என் மலர்
தொழில்நுட்பம்
- சோனி நிறுவனத்தின் முற்றிலும் புது வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
- புது சோனி வாக்மேன் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்கும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
சோனி நிறுவனம் 1979 ஆண்டு வாக்கில் கேசட் வாக்மேன் மாடலை அறிமுகம் செய்தது. 150 டாலர்கள் விலை கொண்டிருந்த சோனி வாக்மேன் மிகவும் பிரபலமான சாதனமாக மாறியது. மேலும் கடந்த ஆண்டுகளில் இசை பிரியர்களை கவரும் வகையில், வாக்மேன் மாடல் கணசமான அப்டேட் மற்றும் ஏராள மாற்றங்களை பெற்று விட்டது.
இந்த வரிசையில், சோனி இந்தியா நிறுவனம் புது பிளேயர் NW-ZX707 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வாக்மேன் ஆடியோ பிரியர்களை மனதில் கொண்ட மிகவும் நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி அறிவித்து இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் புது வாக்மேன் S மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இது வாக்மேனுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தின் ஆடியோ தரத்தை மேம்படுத்தும் வசதி கொண்டுள்ளது. புது சோனி வாக்மேன் 5 இன்ச் டிஸ்ப்ளே, வைபை வசதி, மியூசிக் ஸ்டிரீமிங், டவுன்லோட் வசதி, மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 25 மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
இதில் உள்ள S-மாஸ்டர் HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பம் நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வங்குகிறது. இத்துடன் ஆடியோ தரத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் மேம்பட்ட ஃபைன் டியூன் செய்யப்பட்ட கபேசிட்டர்கள், FTCAP3, சாலிட் ஹை பாலிமர் கபாசிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி வாக்மேன் மாடலில் எட்ஜ் ஏஐ, DSEE அல்டிமேட், டிஜிட்டல் மியூசிக் ஃபைல்களை ரியல் டைமில் அப்ஸ்கேல் செய்யும் வசசதி கொண்டிருக்கிறது. முற்றிலும் புதிய சோனி NW-ZX707 வாக்மேன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- நத்திங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக கால் பெய் தெரிவித்தார்.
நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் நத்திங் தலைமை செயல் அதிகாரி கால் பெய் நத்திங் போன் (1) மாடலின் மேம்ட்ட வெர்ஷனை அறிமுகம் செய்வதில் நிறுவனம் அவசரம் கொள்ளவில்லை என தெரிவித்து இருந்தார்.
எனினும், நத்திங் போன் (2) அறிமுகமாகாது என்றில்லை. இரண்டாவது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ள நத்திங் நிறுவனம் திட்டமிடுகிறது. அந்த வகையில், நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த முறை இந்திய சந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது என தெரிகிறது.
இதுகுறித்து தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த கால் பெய், "நத்திங் போன் (2) மாடலுக்கு அமெரிக்க சந்தை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நத்திங் போன் (2) இந்தியாவில் அறிமுகமாகாது என்றில்லை, ஆனாலும், வெளியீடு முதலில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படும். முன்னதாக நத்திங் போன் (1) மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவே இல்லை."
"எங்களின் இரண்டாவது ஆண்டில் இருந்ததால், எங்களால் இதை செய்ய முடியவில்லை. மேலும் குழுவாக நாங்கள் புது சாதனங்களை உருவாக்கி வந்ததால் எங்களின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது எங்களின் நிலை மாறி இருப்பதால், நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல தயாராகி விட்டோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி கால் பெய் எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. எனினும், இது முந்தைய மாடலை அதிக பிரீமியமாக இருக்கும் என்றும் இதன் மென்பொருள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். பிரீமியம் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் வழங்கப்படலாம்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகையில் கிடைப்பதாக தகவல் வைரல்.
- இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் 2019 வாக்கில் ரூ. 24 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் இந்திய சந்தையில் ரூ. 999 விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த தகவல்களின் படி ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 18 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் ஏர்பாட்ஸ் ப்ரோவுக்கு இவ்வளவு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என தேடினோம்.
அதன்படி வைரல் தகவல்களில் உள்ளதை போன்று ப்ளிப்கார்ட் தளத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை தேடினோம். அதில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 18 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இதிலேயே வைரல் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்த சலுகை தவறானது என உறுதியாகி விட்டது.

ப்ளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை வழங்கப்படுகிறது. இது கோடக் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். வைரல் தகவல்களில் ரூ. 999 விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ கிடைப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ப்ளிப்கார்ட் வழங்கும் எக்சேன்ஜ் சலுகை குறிப்பிடப்படவில்லை.
ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் தங்களின் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அந்த வகையில், தள்ளுபடி சலுகை சேர்க்கும் பட்சத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோவை ரூ. 999 விலையில் வாங்கிட முடியும். மேலும் எக்சேன்ஜ் சலுகையை முழுமையாக பெற சீராக இயங்கும் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்ய வேண்டும்.
அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மாடலை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். ஒருவேளை பயனர்கள் தங்களினை ஐபோன் 12-ஐ எக்சேன்ஜ் செய்து ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்கினாலும், ரூ. 1000 செலுத்த வேண்டும். எக்சேன்ஜ் சலுகை இன்றி ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் வங்கி சலுகையின் படி குறைந்த பட்சம் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்க முடியும்.
இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் 2019 வாக்கில் ரூ. 24 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும் என ஆப்பிள் அறிவித்து இருந்தது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஆப்பிள் H1 சிப் உள்ளது. மேலும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புது ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது ஒப்போ என்கோ ஏர் 3 மாடலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற டிசைன் மற்றும் சிறிய ஸ்டெம் உள்ளது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகமகாகும் என அறிவித்த கையோடு மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி புது ரெனோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் என்கோ ஏர் 3 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புது ஒப்போ என்கோ ஏர் 3 ஒப்போ கடந்த ஆண்டு அறிமுகம் செய்த என்கோ ஏர் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர ஒப்போ நிறுவனம் தனது புது ட்ரூ வயர்லெஸ் இயர்போனின் முக்கிய அம்சங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.
அதன்படி ஒப்போ என்கோ ஏர் 3 மாடலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற டிசைன், சிறிய ஸ்டெம் கொண்டிருக்கிறது. இத்துடன் பெபில் வடிவ சார்ஜிங் கேஸ், டிரான்ஸ்பேரண்ட் மூடி உள்ளது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. என்கோ ஏர் 3 மாடலில் ஹைபை 5 DSP பிராசஸர் வழங்கப்படுகிறது.
இது முந்தைய மாடலை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 47ms அல்ட்ரா-லோ லேடன்சி, DNN நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 31 மணி நேர பேட்டரி லைஃப், ஒவ்வொரு இயர்பட்-ம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
இவைதவிர புது என்கோ ஏர் 3 பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒப்போ ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz வளைந்த டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 108MP போர்டிரெயிட் கேமரா, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சாதனங்கள் வெளியீடு பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
- ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல வல்லுனரான மிங்-சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த 9 முதல் 12 மாதங்களுக்கு ஆப்பிள் புது ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்யாது என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஐபேட் மாடல் சிறு அப்டேட் செய்யப்பட்டு உற்பத்தி பணிகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். புது மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய விவரங்களை மிங்-சி கியூ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
சீனாவை சேர்ந்த ஆன்ஜி டெக்னாலஜி நிறுவனம் கிக்ஸ்டாண்ட் பாகங்களை உற்பத் தி செய்து கொடுக்கும் என தெரிகிறது. மடிக்கக்கூடிய ஐபேட் மாடல் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், கடைசியாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எல்ஜி டிஸ்ப்ளே உடன் இணைந்து மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
கடந்த ஆண்டு டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ரோஸ் யங் ஆப்பிள் நிறுவனம் 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கியோ தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 வாக்கில் ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முரணாக ரோஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய சாதனம் 2025-க்கு பின் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த இதர தகவல்களில் புது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே 20.25 இன்ச் அளவில் இருக்கும் என்றும் மடிக்கப்பட்ட நிலையில், இது 15.3 இன்ச் அளவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் பேனலில் எல்ஜி டிஸ்ப்ளே மிக-மெல்லிய கவர் கிலாஸ் பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை அதிகப்படுத்தி வருகிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்த சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்களை எட்டியது.
ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளரான ஜெபில் இன்க், இந்தியாவில் ஏர்பாட்ஸ் பாகங்களை உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிருந்து ஏர்பாட்ஸ்-க்கான பிளாஸ்டிக் பாடி அல்லது மூடிகளை சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
ஏர்பாட்ஸ் பாகங்கள் உற்பத்தி குறித்து ஆப்பிள் மற்றும் ஜபில் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவன சாதனங்களின் இந்திய உற்பத்தி 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. "ஆப்பிள், மற்றும் ஓர் வெற்றிக்கதை. அவர்களின் இந்திய உற்பத்தி ஏற்கனவே 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. நான் தவறாக கூறவில்லை எனில், அவர்கள் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் சமீபத்திய சாதனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்." என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்யும் சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 141 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
- இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
- 50MP பிரைமரி கேமரா, கேமிங் சார்ந்த பிராசஸர் கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நோட் 12i ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. AMOLED பேனல் கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் சார்ந்த சிப்செட், பெரிய பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புது இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் புது இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபோர்ஸ் பிளாக் மற்றும் மெட்டாவெர்ஸ் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் ஜியோ பிரத்யேக சலுகையின் கீழ் புது இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனை ரூ. 8 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். நோட் 12i ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை 30 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேஷ்பேக் சலுகையை பெற்றதும், பயனர்கள் வேறு ஒரு சிம் கொண்டு அதே சாதனத்தில் டேட்டா கனெக்டிவிட்டியை பெற முடியாது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் ஜியோ சிம் மற்றும் இதர நெட்வொர்க் சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். இதுபற்றிய முழு தகவல்களை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடியும்.

இன்ஃபினிக்ஸ் நோட் 12i அம்சங்கள்:
6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
4 ஜிபி LPDDR4x ரேம்
64 ஜிபி eMMC 5.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12
50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
2MP டெப்த் சென்சார் ஏஐ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- 5ஜி வெளியீடு மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகைகளின் விலை ரூ. 489 மற்றும் ரூ. 509 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
புதிய ரூ. 489 ஏர்டெல் சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ. 509 சலுகையில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டை கடந்ததும், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, 1MB டேட்டாவுக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுதவிர இரு சலுகைகளிலும் ஏர்டெல் தேங்ஸ் பலன்களான மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24|7 சர்கிள் சந்தா, ஃபாஸ்டேகிற்கு ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன் மற்றும் வின்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட புது ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது.
- கடந்த மாதம் தான் ரியல்மி தனது 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்தது.
ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி சீன வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை குறிப்பிடப்படவில்லை.
எனினும், ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெறும் என ரியலமி உறுதிப்படுத்தி இருக்கிறது. அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்பதை தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் டீசரில் இடம்பெறவில்லை.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த GT நியோ 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சீனாவில் "4" ஆம் எண் ராசியில்லாத ஒன்றாக பார்க்கப்படுவதால், ரியல்மி நிறுவனம் GT நியோ 4 பெயருக்கு மாற்றாக ரியல்மி GT நியோ 5 பெயரில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார். அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இண்டகிரேட் செய்யப்பட்ட கைரேகை சென்சார், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், அதிகபட்சம் 256 UFS 3.1 மெமரி வழங்கப்படுகிறது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இருவித ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
- ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.
- புது ஸ்மார்ட்வாட்ச்களில் SpO2 மாணிட்டர், ஹார்ட் ரேட் டிராக்கர் என ஏராளமான சென்சார்கள் உள்ளன.
ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் பெயர்களில் புது ஸ்மார்ட்வாட்ச்கள் அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் ஃபயர்-போல்ட் டாக் அல்ட்ரா மாடல் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.
மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் மேம்பட்ட ஹெல்த் சூட் வசதிகளான- SpO2, ஹார்ட் ரேட், ஸ்லீப் மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று மாடல்களில் விலை உயர்ந்த ஃபயர்-போல்ட் சாட்டன் 1.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபயர்-போல்ட் சாட்டன் அம்சங்கள்:
1.78 இன்ச் 368x448 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
ப்ளூடூத் காலிங்- கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, பின்க், கிரே, சில்வர் மற்றும் கோல்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது

ஃபயர்-போல்ட் டாக் 3 அம்சங்கள்:
1.28 இன்ச் 240x240 பிக்சல் LCD ஸ்கிரீன்
ப்ளூடூத் காலிங்- கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, பின்க், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது
ஃபயர்-போல்ட் நிஞ்சா-ஃபிட் அம்சங்கள்:
1.69 இன்ச் LCD ஸ்கிரீன்
123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, சில்வர், பின்க், ரெட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர்-போல்ட் சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரத்து 999, ரூ. 2 ஆயிரத்து 199 மற்றும் ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்று மாடல்களில் ஃபயர்-போல்ட் சாட்டன் மற்றம் டாக் 3 மாடல்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஃபயர்-போல்ட் நிஞ்சா-ஃபிட் விற்பனை நாளை (ஜனவரி 29) துவங்குகிறது. மூன்று மாடல்களும் நாடு முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றன.
- சாம்சங் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புது மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கேலக்ஸி மாடல்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களுக்காக சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. முன்னதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ரோ சீரிஸ் மாடல்களுக்காக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருந்தன. தற்போது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் "குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி" பெயரில் பித்யேக பிராசஸர் வழங்கப்பட உள்ளன.
புது பிராசஸரின் பெயர் நீண்டு இருக்கும் போதிலும், புது ஃபிளாக்ஷிப் மாடல்களில் விசேஷ சிப்செட் உள்ளதை பயனர்களுக்கு நினைவூட்ட பிரத்யேகமாக மாற்றப்பட்ட ஸ்னாப்டிராகன் லோகோவை சாம்சங் தேர்வு செய்து இருக்கிறது. இந்த லோகோ விளம்பர பொருட்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்தே பயனர்கள் புது லோகோவை விளம்பர பதாகை மற்றும் வலைதளத்தில் காண முடியும்.
இந்த பிராசஸர் சாம்சங் சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன. முன்னதாக புது சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 3088x1440 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 200MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளன.
- புதிய கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வு துவங்கும் முன், மைஸ்மார்ட்பிரைஸ் மற்றும் டிப்ஸ்டர் யோகேஷ் ரார் இணைந்து புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை விவரங்களை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள் லீக் ஆன நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் விலையும் முந்தைய தகவல்களில் உள்ளதை போன்றே குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி புதிய கேலக்ஸி S23 விலை கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி S22 விலையை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

லீக் ஆன விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி S23 பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம். இது ஐபோன் 14 இந்திய விலையை விட ரூ. 99 அதிகம் ஆகும். கேலக்ஸி S23 பிளஸ் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றும், கேலக்ஸி S22 பிளஸ் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S22 அல்ட்ரா விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை இந்த முறை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் பிரத்யேகமாக கான்ஃபிகர் செய்யப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 6.8 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, 200MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.






