என் மலர்
மொபைல்ஸ்
விவோ நிறுவனத்தின் 44 எம்பி செல்பி கேமரா கொண்ட வி20 ஸ்மார்ட்போன் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வி20 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது. புதிய விவோ வி20 ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
இது மிட்னைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி என மூன்று வித நிறங்களிலும், இருவித மெமரி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உடன் இந்தியாவில் வெளியான முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மட்டுமின்றி விவோ வி20 ஸ்மார்ட்போன் முன்னணி ஆப்லைன் விற்பனையகங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் 12 மணி நேரத்தில் சுமார் 1.75 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 70 ஆயிரம் எனும் பிரீமியம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விலை குறைக்கப்பட்டு, சிறப்பு சலுகைகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன.
தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ரூ. 21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், விற்பனை துவக்கத்தின் போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 19,990 துவக்க விலையில் விற்னை செய்யப்பப்பட்டது.

ப்ளிப்கார்ட் விற்பனையின் போது 12 மணி நேரத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டிக் கொடுத்ததாக எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மொத்தம் 12 மணி நேரம் விற்பனை நடைபெற்றதால், குறைந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எல்ஜி சுமார் 1.75 லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்றே தெரிகிறது.
டூயல் ஸ்கிரீன் கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சாம்சங் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்வதை அந்நிறுவனம் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தனது பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய எஸ்21 சீரிஸ் உற்பத்தி பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கலாம் என தெரிகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளதால், சாம்சங் தனது ஸ்மார்ட்போன் வெளியீடு திட்டத்தை மாற்றியமைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜனவரியில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட போதுமான நேரத்தை பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் ஒ1, பி3 மற்றும் டி2 எனும் குறியீட்டு பெயர்களில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இவை முறையே கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா எனும் பெயர்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. இவற்றில் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலுடன் எஸ் பென் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எஸ்21 சீரிஸ் - கிரே, பின்க், சில்வர், வயலெட் மற்றும் வைட் என ஐந்து வித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இவற்றுடன் வரும் கேலக்ஸி பட்ஸ் 2 பிளாக், சில்வர் மற்றும் வயலெட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராண்டு இன் (in) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சப் பிராண்டு மூலம் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது.
புதிய பிராண்டு பற்றிய அறிவிப்பை ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் PLI அனுமதிகளை பெற்ற பின் வெளியிடுவதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராண்டிங் இந்தியர்களின் தற்போதைய டிரெண்டிங் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் துவங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இன் பிராண்டின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய பயனர்கள் முழுமையாக பயன்பெறும் நோக்கில் இந்த பிராண்டின் எதிர்கால திட்டங்கள் இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க மைக்ரோமேக்ஸ் ரூ. 500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் இன் பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டு உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் இன் போது பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டது.
அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிக்சல் 4ஏ விற்பனை துவங்கியது. எனினும், விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் பிக்சல்4ஏ விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.
மேலும் விரைவில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என்றும் அதுபற்றிய விவரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 4ஏ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு வந்தது.
பண்டிகை கால விற்பனை நிறைவுற்றதும், பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக குறுகிய கால சலுகை வழங்கப்பட்டது.
விவோ நிறுவனத்தின் வை30 ஸ்மார்ட்போன் மாடலின் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது வை30 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைத்து இருக்கிறது. அதன்படி விவோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது.
புதிய விலை குறைப்பு அமேசான் மற்றும் விவோ இந்தியா வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. விலை குறைப்பின் படி விவோ வை30 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ வை30 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இது எமரால்டு பிளாக் மற்றும் டேஸில் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

விவோ வை30 சிறப்பம்சங்கள்:
6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
4 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
2 எம்பி சென்சார், f/2.4
8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
கைரேகை சென்சார்
4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி டைப்-சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
கூல்பேட் நிறுவனத்தின் புதிய 21 எம்பி பாப் அப் கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் கூல் 6 புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கூல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 21 எம்பி ஏஐ செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர்
- 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 21 எம்பி பாப்-அப் செல்பி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10டி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக்ஷிப் சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ 10டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறமுகம் செய்துள்ளது. எம்ஐ 10டி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம், கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம்
- 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- எம்ஐ 10டி ப்ரோ - 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- டூயல் சிம்
- எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எம்ஐ 10டி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 37,999 என்றும் எம்ஐ 10டி ப்ரோ மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ததுள்ளது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 என மூன்று மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வரி உயர்வு காரணமாக ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களின் விலை ஏப்ரல் மாத வாக்கில் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், இவற்றின் விலை தற்சமயம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் எஸ்இ 2020 மாடல் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் நஇறுவனம் தனது ஐபோன் எஸ்இ மாடலின் விலையில் ரூ. 3400 வரை குறைத்து இருக்கிறது. இதே போன்று ஐபோன் XR மாடலுக்கு ரூ. 4900 மற்றும் ஐபோன் 11 மாடலுக்கு ரூ. 14,200 வரை குறைக்கப்பட்டு உள்ளது.
புதிய விலை குறைப்பின் படி ஐபோன் எஸ்இ 2020 64 ஜிபி ரூ. 39,900, ஐபோன் எஸ்இ 2020 128 ஜிபி ரூ. 44,900, ஐபோன் எஸ்இ 2020 256 ஜிபி ரூ. 54,900, ஐபோன் XR 64 ஜிபி ரூ. 47,900, ஐபோன் XR 128 ஜிபி ரூ. 52,900 என்றும் ஐபோன் 11 64 ஜிபி ரூ. 54,900, ஐபோன் 11 128 ஜிபி ரூ. 59,900, ஐபோன் 11 256 ஜிபி ரூ. 69,900 என மாறி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் எம்31 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களுடன் 3 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, அமேசான் சேவைக்கான செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
- 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸமார்ட்போன் ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இன்று (அக்டோபர் 14) புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. இது சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், ஒன்பிளஸ் 8டி சீரிசை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிடு இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது வரவிருக்கும் ஒன்பிளஸ் நார்டு போன்கள் பற்றி தகவல் ஒன்பிளஸ் தளத்தில் இதுவரை குறிப்பிடப்படவில்லை.

ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி வெளியீட்டு விழா இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனில் 6.49 இன்ச் டிஸ்ப்ளே ,90HZ ரிப்ரெஷ் ரேட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதுதவிர 64 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பிளாக்ஷிப் அல்லாத ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும். புதிய ஒன்ப்ளஸ் என்10 5ஜி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அதிரடி பிராசஸர் மற்றும் 5ஜி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஹை ஸ்பீடு நிகழ்வில் புதிய ஐபோன் 12 மாடலை மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 12 மாடலில் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் மற்றும் ஐபோன் 12 மினி மாடலில் 5.4 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் இதுவரை வெளியானதில் அதிக உறுதியான ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் வழங்கப்பட்டு உள்ள 5ஜி தொழில்நுட்பம் உலகின் அதிவேக செல்லுலார் இணைய வேகம் வழங்கும் திறன் கொண்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
புதிய ஐபோன் 5ஜி வசதி கிடைக்காத சமயங்களில் எல்டிஇ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது. மேலும் 5ஜி வசதி வழங்க உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

புதிய ஐபோன் 12 ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் இருப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தது என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. மேலும் இது கன்சோல்களுக்கு இணையான கேமிங் அனுபவத்தை ஐபோனில் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள பேட்டரி முந்தைய ஐபோனை விட நீண்ட நேர பேக்கப் வழங்கும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. புதிய ஐபோன் 12 மினி விலை 699 டாலர்கள் என்றும் ஐபோன் 12 விலை 799 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






