என் மலர்
மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் ஒன்பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்
- ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டு உள்ளது.
- புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலை சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் நிறங்களில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்து இருந்தது. இன்று அந்நிறுவனம் இதே ஸ்மார்ட்போனின் பிரைம் புளூ எடிஷன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மற்ற இரு நிறங்களை போன்று இல்லாமல் புதிய பிரைம் புளூ எடிஷன் மாடலில் கிரேடியண்ட் பினிஷ் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் ஒரு புறத்தில் புளூ நிறத்தில் இருந்து மறுபுறத்திற்கு வைலட் நிறமாக மாறுகிறது. புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒன்பிளஸ் 10R 5ஜி மாடலில் 6.7 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 150 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.






