search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    தலைசிறந்த டிஸ்ப்ளேவுக்கான விருது வென்ற ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
    X

    தலைசிறந்த டிஸ்ப்ளேவுக்கான விருது வென்ற ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

    • ஆப்பிள் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
    • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சிறந்த டிஸ்ப்ளே கொண்டிருப்பதற்கான விருது வென்றுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் டிஸ்ப்ளே - டிஸ்ப்ளேமேட் வழங்கும் புள்ளிகளில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக தலைசிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்ட மாடல் என்ற விருதை ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் பெற்று இருக்கிறது.

    முன்னதாக தலைசிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கொண்ட மாடல் எனும் பெருமையை ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் ஒட்டுமொத்த பரிசோதனைகளில் A+ புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள டிஸ்ப்ளே அதிகபட்சம் 2 ஆயிரத்து 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஆம்பியண்ட் லைட்டில் அதிக காண்டிராஸ்ட் ரேட்டிங் வழங்கி இருக்கிறது. இது போன்று நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளிலும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சிறந்த புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உள்ள டிஸ்ப்ளேவை சாம்சங் உருவாக்கி இருக்கிறது.

    அந்த வகையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இருக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் தலைசிறந்த டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் மாடல்கள் அதன் வித்தியாச அம்சங்களை கொண்டு தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று குவிக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×