search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    50MP டூயல் கேமரா கொண்ட புது நோக்கியா போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    50MP டூயல் கேமரா கொண்ட புது நோக்கியா போன் இந்தியாவில் அறிமுகம்

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புது நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நஇறுவனம் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி வி நாட்ச் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நார்டிக் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    நோக்கியா ஜி11 பிளஸ் அம்சங்கள்:

    6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ வி நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்

    மாலி ஜி57 MP1 GPU

    4 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    8MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    எப்எம் ரேடியோ, ஒசோ ஆடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் சார்ஜிங்

    புதிய நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் லேக் புளூ மற்றும் சார்கோல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நோக்கியா மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×