search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வோலோடிமிர் ஜெலன்ஸ்கி"

    • ரஷிய-உக்ரைன் போர் குறித்து இதுவரை டிரம்ப் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை
    • பொய் தகவல்களை பரப்ப பில்லியன்களில் செலவு செய்கிறார் புதின் என்றார் ஜெலன்ஸ்கி

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்கள் கடந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி மற்றும் ராணுவ உதவியை தொடர்வதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய-உக்ரைன் போர் குறித்து தனது நிலைப்பாட்டையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படும் டிரம்ப், புதினின் ஆதரவாளராக விமர்சிக்கப்படுகிறார்.

    இந்நிலையில், புதின் மற்றும் டிரம்ப் குறித்து ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்தார்.

    அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது:

    இரண்டு வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்போரில் இதுவரை உக்ரைன் நாட்டு வீரர்கள் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புதின் செலவு செய்து வருகிறார். தற்போது அவர் அந்த முயற்சியில் வெற்றி அடைந்தது விட்டாரோ என தோன்றுகிறது.

    ரஷியாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார்.


    டிரம்ப், புதின் பக்கம் நிற்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அமெரிக்க ராணுவம் ரஷிய ராணுவத்துடன் போர் புரிந்ததில்லை. அதனால் அவரது உண்மையான நோக்கங்களை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் புதினை எதிர்த்து போரிட்டு வருகிறோம்; எங்களுக்கு தெரியும்.

    நாங்கள் இப்போரில் வெற்றி பெறுவது எங்கள் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் கைகளில் உள்ளது.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    • கடும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • உக்ரைனுக்கு உதவ மறுப்பது நியாயமற்ற செயல் என பைடன் கூறினார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் போரிட்டு வருகிறது.

    போர் தொடங்கி 2 வருடங்களை நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் இதுவரை பலத்த சேதங்கள் நிகழ்ந்துள்ளது.

    பல உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புறக்கணித்து விட்டார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவியை பெருமளவு வழங்கி வந்த அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் தரவில்லை.

    இப்பின்னணியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), டெலாவேர் (Delaware) மாநில தேவாலய கூட்டத்தை முடித்து வரும் போது உக்ரைன் விவகாரம் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) தொலைபேசியில் உரையாடினேன். உக்ரைனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க வழி ஏற்படுத்தப்படும் என அவருக்கு நம்பிக்கை தெரிவித்தேன்.

    அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உக்ரைன் ராணுவத்திற்கு உதவிட மறுப்பது அறிவற்ற செயல் மட்டுமல்ல; நியாயம் இல்லாததும் கூட.

    நான் இதற்காக உறுப்பினர்களோடு போராடி, உக்ரைனுக்கு தேவைப்படும் தளவாடங்கள் கிடைக்க வழிவகை செய்வேன்.

    அமெரிக்க உதவி இல்லாவிட்டால், உக்ரைன் மேலும் பல பிராந்தியங்களை ரஷியா வசம் இழக்க நேரிடும் என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பைடன் கூறினார்.

    முன்னதாக, உக்ரைனுக்கான ராணுவ உதவி குறித்து விவாதிக்காமல் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பைடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மனிதாபிமான உதவி, நிதியுதவி மற்றும் ராணுவ உதவி எனும் வகையில் $75 பில்லியனுக்கும் மேல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

    • 1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன
    • அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் நம் குடியுரிமையை துறக்கின்றனர் என்றார் ஜெலன்ஸ்கி

    2022 பிப்ரவரி 24 அன்று ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.ீ

    போர் தொடங்கி 2 வருட காலம் நிறைவடைய உள்ள நிலையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பெரும் கட்டிட சேதங்கள் ஏற்பட்டும், போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் இல்லை.

    1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன.

    தேசிய ஒற்றுமை தினம் எனும் பெயரில் இந்த இணைப்பை கொண்டாடும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அயல்நாட்டில் வாழும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நன்றி. ஆக்கிரமிப்பின் போது உக்ரைனுக்கு முழு ஆதரவும் வழங்கிய அவர்களுக்கு நன்றி.

    உக்ரைனுக்காக போரிட வந்த அயல்நாட்டில் வசித்த நம் நாட்டினருக்கும் நன்றி.

    நம் நாட்டில் இரட்டை குடியுரிமை முறை இல்லாததால், அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், உக்ரைன் பாஸ்போர்டை வைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

    வெர்கோவ்னா ராடாவில் (உக்ரைன் பாராளுமன்றம்) ஒரு புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பாராளுமன்ற ஒப்புதல் கிடைத்து இந்த வரைவு சட்டமாக ஒரு வருட காலம் ஆகும்.

    ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த செய்தி கேட்டவுடம் அயல்நாடுகளில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் தாய்நாட்டை காக்க உடனடியாக திரும்பி வந்தனர். அவர்களில் பலர் தங்களை ராணுவத்தில் இணைத்து கொண்டனர்.

    • ஆக்ரமிப்புக்கு எதிராக உக்ரைன் போரிட்டு வருகிறது
    • போர் 667 நாட்களை கடந்து தொடர்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை.


    இரு தரப்பிலும் பெரும் கட்டிட சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்தாலும், போர் 667-வது நாட்களை கடந்து இன்று வரை தொடர்கிறது.

    • நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர்.
    • நேட்டோ உச்சி மாநாட்டில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதிபரின் பேச்சால் சலசலப்பு.

    லிதுவேனியா:

    நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடினர்.

    இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர்.

    இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷிய அதிபர் புதின் பெயருடன் குழப்பி அவரை "விளாடிமிர்" என்று குறிப்பிட்டார்.

    பைடன் உடனே தன்னைத் திருத்திக் கொண்டு பின்னர் ஜெலென்ஸ்கி என்று குறிப்பிட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பைடன் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில், "விளாடிமிர் மற்றும் நான்... ," என்று கூறிய பைடன், தவறுதலாக குறிப்பிட்ட சில நொடிகளில் அவர் தன்னைத் திருத்திக் கொண்டு, ஜெலென்ஸ்கியும் நானும்.. உக்ரைனில் இருந்தபோதும் மற்ற இடங்களில் நாங்கள் சந்தித்தபோதும் நாங்கள் செய்யக்கூடிய உத்தரவாதங்களைப் பற்றி பேசினோம்..," என்று இருந்தது.

    • உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார்.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார். உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்தனர். என்னை பார்க்க வர முயன்றனர், ஆனால் முடியவில்லை.

    எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார். ஆனால் அப்போது தர முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்றபோது, அதை என்னிடம் கொடுத்தார்.

    இதில் விந்தை என்னவென்றால், அதன்பிறகு நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பசி எடுத்தது. அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுத்தேன். அதைப்பார்த்து அம்மா சிலிர்த்து போனார்.

    இவ்வாறு ரிஷி சுனக் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

    • உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை.
    • உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை.

    ஹிரோஷிமா :

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.

    உக்ரைன் போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் ரஷியா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, உருக்குலைந்துபோய், இப்போது பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதுபோல, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், 'ஜி-7' நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்த உச்சி மாநாட்டில், உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்தபடியே இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின.

    அதன்படி 'ஜி-7' உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பல முறை பேசி இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம்.

    உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்க்கிறேன்.

    எங்கள் எல்லோரையும் விட இந்த போரினால் ஏற்படுகிற பாதிப்புகளை நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எங்கள் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து கடந்த ஆண்டு நாடு திரும்பியபோது அவர்கள் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துக்கூறினார்கள். நீங்களும், உக்ரைன் மக்களும் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், "பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்" என கூறப்பட்டுள்ளது.

    • உக்ரைன்-ரஷியா போர் 5 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
    • சீனா ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

    கான்பெர்ரா :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 5 மாதங்களுக்கும் மேலாக படையெடுப்பை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    அதே சமயம் சீனா, போர் தொடங்கிய நாள் முதல் ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. மாறாக ரஷியா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு சீனா, உதவக்கூடாது என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றியபோது ஜெலன்ஸ்கி இதை தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "இப்போதைக்கு, சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது, நான் நேர்மையாகச் சொல்வேன், சீனா ரஷியாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது, ரஷியாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்" என கூறினார்.

    • உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது.
    • சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருது இங்கிலாந்தின் உயரிய விருதாகும்.

    லண்டன் :

    உக்ரைன் மீதான ரஷியா போரில் இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது. போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து, இங்கிலாந்து எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என உறுதியளித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார்.

    இது குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இன்று வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது. ஜெலன்ஸ்கியின் தைரியம், எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை அசைத்து, உலகளாவிய ஒற்றுமை அலைகளை கிளறிவிட்டன" என குறிப்பிட்டுள்ளார்.

    ×