என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரெட்மி நோட் 12 சீரிஸ் அக்டோபர் வெளியீடு உறுதி
    X

    ரெட்மி நோட் 12 சீரிஸ் அக்டோபர் வெளியீடு உறுதி

    • சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • முந்தைய வழக்கப்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்திலேயே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியீட்டு தகவல்களை சியோமி வெய்போ மூலம் தெரிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ரெட்மி நோட் 12 சீரிசில்- வென்னிலா ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 சீரிசின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். தற்போது அக்டோபர் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இவற்றின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸருடன், ARM மாலி-G68 GPU வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பிராசஸர் அதிகபட்சம் 200MP கேமரா சென்சாரை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இந்த பிராசஸரில் இரண்டு ARM கார்டெக்ஸ் A78 CPU கோர்கள் உள்ளன. புதிய ரெட்மி நோட் 12 சீரிசின் மூன்று மாடல்களிலும் 5ஜி வசதி வழங்கப்படும் என்றே தெரிகிறது.

    முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 210 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 120 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 12 ஸ்டாண்டர்டு மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இதன் வென்னிலா மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம்.

    புதிய ரெட்மி நோட் 12 சீரிசில் 6.6 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 4980 எம்ஏஹெச் பேட்டரியும், நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 4300 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×