என் மலர்
மொபைல்ஸ்
- மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய மோட்டோ G72 வெளியீடு மோட்டோரோலா ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில் மோட்டோ G72 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+pOLED 10 பிட் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G72 ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களைம், ஒரு ஆண்டுக்கு ஒஎஸ் அப்டேட்டையும் பெறும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G72 ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

மோட்டோ G72 அம்சங்கள்:
6.55 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+pOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்
Arm மாலி G57 MC2 GPU
6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 12
108MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் டர்போ சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மோட்டோ G72 ஸ்மார்ட்போன் மெடியோரைட் பிளாக் மற்றும் போலார் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
- சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் தோற்றத்தில் போக்கோ M5 மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
சியோமி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்றே இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ M5 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11R மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 5MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாட் சைடுகளை கொண்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனுடன் 10 வாட் சார்ஜர் தான் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11R அம்சங்கள்:
6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் 700 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13
13MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
2MP போர்டிரெயிட் சென்சார்
5MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி நோட் 11R ஸ்மார்ட்போன் வைட், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1099 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 575 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 895 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரத்து 155 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- ஆப்பிள் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
- ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சிறந்த டிஸ்ப்ளே கொண்டிருப்பதற்கான விருது வென்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் டிஸ்ப்ளே - டிஸ்ப்ளேமேட் வழங்கும் புள்ளிகளில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக தலைசிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்ட மாடல் என்ற விருதை ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் பெற்று இருக்கிறது.
முன்னதாக தலைசிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்ட மாடல் எனும் பெருமையை ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் ஒட்டுமொத்த பரிசோதனைகளில் A+ புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள டிஸ்ப்ளே அதிகபட்சம் 2 ஆயிரத்து 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

இத்துடன் ஆம்பியண்ட் லைட்டில் அதிக காண்டிராஸ்ட் ரேட்டிங் வழங்கி இருக்கிறது. இது போன்று நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளிலும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சிறந்த புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உள்ள டிஸ்ப்ளேவை சாம்சங் உருவாக்கி இருக்கிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இருக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் தலைசிறந்த டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல்கள் அதன் வித்தியாச அம்சங்களை கொண்டு தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று குவிக்கும் என தெரிகிறது.
- ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெளியான தகவல்களில் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் RMX3630 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த வரிசையில், ரியல்மி 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் பியுரோ ஆப் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS), இந்தோனேசியா டெலிகாம் மற்றும் NBTC வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதுதவி ரியல்மி 10 ஸ்மார்ட்போன் CB டெஸ்ட் சான்று பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டது. கீக்பென்ச் வலைதளங்களின் படி ரியல்மி 10 ஸ்மார்ட்போன் RMX3630 மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த பிராசஸர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

கீக்பென்ச் தள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி வேரியண்ட்-ஆக இருக்கும் என தெரிகிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் உடன், மாலி G-57 GPU, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 10 ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 483 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மல்டி கோர் சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் 1668 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் பெற்று இருக்கும் சான்றிதழ்களை பொருத்து ரிய்லமி 10 மாடல் இந்தியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ் கொண்டிருக்கிறது.
டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் QHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், டூயல் எல்இடி பிளாஷ், 5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) மற்றும் ஹை ஒஎஸ் 8.6 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IPX2 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ பாப் 6 ப்ரோ அம்சங்கள்:
6.56 இன்ச் 1600x720 பிக்சல் HD+ வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
IMG பவர்-விஆர் GE-கிளாஸ் GPU
2 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6
8MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
இரண்டாவது ஏஐ கேமரா
5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
4ஜி வோல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
5000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பீஸ்ஃபுல் புளூ மற்றும் போலார் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே புதிய விவோ X போல்டு பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
- இந்த ஸ்மார்ட்போனில் 120Hz AMOLED மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 இன்ச் 2K பிளஸ் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 120Hz LTPO E5 AMOLED பேனல், 6.53 இன்ச் FHD+ E5 AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முந்தைய தலைமுறை மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 8MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்க்பபட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்Hனை விவரங்கள்:
புதிய விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், மவுண்டெயின் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.
- ZTE நிறுவனம் இன் ஸ்கிரீன் கேமரா சென்சார் கொண்ட புதிய அக்சான் 30S ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 இன்ச் FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 16MP இன்-டிஸ்ப்ளே கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார், 4200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ZTE அக்சான் 30S அம்சங்கள்:
6.92 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ OLED 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
அட்ரினோ 650 GPU
8ஜிபி LPDDR5 ரேம், 128ஜிபி UFS3.1 மெமரி
12ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS3.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12
64MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
5MP மேக்ரோ லென்ஸ்
2MP டெப்த் சென்சார்
16MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி
4200 எம்ஏஹெச் பேட்டரி
55 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1698 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2198 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- டெக்னோ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய டெக்னோ போன் 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.8 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் மெமரி பியுஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது கேமரா, 8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6 கொண்டிருக்கும் டெக்னோ போவா நியோ 5ஜி மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ போவா நியோ 5ஜி அம்சங்கள்:
6.8 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
இரண்டாவது கேமரா
8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
6000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்ப்ரிண்ட் புளூ மற்றும் சபையர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்பஓன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புது நிறம் சேர்க்கும் பட்சத்தில் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R மாடல் தற்போது மூன்ற விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10R மாடல் சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் மாடல் அமேசான் நிறுவனத்துடன் ஒன்பிளஸ்-இன் நீண்ட பயணத்தை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற இரு நிறங்களை போன்று இல்லாமல் புதிய பிரைம் புளூ எடிஷன் கிரேடியண்ட் பினிஷ் கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒருபுறம் புளூ நிறத்தில் இருந்து மறுபுறம் வைலட் நிறத்திற்கு மாறுகிறது. நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் மாடலிலும் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா, பிராஸ்டட் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
- கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் இரு பிக்சல் ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
கூகுள் நிறுவனம் கடந்த ஜூலை மாத வாக்கில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், பிக்சல் 5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யவில்லை. இதே போன்று பிக்சல் 4a மாடலை மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்த கூகுள், பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4XL போன்ற மாடல்களை ரேடார் கண்ட்ரோல் வழங்கியதால் இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை.
தற்போது பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இரு பிக்சல் போன்களும் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது மட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது ரூ. 27 ஆயிரத்து 699 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
- லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
- இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரீமியம் கிளாஸ் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
லாவா நிறுவனம் பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் தனது விளம்பர தூதராக கார்திக் ஆர்யனை லாவா நியமனம் செய்துள்ளது. விரைவில் லாவா பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு கார்திக் ஆர்யன் விளம்பரப்படுத்தும் பிரச்சாரம் துவங்கும் என்றும் லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை கூடுதல் மெமரி கிளாஸ் பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

லாவா பிளேஸ் ப்ரோ அம்சங்கள்:
6.51 இன்ச் 1600x720 பிக்சல் வளைந்த ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே
90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்
IMG பவர் VR GE8320 GPU
4 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
டெப்த் சென்சார், மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்
8MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கிளாஸ் கோல்டு, கிளாஸ் கிரீன், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் லாவா வலைதளங்களில் நடைபெறுகிறது.
- விவோ நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி உள்ளது.
- இந்த போல்டபில் ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே விவோ X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை விவோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி மாடல் டீசரை விவோ நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

இத்துடன் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் சக்திவாய்ந்த கேமரா கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது. பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று லட்சம் முறை மடிக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) துவங்கும் என கூறப்படுகிறது.






