என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த மாத வாக்கில் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஒன்பிளஸ் விவரங்களை முன்கூட்டியே வெளியிட்டு வரும் மேக்ஸ் ஜாம்பர் எனும் டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிஓளஸ் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யாமல், ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒன்பிளஸ் 11டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எனினும், அடுத்த ஆண்டு ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படாது என்ற தகவலை ஒன்பிளஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    இவை தவிர ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே, 16MP செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், ஹேசில்பிலாட் பிராண்டிங், 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கலாம்.

    Photo Courtesy: OnLeaks Smartprix

    Next Story
    ×