என் மலர்
மொபைல்ஸ்
- இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், யு வடிவ நாட்ச், 16MP செல்பி ரேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 4ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹீலியோ ஜி99 பிராசஸருடன் அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் நோட் 12 ப்ரோ 4ஜி ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, கூடுதலாக 5ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், டிடிஎஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ அம்சங்கள்:
6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்
Arm மாலி-G57 MC2
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 10.6
டூயல் சிம்
108MP பிரைமரி கேமரா, f/1.75, குவாட் எல்இடி பிளாஷ்
2MP டெப்த் சென்சார், AI லென்ஸ்
16MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட், வொல்கானிக் கிரே மற்றும் டஸ்கனி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக ரூ. 1500 வரை தள்ளுபடி மற்றும் 500 சூப்பர் காயின் வழங்கப்படுகிறது.
- ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு 4ஜி பீச்சர் போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த இரு போன்களிலும் லெட்ஸ்சாட் எனும் அம்சம் மூலம் வரம்பற்ற வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் வசதி உள்ளது.
ஐடெல் மேஜிக் X மற்றும் மேஜிக் X பிளே பீச்சர் போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த போன்களில் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் லெட்ஸ்சாட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதோடு, க்ரூப்களில் இணைந்து கொள்ள முடியும்.
இரு பீச்சர் போன்களிலும் பூம்பிளே மியூசிக் ஆப் உள்ளது. இதில் ஒரு கோடிக்கும் அதிக பாடல்கள் உள்ளன. இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். ஐடெல் மேஜிக் X மற்றும் மேஜிக் X பிளே போன்களில் சுமார் 2 ஆயிரம் காண்டாக்ட்களை சேமித்துக் கொள்ள முடியும். இந்த பீச்சர் போன்களை 12 பிராந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்.

ஐடெல் மேஜிக் X மற்றும் மேஜிக் X பிளே அம்சங்கள்:
ஐடெல் மேஜிக் X பிளே மாடலில் 1.77 இன்ச் 128x160 பிக்சல் TN டிஸ்ப்ளே, மேஜிக் X மாடலில் 2.4 இன்ச் 240x320 TN டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இரு போன்களிலும் டூயல் சிம் வசதி, யுனிசாக் T107 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் விஜிஏ கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.
மெமரியை பொருத்தவரை 48MB ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இரு பீச்சர் போன் மாடல்களிலும் 4ஜி வோல்ட்இ, வயர்லெஸ் எப்எம், ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐடெல் மேஜிக் X பிளே மற்றும் மேஜிக் X போன்களில் முறையே 1900 எம்ஏஹெச் பேட்டரி, 1200 எம்ஏஹெச் பேட்டரி வழஙஅகப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
இந்தியாவில் ஐடெல் மேஜிக் X மிட்நைட் பிளாக் மற்றும் பியல் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐடெல் மேஜிக் X பிளே மிட்நைட் பிளாக் மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு போன்களும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.
- போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வ டீசரில் தெரியவந்துள்ளது.
போக்கோ நிறுவனம் விரைவில் தனது M சீரிஸ் மாடல்களை மாற்றியமைக்க இருக்கிறது. இந்திய சந்தையில் போக்கோ M5 4ஜி மாடலை அறிமுகம் செய்வதற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரில் G99 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதை அடுத்து புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G99 4ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

எனினும், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்ற போக்கோ M சாதனங்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கும் புது டிசைன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ M5 4ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் எம்ஐயுஐ 12 ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்பட்டு விடும்.
- ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஐபோன் 14 மாடல்கள் மேம்பட்ட சிறப்பம்சங்கள், ஹார்டுவேர் உடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வென்னிலா ஐபோன் 14 மாடல் பிஐஎஸ் இந்தியா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இது பற்றிய தகவல்களில் ஐபோன் 14 ஸ்மார்ட்போன் A2882 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. இத்துடன் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 14 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இறுக்கிறது. ஸ்டாண்டர்டு ஐபோன் 14 மாடல் ஐபோன் 13 போன்ற தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் செல்பி கேமரா மற்றும் பேஸ் ஐடி சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 12MP டூயல் கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிநவீன ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படலாம்.
- ஒன்பிளஸ் நிறுவனம் நிறுவனம் நார்டு பிராண்டிங்கில் புது வாட்ச் மற்றும் பேண்ட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.
- இத்துடன் நார்டு 3 ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிசை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் நார்டு சாதனங்கள் வரிசையில், நார்டு பட்ஸ் CE ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 ஆகும்.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பிராண்டிங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறைந்த புது சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் நார்டு 3 ஸ்மார்ட்போனும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் நார்டு வாட்ச், நார்டு பேண்ட் மற்றும் புதிய நார்டு பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடலும் அடங்கும்.

பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருந்ததாக அவர் தெரிவித்து இருந்தார். இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்டும் என தெரிகிறது.
நார்டு 3 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த வாட்ச் மாடல் விலை ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்ச் மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், நார்டு வாட்ச் விலை குறைவு தான் எனலாம். ஒன்பிளஸ் நார்டு வாட்ச் வட்ட வடிவ டயல் மற்றும் செவ்வக வடிவம் கொண்ட டயல் என இரு மாடல்களில் கிடைக்கும் என தெரிகிறது.
- விடவோ நிறுவனம் தொடர்ச்சியாக Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
- இதன் புதிய Y22s மாடல் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் தனது பிரபலமான Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை பல்வேறு உலக நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது Y22s ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ Y22s அம்சங்கள்:
- 6.55 இன்ச் 2408x1080 பிக்சல் HD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அடிரினோ 610 GPU
- 8 ஜிபி ரேம்
- 128ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஓஎஸ் 12
- டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 8MP செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
புதிய விவோ Y22s ஸ்மார்ட்போன் ஸ்டார்லிட் புளூ மற்றும் சம்மர் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 455 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் ரெண்டர் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய நோட் \ S சீரிஸ் ஹைப்ரிட் மாடல் கேலக்ஸி S23 அல்ட்ரா 200MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று தலைமுறை பிரீமியம் S சீரிஸ் மாடல்களில் சாம்சங் நிறுவனம் 108MP கேமராவையை வழங்கி வந்துள்ளது. இது தவிர சாம்சங் தனது 200MP சென்சாரை அறிவித்து சில காலம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், தனது 200MP சென்சாரை ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சாம்சங் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் யூனிட் தனது கேமரா உற்பத்தியாளரிடம் S23 அல்ட்ரா மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

சாம்சங் கடந்த ஆண்டு தனது முதல் 200MP ஸ்மார்ட்போன் கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. பின் ஜூன் மாத வாக்கில் இதே சென்சாரின் மற்றொரு வெர்ஷனை அறிமுகம் செய்தது. சமீபத்தில் மோட்டோரோலா X30 ப்ரோ 200MP சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் சிறந்த கேமரா அம்சங்கள் நிறைந்த மாடலாக கேலக்ஸி S22 அல்ட்ரா விளங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ மாட்யுல், 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்ட்டு இருக்கிறது.
புதிய கேலக்ஸி S23 மாடல் முந்தைய மாடலில் உள்ளதை போன்ற டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என்றும் இதன் அம்சங்கள் மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி அந்நிறுவன சிஇஒ புது தகவலை தெரிவித்து இருக்கிறார்.
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என ரிய்லமி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரபிவித்து இருக்கிறார். ரியல்மி 9i ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து புதிய GT நியோ 3T ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி வெளியிட்டு இருந்தது.
ஜூன் மாதத்தில் இருந்தே ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இரு மாதங்களாக அவ்வப்போது டீசர்கள் மட்டும் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனிற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

முன்னதாக ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி Q5 ப்ரோ மாடலின் ரிபிராண்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.62 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் வயர்டு சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மாடல்கள் இந்திய முன்பதிவில் அசத்தி உள்ளன.
- புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 89 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு துவங்கியதும் எத்தனை பேர் இந்த ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்தனர் என்ற தகவலை சாம்சங் வெளியிட்டு உள்ளது.
புதிய கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி Z போல்டு 4 மாடல்கள் முன்பதிவில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக சாம்சங் இந்தியா MX விற்பனை தலைவர் மற்றும் மூத்த துணை தலைவர் ராஜு புல்லன் தெரிவித்து இருக்கிறார். இத்தனை யூனிட்களும் முன்பதிவு துவங்கிய முதல் 12 மணி நேரத்தில் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 1.5 மடங்கு அதிக அளவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக சாம்சங் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் சில்லறை விற்பனை மையங்களை விரிவுப்படுத்தி இருக்கிறது.

விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 256ஜிபி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 513ஜிபி) ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 1 டிபி) ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ரூ. 89 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 பிஸ்போக் எடிஷன் ரூ. 97 ஆயிரத்து 999
இரண்டு புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைத்தளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவை போரா பர்பில், கிராபைட், பின்க் கோல்டு, கிரே கிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பெய்க் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட், 90.5 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதுவரவு 5ஜி போன் ஆகும். இதில் 6.6 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 6 ஜிபி ரேம், டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் தொழில்நுட்பம் மூலம் 5ஜிபி வரை கூடுதல் ரேம் வழங்குகிறது. இந்த போனில் ஏராளமான 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் கேமரா, 2MP 4செ.மீ. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 9i 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
மாலி-G57 MC2 GPU
4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0
50MP பிரைமிரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
2MP B&W மற்றும் 2MP 4cm மேக்ரோ, f/2.4
8MP செல்பி கேமரா, f/2.0
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் சோல்புல் புளூ, ராக்கிங் பிளாக் மற்றும் மெட்டாலிக்கா கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய V25 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 8ஜிபி வரையிலான எக்ஸ்டெண்டட் ரேம் கொண்டுள்ளது.
விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய V25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.55 இன்ச் FHD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 120 Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 8 ஜிபி எக்ஸ்டெண்டட் ரேம் , பயோனிக் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4830 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ V25 ப்ரோ அம்சங்கள்:
- 6.56 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- 3GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 8ஜிபி LPDDR4x ரேம்
- 128ஜிபி UFS 3.1 ரேம்
- 12ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓஎஸ் 12
- டூயல் சிம்
- 64MP பிரைமரி கேமரா, f/1.89, OIS, LED பிளாஷ்
- 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 32MP செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி
- Dimensions: 158.9×73.52×8.62mm; Weight: 190g
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
- 4800 எம்ஏஹெச் பேட்டரி
- 66 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் பியுர் பிளாக் மற்றும் செய்லிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் முன்பதிவு இன்றே துவங்கி விட்டது. விற்பனை ஆகஸ்ட் 25 ஆம் தேதி ப்ளிப்கார்ட், விவோ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புது ஸ்மார்ட்போன் Z சீரிஸ் பிராண்டிங், குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிகிறது.
ஐகூ நிறுவனம் Z6 சீரிசில் புது ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z6 லைட் எனும் பெயரில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது. கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1x ஸ்மார்ட்போன் தான் ஐகூ Z6 லைட் எனும் பெயரில் ரிபிராண்டு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ Z6 லைட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இது பட்ஜெட் பிரிவில் மிட் ரேன்ஜ் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ரிபிராண்டு செய்யப்பட்ட மாடல் என்ற பட்சத்தில் விவோ T1x மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே ஐகூ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் ஐகூ Z6 லைட் மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். இது ஐகூ Z6 மாடலின் லைட் வெர்ஷன் என்பதால், 5ஜி கனெக்டிவிட்டி நீக்கப்படலாம்.
ஐகூ Z6 லைட் மாடலின் விலை விவோ T1x ஸ்மார்ட்போனை விட ரூ. 600 முதல் ரூ. 700 வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி ஐகூ Z6 லைட் மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என துவங்கும் என தெரிகிறது. விவோ T1x ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






