 மாடலை அறிமுகம் செய்தது. இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் 2022 ஐபோன் SE விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், ஐபோன் SE 2022 மாடல் விலையை ஆப்பிள் திடீரென உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வுக்கான காரணம் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


    எனினும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றமே காரணமாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் உற்பத்தி துவங்கி வினியோகம் வரை பல்வேறு கட்டணங்கள் மாறி இருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறலாம்.

    விலை உயர்வுக்கு முன் இந்திய சந்தையில் ஐபோன் ஐபோன் SE 2022 (64, 128 மற்றும் 256 ஜிபி) மாடல்கள் விலை முறையே ரூ. 43 ஆயிரத்து 990, ரூ. 48 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 58 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய விலை விவரம்:

    ஐபோன் SE 2022 (64 ஜிபி) ரூ. 49 ஆயிரத்து 990

    ஐபோன் SE 2022 (128 ஜிபி) ரூ. 54 ஆயிரத்து 900

    ஐபோன் SE 2022 (256 ஜிபி) ரூ. 64 ஆயிரத்து 900

    ×