என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ஐடெல் ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
    • ஐடெல் A50 சீரிஸ் மாடல்களுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50 மற்றும் A50C என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஐடெல் A50 மற்றும் A50C மாடல்களில் 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, யுனிசாக் டி603 ஆக்டா கோர் பிராசஸர், 8MP ஏஐ டூயல் கேமரா சென்சார்கள், 5MP செல்பி கேமரா, 3 ஜிபி, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐடெல் A50C மாடலில் மட்டும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐடெல் A50 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இவற்றுடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     


    இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஐடெல் A50C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் A50 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இரு மாடல்களின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது.

    • ஐடெல் A50 ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கலாம்.
    • ஐடெல் A50 ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார் கொண்டிருக்கும்.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் A50 என்ற பெயரில் உருவாகிறது. இது அந்நிறுவனத்தின் ஐடெல் A70 மாடலைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன் டூயல் கேமரா சென்சார்கள், ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ஐடெல் A70 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக், சில்வர் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வரிசையில், புதிய ஐடெல் மாடலும் இணைந்து கொள்ளும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த சலுகை பயனர்கள் ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 100 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    • ஜனவரி மாதம் வெளியாகும்போது இதன் விலை 74,999 ரூபாய் ஆகும்.
    • அமேசானில் 26 சதவீதம் தள்ளுபடியுடன் 55 ரூபாய்க்கு கிடைக்கிறது.

    அமேசான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவெல் (Great Freedom Festival) விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி (நாளை) வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஸ்டார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடி வழங்குகிறது.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் கடநத் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியானது. சுமார் 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஆஃபரை வழங்குகிறது. அறிமுகம் ஆனபோது இதன் விலை 74,999 ரூபாயாக இருந்தது.

    எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி S24 உயர்செயல்பாட்டுடன் கூடிய Exynos 2400 பிராசசர் கொண்டதாகும். 8ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 6.2-inch FHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே கொண்டது. ரெப்ரேஷ் ரேட் 120Hz வரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

    50எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 10எம்பி டெலிபோட்டோ கேமரா உடன் 12எம்பி செல்பி கேமரா கொண்டதாகும். 25W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,000 mAh பேட்டரி கொண்டது. wireless சார்ஜிங் வசதியும் உண்டு. 

    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும்.

    ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 சீரிசின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    புது ஐபோன் மாடல்கள் ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் சீரிஸ் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மாடல் அளவில் பெரிய மற்றும் பிரகாசமான ஸ்கிரீன், சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பெரிய OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் 6.7 இன்ச் திரையில் இருந்து அதிகரித்துள்ளது. கூடுதலாக, இரண்டு மாடல்களும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் உள்ளது.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும். இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A17 ப்ரோ சிப்பை விட கணிசமான செயல்திறன் மேம்பாடுகளை உறுதியளிக்கும்.

    கூடுதலாக, ஆப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கேமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் சமீபத்திய வைபை 7 தரநிலையை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்புகளை வழங்குகிறது.

    விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
    • ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது.

    ரியல்மி (Realme) இந்தியாவில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்றது.

    அந்த வகையில் புதிய ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை வாங்க 6 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்டர் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது நம்பர் சீரிஸ் வரலாற்றில் ரியல்மிக்கு ஒரு புதிய சாதனை ஆகும்.

     

    ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G 6.7-இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s Gen 2 பிராசஸர், 12 GB வரை ரேம் மற்றும் 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இத்துடன் 50MP Sony LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ 8GB + 12GB மாடலின் விலை ரூ.26,999 என்றும், 8GB + 256GB விலை ரூ.28,999 என்றும் 12GB + 512GB மாடலின் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 8GB + 256GB மாடலின் விலை ரூ.32,999 என்றும், 12GB + 256GB மாடலின் விலை ரூ.34,999 என்றும் 12GB + 512GB மாடல் விலை ரூ.36,999 என நிர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

    • இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
    • பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது.

    கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகஸ்ட் 14-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உட்பட ஒன்றல்ல, நான்கு பிக்சல் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

    கூகுள் பிக்சல் 9 சீரிசில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 14-ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவை பிளிப்கார்ட்டில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய வெளியீடு ஆகஸ்ட் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது.

    இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான பிரேம்களை மேட்-டெக்சர்டு பேனல்களைக் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் கேமரா ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும். ப்ரோ மாடல்களில் மூன்று லென்ஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான பிக்சலில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் உள்ள கேமரா பம்ப் செவ்வக வடிவில் வட்டமான மூலைகளுடன் உள்ளது. அதேசமயம் பிக்சல் 9 ஆனது நீள்வட்ட வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும்.

    பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சாதனங்கள் AI திறன்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் என்பது கூகுளின் 2-வது மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும், இந்தியாவிற்கு வரும் கூகுளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும் இருக்கும். இந்த புதிய ஸ்மார்போன் அதன் முந்தைய கூகுள் ஃபோல்டுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும்.
    • விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது.

    விவோ வி30 சீரிசை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு விவோ அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் விவோ வி40 சீரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ வி40 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

    இந்த மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1260x2800 பிக்சல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் வழங்கப்படுவதால் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேம்பிளேவுக்கு உதவுகிறது.

    விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும். இதில் இரு 50 எம்பி பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு அல்ட்ராவைட் அடங்கும். இதன் முன்புறம் 50 எம்பி கேமரா உள்ளது. இது உயர்தர செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.

    முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K வீடியோ தெளிவான வீடியோக்களை உறுதி செய்கின்றன. விவோ வி40 5500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். கூடுதலாக, 80W வேகமான சார்ஜிங் மூலம், தேவைப்படும்போது விரைவாக பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

    விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது. இந்த போனின் பின்புறம் மினரில் கிளாஸ் பேக் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் சில்வர் மற்றும் நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    இந்த போன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 5, ப்ளூடூத் v5.4, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி ஆகியவை வழங்கப்படுகின்றன. விவோ வி40 மாடலில் பாதுகாப்பிற்காக திரையில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

    • செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும்.
    • 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.

    "Nothing Phone 2a Plus" இந்தியா உள்பட உலகளவில் வருகிற 31-ந்தேதி ரிலீஸ் ஆகும் என நத்திங் (Nothing) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என துணை-நிறுவனர் கார்ல் பெய் உறுதி அளித்துள்ளார்.

    செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும். முன்னதாக 32 மெகா பிக்சல் கொண்டதாக இருந்தது. இந்த பிளஸ் மாடல் 50W சற்று கூடுதல் சார்ஜிங் ஸ்பீடு கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீடியாடெக் டைமென்சிட்டி 7350 சிப்செட்டால் (MediaTek Dimensity 7350 chipset) இயக்கப்படும். 12GB ரேம் வரை ஒத்துழைக்கக் கூடி கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்

    8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்புடன் கருப்பு மற்றம் கிரே கலரில் கிடைக்கும்.

    • மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
    • அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.

    அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ஜூலை 18 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.
    • ஒப்போ ரெனோ 12 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ஜூலை 18 ஆம் தேதி விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது ரெனோ 12 விற்பனைக்கு வந்துள்ளது.

    இந்தியாவில் ரெனோ 12 மாடல் சன்செட் பீச், மேட் பிரவுன் மற்றும் ஆஸ்ட்ரோ சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட், ஒப்போ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    புது ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் 3 மாத யூடியூப் பிரீமியம் மற்றும் கூகுள் ஒன் சந்தா வழங்கப்படுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ரெனோ 12 மாடலில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், மாலி G615 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஓஎஸ் 14.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • லிமிட்டெட் எடிஷன் மாடல் இருவித நிறங்களில் கிடைக்கும் என தகவல்.
    • சியோமி 14 சிவி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    சியோமி நிறுவனம் தனது சியோமி 14 ஸ்மார்ட்போனினை லெய்கா பிராண்டு கேமரா சென்சார்களுடன் குரூயிஸ் புளூ டூயல் ஸ்லைஸ் எடிஷன், மேட்சா கிரீன் நானோ-டெக் வீகன் லெதர் எடிஷன் மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் போன்ற வெர்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இவை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் பான்டா டிசைன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பேட் SE 4ஜி மற்றும் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் மிரர் கிளாஸ் மற்றும் வீகன் லெதர் வெர்ஷன் கொண்டிருக்கும். இத்துடன் பின்க், மோனோக்ரோம் மற்றும் புளூ எடிஷன்களும் விற்பனைக்கு கிடைக்கும். சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் தொடர்பாக அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் மாடல் ப்ளிப்கார்ட், Mi வலைதளங்கள் தவிர Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. 

    • டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
    • வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    கடந்த வாரம் Z9 லைட் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஐகூ Z9s வெளியீட்டை ஐகூ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஐகூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மர்யா வெளியிட்டுள்ளார்.

    இதனை சீரிஸ் என்று ஐகூ குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, Z9s வரிசையில் Z9s Pro மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

    இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் ரிங் எல்இடி பிளாஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஐகூ Z9 ப்ரோ சமீபத்தில் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் Z9 சீரிசில் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் 12GB + 256GB மெமரி ஆப்ஷன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.

    வரும் வாரங்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.

    ×