என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்போன் நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் வங்கதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி சி17 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா சென்சார்கள், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்7 சீரிசுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     ரியல்மி சி17

    வங்கதேசத்தில் இந்த ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி என ஒறஅறை வேரியணட், லேக் கிரீன் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரூ. 39,009 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மகேஷன் டெலிகாம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ப்ளிப் விலை ரூ. 1,08,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், தற்சமயம் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 39,009 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் ரூ. 69,990 விலையில் கிடைக்கிறது. இது குறுகிய கால சலுகை ஆகும்.

     கேலக்ஸி இசட் ப்ளிப்

    இந்த அதிரடி விலை குறைப்பு ரீடெயில் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும். 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் 6.7 இன்ச் புல் ஹெச்டி 1080x2636 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு கொண்டுள்ளது.

    மேலும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 12 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3300 எம்ஏஎஹ்ச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    சியோமியின் ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2010J19SC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் தகவல் தொழில்நுட்ப வலைதளத்தில் லீக் ஆனது.

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 4ஜி வேரியண்ட்டில் அதன் 5ஜி வேரியண்ட் கொண்டிருக்கும் பெரும்பாலான சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

     ரெட்மி நோட் 9

    தற்போதைய தகவல்களின் படி ரெட்மி நோட் 10 4ஜி வேரியண்ட் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜர் MDY-11-EM எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகமாகிறது.

    புதிய ரெட்மி நோட் 10 4ஜி மாடல் பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் M2010J19SC எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் சீரிசில் அறிமுகமாகுமா அல்லது முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மாடல் எப்12 பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் SM-F127G எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்துடன் மற்றொரு கேலக்ஸி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது.

     கேலக்ஸி எம்01

    முந்தைய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் போன்றே புதிய கேலக்ஸி எப்12 மாடலும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் SM-A025G எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் எனும் புதிய பிராண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய இன் பிராண்டிங் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் விரைவில் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. 

    தற்சமயம் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன் நவம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. 

     இன்

    புதிய இன் சீரிஸ் மாடல் மலிவு விலையில் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஷர்மா ஏற்கனவே தெரிவித்தார். மேலும் புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்பட்டது.

    நவம்பர் மாத பண்டிகை காலத்தில் பல்வேறு புதிய மாடல்கள் இந்திய சந்தையில் வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் இணைய இருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
    ஜியோணி நிறுவனத்தின் புதிய எப்8 நியோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஜியோணி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோணி எப்8 நியோ எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. 

    இதில் 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பேஸ் அன்லாக், ஸ்லோ மோஷன், பானரோமா, நைட் மோட், டைம் லேப்ஸ், பர்ஸ்ட் மோட், க்யூ ஆர் கோட், பேஸ் பியூட்டி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     ஜியோணி எப்8 நியோ

    ஜியோணி எப்8 நியோ சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 8 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜியோணி எப்8 நியோ விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனை நாடு முழுக்க கொண்டு சேர்க்க ஜியோணி யுடானுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் நாடு முழுக்க சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மொபைல் போன் விற்பனையாளர்களிடம் ஜியோணி எப்8 நியோ கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.


    இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆப்லைனில் நடைபெறுகிறது. 

    இந்தியா மட்டுமின்றி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்கள் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. 

     ஐபோன் 12

    இரு ஐபோன்களும் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. 

    இதில் ஐபோன் 12 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ. 34 ஆயிரம் வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    எல்ஜி நிறுவனத்தின் சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எல்ஜி நிறுவனம் வித்தியாசமான சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 28 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை எல்ஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

     எல்ஜி விங்

    எல்ஜி விங் சிறப்பம்சங்கள்

    - 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
    - 3.9 இன்ச் 1240x1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 ஜிபியு
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
    - 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
    - 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0
    - 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் எனும் புதிய பிராண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய இன் பிராண்டிங் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் விரைவில் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. 

     இன்

    புதிய இன் சீரிஸ் மாடல் மலிவு விலையில் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஷர்மா தெரிவித்தார். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தீபாவளிக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் பல்வேறு புதிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் இணைய இருக்கிறது.
    ரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ33 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், கலர்ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

     ஒப்போ ஏ33

    ஒப்போ ஏ33 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 3 ஜிபி LPDDR4x ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் மற்றும் மூன்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
    ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் யு1எக்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு உள்ளது.

     ஐகூ யு1 எக்ஸ்

    ஐகூ யு1எக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
    - டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்

    புதிய ஐகூ யு1எக்ஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 899 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 9930, 6 ஜிபி + 64 ஜிபி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,035 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 1199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 13,245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் ஐபோன் மாடல்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்திருக்கிறது.


    அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. இந்த விற்பனையின் முதல் நாளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக ஐபோன்கள் விற்பனையாகி இருப்பதாக அமேசான் தெரிவித்து இருக்கிறது. அமேசான் சிறப்பு விற்பனையின் முதல் நாள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நடைபெற்றது.

    அமேசான் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடல் ரூ. 47,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு விற்பனை இன்று (அக்டோபர் 21) வரை நடைபெறுகிறது. விற்பனையில் இம்முறை கடந்த ஆண்டை விட அதிகளவு வரவேற்பு கிடைத்து இருப்பதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

     ஐபோன் 11

    சிறப்பு விற்பனையில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள், பெரிய மின்சாதனங்கள் மற்றும் நுகர்வோர் மின்சாதனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கின்றன.

    ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை ஐபோன் 11, ரெட்மி நோட் சீரிஸ், ரெட்மி 9ஏ, ஒன்பிளஸ் 8டி, நார்டு மற்றும் சாம்சங் எம்31 உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. 
    ×