என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோட் 40X 5ஜி மாடலை தொடர்ந்து புதிய ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மெமரியை பொருத்தவரை 4ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த எக்ஸ் ஓஎஸ் 14.5 வழங்கப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    வைப்ரண்ட் புளூ, ஸ்லீக் பிளாக், சேஜ் கிரீன் மற்றும் டிரீமி பர்பில் நிறங்களில் கிடைக்கும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. 

    • புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.
    • இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய இயர்பட்ஸ்- நார்டு பட்ஸ் 3 மாடல் இந்த மாதம் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் விவரங்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு வந்தன. தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய நார்டு பட்ஸ் 3 மாடலில் 32db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பேஸ்வேஸ் 2.0 தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த இயர்பட்ஸ் வாட்டர் டிராப் வடிவ ஸ்டெம் கொண்டிருக்கும் என்றும் இவை மிக குறைந்த எடை மற்றும் மென்மையான வளைவுகளை கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

     


    முன்னதாக நார்ட் பட்ஸ் 3 ப்ரோ மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் ஓவல் வடிவ கேஸ், அதன் முன்புறம் ஒன்பிளஸ் லோகோ மற்றும் எல்இடி லைட் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய நார்ட் பட்ஸ் 3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டைனமிக் டிரைவர்கள், பேஸ் வேவ் 2.0, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • விவோ ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • விவோ ஸ்மாரட்போன் மாடல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது.

    இந்தியாவில் விவோ T3 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    புதிய விவோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 3 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்டுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை விவோ T3 ப்ரோ 5ஜி மாடலில் 6.77 இன்ச் 2392x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 720 GPU, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள விவோ T3 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டை் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, 5500எம்ஏஹெச் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.
    • ஹூவாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    ஹூவாய் நிறுவனம் வருகிற 10 ஆம் தேதி தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், அதற்கு அடுத்த நாளிலேயே ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

    புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஹூவாய் நிறுவனம் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை மூன்றாக மடிக்க முடியும் என்று தெரிகிறது. ஹூவாய் நிறுவனம் இத்தகைய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பது அனைவரும் அறிந்தது தான்.

    முன்னதாக ஹூவாய் நுகர்வோர் வியாபார பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு புதுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது இதனை ஹூவாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    இது தொடர்பான பதிவில் ரிச்சர்ட் யு, "ஐந்து ஆண்டுகள் விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளால், நாங்கள் அறிவியல் புனைவை நனவாக்கியுள்ளோம். இது ஹூவாயின் அதிநவீன, புதுமை மிக்க சாதனமாக இருக்கும்," என்று தெரிவித்தார். 

    • ரியல்மி நோட் 60 ஆனது ஆன்டிராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ-இல் இயங்குகிறது.
    • ரியல்மி நோட் 60 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி நோட் 60 இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரியல்மி நோட் 60 யூனிசாக் T612 சிப்செட்டில் இயங்குகிறது. ரியல்மி நோட் 60 2 வண்ணம் மற்றும் 3 வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜில் அதிகபட்சமாக 8 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் கிடைக்கிறது.

    ரியல்மி நோட் 60 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ரியல்மி மினி கேப்சூல் 2.0 அம்சத்தைக் கொண்டுள்ளது. ரியல்மி நோட் 60 கடந்த ஆண்டு ரியல்மி நோட் 50 உடன் பல அம்சங்களை கொண்டுள்ளது.

    ரியல்மி நோட் 60 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை இந்திய விலையில் தோராயமாக ரூ. 7,500. 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பக ஸ்டோரேஜ் விலை முறையே இந்திய விலையில் தோராயமாக ரூ. 8,500 மற்றும் இந்திய விலையில் தோராயமாக ரூ. 10,000 ஆகும். இது மார்பிள் பிளாக் மற்றும் வோயேஜ் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நோட் 60 ஆனது ஆன்டிராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ-இல் இயங்குகிறது.

    செல்பி கேமரா சுற்றி சில அறிவிப்புகளை காட்டும் மினி கேப்சூல் அம்சத்தை பெற்றுள்ளது. இது 6.74 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 560நிட்ஸ் பீக் வெளிச்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    இது ஆக்டா கோர் யூனிசாக் T612 சிப்செட்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன், பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி உள் ரேமை 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

    புதிய ரியல்மி நோட் 60-ல் உள்ள இணைப்பு விருப்பங்களில் வைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதனால் பயனர்கள் மழைக்காலங்களில் அல்லது கைகள் ஈரமாக இருக்கும்போது கூட ஸ்கிரீனை தொடர்பு கொள்ள முடியும்.

    ரியல்மி நோட் 60 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.84 மிமீ தடிமன் மற்றும் 187 கிராம் எடை கொண்டது.

    • ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.
    • ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.

    அதன்படி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் சீரிசில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

    புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்துள்ளார். இந்த சீரிசில் அதிகபட்சம் ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். இந்த சீரிசில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றில் அனைத்து மாடல்களிலும் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படும். இத்துடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.2,048 கோடி ரூபாய் பரிவர்த்தனை முடிவடைந்துள்ளது
    • book now, sell anytime அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.

    சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும்.
    • எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது.

    2025-ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும். இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர்.

    நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை ஏற்கனவே 80,872 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.

    கூடுதலாக டாடா குரூப் (Tata Group), சால்காம்ப் (Salcomp), மதர்ஸ்சன் (Motherson), பாக்ஸ்லிங்க் (Foxlink), சன்வோடா (Sunwoda), ஏடிஎல் (ATL) மற்றும் ஜபில் (Jabil) போன்ற சப்ளையர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

    2020-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆப்பிள் மற்றும் அதன் கூட்டாளர்கள் சுமார் 1,65,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

    PLI திட்டம், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வேலைகளை இலக்காகக் கொண்டது. இந்த இலக்கை நான்கே ஆண்டுகளில் எட்டியுள்ளது. இது இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கிறது.

    எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது ஆப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.

    • family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆக உயர்வு.
    • தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்வு.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைத்தளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தனிநபருக்கான ப்ரீபெய்ட் மாதாந்திர கட்டணம் ரூ.139ல் இருந்து ரூ.159 ஆகவும், தனிநபருக்கான ப்ரீபெய்ட் காலாண்டு (3 மாதம்) கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.459 ஆகவும், தனிநபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1290ல் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    • தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    • ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

     இந்தியாவில் பிரபல மொபைல் போன் பிராண்ட் ஆக விளங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது சமீப காலமாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஒன் பிளஸ் 9 மற்றும் ஒன் பிளஸ் 10 ஆகிய பழைய பிளாக்ஷிப் வேரியண்ட்களை பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

     

    இதனால் போன்கள் திடீரென எந்த இயக்கமும் ரெஸ்பான்ஸும் இல்லாமல் திரை கருப்பாக மாறி விடுவதாக கூறியுள்ளனர். போன் லேக் ஆவதும் அதிக சூடாவதுமாக இருக்கிறது என்றும் பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை அடுக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்திய சாப்வேர் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நடக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது

    இந்த நிலையில்தான், பழுதுபட்ட தங்களது ஒன் பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைல் போன்களை சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் ரூ. 42,000 வரை கேட்பதாக பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தொகை அந்த மொபைல்களின் விலையை விட அதிகம் ஆகும்.

    இந்த மாடல்களை விட மேம்பட்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பழைய மாடல் போன்களின் ரிப்பேர் செலவுக்கே 42,000 ஆயிரம் ருபாய் ஆகும் என்று சர்வீஸ் சென்டர்கள் கூறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • அப்போது ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் உள்ளி புதிய தயாரிப்புகளை வெளியிடும்.

    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பெரிய நிகழ்ச்சி நடத்தி அதில் தனது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிடும். அதுபோன்ற இந்த ஆண்டு நிகழ்ச்சி அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஐ-போன் 16, புதிய ஏர்பாட்ஸ் மாடல்கள் மற்றும் பல புதிய தயாரிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு முறையும் புதிய மாடல்களை வெளியிடும்போது, பழைய மாடல்களின் தயாரிப்புகளை நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ-போன் 15 ப்ரோ மற்றும் ஐ-போன் ப்ரோமேக்ஸ் டைட்டானியம் பீச்சர் கொண்ட முதல் ஆப்பிள் ஐ-போன் ஆகும். இதன் டிஸ்பிளே 6.1 இன்ச் ஆகும். விரைவில் வெளியாக இருக்கும் ஐ-போன் 16 சீரிஸ் போன்களின் டிஸ்பிளே 6.7 இன்ச் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் ஐ-போன் 14 பிளஸ் தயாரிப்பையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது. சீரிஸ் 9, அல்ட்ரா 2, எஸ்.இ. 2 வாட்ச்களின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம். ஏர்பாட்ஸ் 2 மற்றும் 3, ஐ-பேடு மினி 6 மற்றும் ஐ-பேடு 10 ஆகியவற்றின் தயாரிப்புகளையும் நிறுத்தலாம் எனத் தெரிகிறது.

    • காட்சிகளை 356 சென்டிமீட்டர்கள் அளவுக்கு பெரிதாக ஒளிபரப்பும்.
    • ஐஓஎஸ்-இல் ஸ்கிரீன் மிரரிங் வழங்குகிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ரொஜெக்டர் மாடல்: ஜெப் பிக்சாபிளே 54 ஸ்மார்ட் எல்இடி-ஐ அறிமுகம் செய்தது. கடந்த ஜூன் மாதம் ஜெப் பிக்சாபிளே 22 ஸ்மார்ட் எல்இடி ப்ரோஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பிக்சாபிளே 54 மாடலில் 3800 லூமென்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தரவுகளை அதிக பிரகாசமாக வெளிப்படுத்தச் செய்யும். இதனால் சிறப்பான காட்சி அனுபவம் கிடைக்கும். இந்த ப்ரோஜெக்டர் FHD (1080 பிக்சல்) ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இது காட்சிகளை 356 சென்டிமீட்டர்கள் அளவுக்கு பெரிதாக ஒளிபரப்பும்.

    குவாட்கோர் பிராசஸர் கொண்டிருக்கும் பிக்சாபிளே 54 மாடல் சீராக இயங்குவதோடு, சிறப்பான நேவிகேஷன் வழங்குகிறது. செயலிகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கும் புதிய ஜெப்ரானிக்ஸ் ப்ரோஜெக்டர் ஸ்கிரீன் மிரரிங் வசதியை வழங்குகிறது. மிராகேஸ்ட் மற்றும் ஐஓஎஸ்-இல் ஸ்கிரீன் மிரரிங் வழங்குகிறது.

    இந்த ப்ரொஜெக்டருடன் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் வசதி உள்ளது. இதனால் ப்ரோஜெக்டரை செட்டப் செய்வது மிகவும் எளிமையான காரியம் தான். இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் உள்ளது. இது நீண்ட காலம் உழைக்கும் திறன் கொண்டுள்ளது. கனெகிடிவிட்டிக்கு இந்த ப்ரோஜெக்டரில் ப்ளூடூத் 5.1, ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் அவுட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிறது.

    மேலும் இதில் பில்ட்-இன் ஸ்பீக்கர் உள்ளதால் தெளிவன ஆடியோ வழங்குகிறது. இதனை ஜெப்ரானிக்ஸ் சவுன்ட்பார்களுடன் செட்டப் செய்தும் பயன்படுத்தலாம். இவைதவிர டூயல் பேண்ட் வைபை, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லென்ஸ் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. 

    ×