என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்மார்ட்போனிற்கு ரூ. 52 ஆயிரம் தள்ளுபடி - சாம்சங் அதிரடி!
    X

    ஸ்மார்ட்போனிற்கு ரூ. 52 ஆயிரம் தள்ளுபடி - சாம்சங் அதிரடி!

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த சலுகை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சிறப்பு விற்பனைக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அமேசான் தளத்தில் நடைபெறும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விற்பனை இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போதைய விற்பனையில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போனிற்கு 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 7.6 இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே, 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    சலுகை விலை விவரங்கள்:

    சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் வழங்கப்படும் தள்ளுபடி கூப்பன் சேர்த்தால் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறையும்.

    அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1, 7.6 இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே, 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எஸ் பென் போல்டு எடிஷன் மற்றும் எஸ் பென் ப்ரோ சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×