என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • மோட்டோ E சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் 50MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ E32 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டோ E32 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

    மோட்டோ E32 அம்சங்கள்:

    6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்

    IMG பவர் GE8320 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    4ஜி வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ E32 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 549 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×