என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ட்ரூசின்க் தொழில்நுட்பம் உள்ளது.
    • இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் 1.46 இன்ச் ஹைப்பர் விஷன் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மெட்டல் பில்டு கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் சீராக இயங்கும் கிரவுன் உள்ளது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ட்ரூசின்க் தொழில்நுட்பம் உள்ளது. இதன் மூலம் இடையூறு இல்லாமல் ப்ளூடூத் காலிங் மேற்கொள்ளலாம். இந்த வாட்ச்-இல் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

     


    நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 அம்சங்கள்:

    1.46 இன்ச் ஹைப்பர் விஷன் AMOLED டிஸ்ப்ளே

    ப்ளூடூத் 5.3

    ட்ரூ சின்க் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    24x7 இதய துடிப்பு மாணிட்டரிங், SpO2, ஸ்லீப் டிராக்கிங்

    100-க்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள்

    நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை அப்டேட்கள்

    கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், டைமர்

    ரிமைண்டர், கால்குலேட்டர்

    நாய்ஸ்ஃபிட் ஆப்

    IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் பிரவுன், கிளாசிக் பிளாக், விண்டேஜ் பிரவுன், காப்பர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் மோட்டோ ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1.5K pOLED கர்வ்டு டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, OIS, 50MP செல்ஃபி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP68 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் வயர்டு மற்றும் 50 வாட் வயர்லெஸ் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் (68 வாட் சார்ஜர்) விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ. 27 ஆயிரத்து 999 விலையிலும் 12 ஜி.பி. ரேம் (125 வாட் சார்ஜர்) மாடல் ரூ. 31 ஆயிரத்து 999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் பியூட்டி, லூக்ஸ் லாவெண்டர் மற்றும் மூன்லைட் பியல் நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • சோனி நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சோனி இந்தியா நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 (CFI-1208A01R) மாடல்களுக்கு கோடை கால சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இந்த சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட பி.எஸ். 5 மாடல்களுக்கு சோனி இந்தியா நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் (CFI-2000 மாடல் க்ரூப் - ஸ்லிம்) மாடலுக்கு பொருந்தாது.

     


    அதன்படி பி.எஸ். 5 மாடல்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி போக பி.எஸ். 5 விலை எவ்வளவாக இருக்கும் என்பது ஏப்ரல் 10 ஆம் தேதி விற்பனை துவங்கிய பின்பே தெரியவரும்.

    வாடிக்கையாளர்கள் பி.எஸ். 5 மாடலை அமேசான், க்ரோமா, ப்ளிப்கார்ட், சோனி செண்டர், விஜய் சேல்ஸ், ப்ளின்கிட் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் சலுகை விலையில் வாங்கிட முடியும்.

    தற்போது சோனி பி.எஸ். 5 மாடலின் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் டிஜிட்டல் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    • மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.

    இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M15 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி M55 5ஜி மாடலுடன் அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், கேலக்ஸி M15 5ஜி ஸ்மா்ட்போனிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    கேலக்ஸி M15 5ஜி மாடலை வாங்க விரும்புவோர் அமேசான் இந்தியா வலைதளத்தில் இதனை முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெர்ஷன்களிலும், செலஸ்டியல் புளூ, புளூ டோபேஸ் மற்றும் ஸ்டோன் கிரே என மூன்றுவித நிறங்களிலும் கிடைக்கிறது.

    முன்பதிவு செய்வோர் மெமரி மற்றும் நிற வேரியண்டை தேர்வு செய்த பின் முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். பிறகு, ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து நள்ளிரவு 11.59 மணிக்குள் ஸ்மார்ட்போனை வாங்கிடலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்க முன்பதிவு செய்வோர் ரூ. 1699 மதிப்புள்ள சாம்சங் 25 வாட் சார்ஜரை ரூ. 299-க்கு வாங்கிட முடியும்.

    இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M15 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M15 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யு.ஐ., 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • தவளை, வண்டு உள்ளிட்டவைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விரைவில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

    நத்திங் நிறுவனம் ஏப்ரல் 18 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக டீசரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசரின்படி புதிய சாதனம் நத்திங் இயர் 3 மாடலாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    டீசரில் தவளை மற்றும் வண்டு உள்ளிட்டவைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது. எனினும், இயர்பட்ஸ் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. நத்திங் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தொடர்ந்து நத்திங் இயர்பட்ஸ் பற்றிய விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, நத்திங் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சாதனம் இயர்பட்ஸ் ஆகவே இருக்கும்.

     


    பொதுவாக பி.ஐ.எஸ். வலைதளத்தில் சான்று பெறும் சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அப்படியாக சமீபத்தில் சான்று பெற்றுள்ள நத்திங் இயர்பட்ஸ், இயர் 3 மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    நத்திங் நிறுவனத்தின் மற்ற மாடல்களை போன்றே புதிய இயர் 3 மாடலிலும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், ஸ்டெம் ஸ்டைல் டிசைன், சதுரங்க வடிவம் கொண்ட கேஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இயர் 2 மாடலில் LDAC கோடெக் சப்போர்ட், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது.

    டிசைன் மட்டுமின்றி நத்திங் இயர் 3 மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும், நத்திங் நிறுவனம் புதிய டீசர் தொடர்பாக வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் படிப்படியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • இந்த ஸ்மார்ட்போன் அக்வா ரெட் வேரியண்டிலும் கிடைக்கிறது.

    ஐகூ நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் ஐகூ 12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐகூ 12 ஸ்மார்ட்போன் லெஜண்ட் மற்றும் ஆல்ஃபா என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அக்வா ரெட் வேரியண்டிலும் கிடைக்கிறது.

    புதிய நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஐகூ 12 டெசர்ட் ரெட் ஆனிவர்சரி எடிஷன் ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 52 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 57 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    ஐகூ 12 ஆனிவர்சரி எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்குகிறது. இதனை பயனர்கள் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் வாங்கிட முடியும். ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    ஐகூ 12 அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LTPO AMOLED ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    • புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.
    • அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ.ஐ. இரேசர் (AI Eraser) எனும் அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மேஜிக் இரேசர் என்றே இந்த அம்சம் ஒரு புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் ஓபன் மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இம்மாதமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான அப்டேட்கள் விரைவில் வழங்கப்படும்.


    ஒன்பிளஸ் ஏ.ஐ. இரேசர் பயன்படுத்தும் முன்

    ஒன்பிளஸ் ஏ.ஐ. இரேசர் பயன்படுத்தும் முன்

     

    ஒன்பிளஸ் ஏ.ஐ. இரேசர் பயன்படுத்திய பின்

    ஒன்பிளஸ் ஏ.ஐ. இரேசர் பயன்படுத்திய பின்

     

    புதிய ஏ.ஐ. இரேசர் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர மேம்பட்ட அல்காரிதம்களை பயன்படுத்துகிறது. இந்த அம்சம் போட்டோ கேலரியில் உள்ள தேவையற்ற பொருட்களை அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.

    பயனர்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்கள் அல்லது இடையூறுகளை குறிப்பிட்டதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவற்றை நீக்கி செயற்கையாக பேக்கிரவுண்டு ஒன்றை உருவாக்கும். இதற்காக உருவாக்கப்படும் பேக்கிரவுண்டு ஒட்டுமொத்த புகைப்படத்துடன் ஒற்று போகும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்தது.
    • இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

    விவோ நிறுவனம் உருவாக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டிரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் விவோ ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த சாதனத்திற்கு காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களில் விவோ உருவாக்கும் புது ஸ்மார்ட்போனில் உள்ள டிரோன் கேமரா, ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட்போனில் இருந்து தனியே பிரிந்து காற்றில் மிதக்க துவங்கிவிடும். அதன்பிறகு, பயனர்கள் கேமரா எவ்வளவு தூரம் பறக்க வேண்டும் என்றும், கேமரா எந்த கோணத்தில் இருந்து படம்பிடிக்க வேண்டும் என்பதை இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

     


    இந்த சாதனம் எப்போது பொது மக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இத்தகைய சாதனம் விற்பனைக்கு வந்ததும், ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் முறை முற்றிலுமாக மாறிவிடும். வானில் இருந்து எடுக்கக்கூடிய ஏரியல் ஷாட்களை ஸ்மார்ட்போன் மூலமாகவே எளிதில் எடுத்துவிட முடியும்.

    டிரோன் கேமரா கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போனில் தலைசிறந்த புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்ட அதிநவீன கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும், இந்த சாதனத்தில் எவ்வளவு பெரிய பேட்டரி வழங்கப்படும் என்பது மர்மமாகவே உள்ளது.

    அசத்தலான கேமரா சிஸ்டம், ஸ்மார்ட்போன் துறையில் முற்றிலும் புதிய முயற்சியாக இந்த மாடல் வெளியாகும் போதிலும், இதன் பேட்டரி திறன் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை விட குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. மேலும், அடிக்கடி டிரோன் கேமராவை இயக்கும் போது ஸ்மார்ட்போனின் சார்ஜ் வேகமாக குறையவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

    • இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.
    • பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ். 5 கன்சோல் டிஸ்க் மற்றும் டிஸ்க்-லெஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ். 5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. எனினும், இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.

    அமெரிக்க சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளே ஸ்டேஷன் 5 வெளியான மூன்று ஆண்டுகள் கழித்தே பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

     


    பெயருக்கு ஏற்றார்போல் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அதன் முந்தைய மாடலை விட மெல்லியதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பிளே ஸ்டேஷன் 5 மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை பி.எஸ். 5 மாடல் 104mm x 390mm x260mm என்றும் பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 96mm x 358mm x216mm அளவு கொண்டிருக்கிறது.

    இரு மாடல்களிடையே குறிப்பிடத்தக்க வித்தியாசமாக பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 1 டி.பி. ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. பி.எஸ். 5 மாடலில் 825 ஜி.பி. ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி பி.எஸ். 5 ஸ்லிம் அம்சங்கள்:

    சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலில் x86-64-AMD Ryzen Zen 2 CPU மற்றும் AMD Radeon RDNA 2 சார்ந்த கிராஃபிக்ஸ் என்ஜின், ரே டிரேசிங் அக்செல்லரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. ஸ்டோரேஜ், இரண்டு யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

    பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 4K 120Hz டி.வி. மற்றும் 8K டி.வி.க்களிலும் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் மாடலில் பி.எஸ். 4 கேம்களையும் விளையாட முடியும். இதில் டெம்பெஸ்ட் 3டி ஆடியோ தொழில்நுட்பம், 60Fps-இல் 4K கேமிங், ரே டிரேசிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் டிஸ்க் மற்றும் டிஸ்க் லெஸ் வெர்ஷன்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் உள்ளன.

    விலை, விற்பனை விவரங்கள்:

    சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலின் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் டிஸ்க் வெர்ஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.

    • இதில் 12 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் 70 வாட் அல்ட்ரா சார்ஜ் வசதி உள்ளது.

    டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் 5FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 12 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹை ஒ.எஸ். 14, 108MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது லென்ஸ், ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 70 வாட் அல்ட்ரா சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     


    டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2436x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹை ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP லென்ஸ், ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    70 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ரிவர்ஸ் சார்ஜிங்

    டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொமெட் கிரீன் மற்றும் மீடியோரைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

    • புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
    • இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.

    ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."

    "புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×