search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் கல்லூரி"

    • அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
    • காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    படிப்பில்லாத மாணவர்கள் தீய வழியில் செல்கின்றனர். படிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல வழியில் செல்ல முடியும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் கல்வியில் புதுவை மாநிலம் சிறந்து விளங்குகின்றது.

    தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

    காரைக்காலில் ரூ.410 கோடியில் ஜிப்மர் கிளை கல்லூரிரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.460 கோடியில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இன்னும் 2 ஆண்டுகளில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரிக்கு போதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    நான் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த போது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். அங்கு சென்று மேடையில் ஏறி பட்டம் பெற ஷூ, பட்டமளிப்பு கவுன், தொப்பி ஆகியவற்றை வாங்கி பட்டம் பெற்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர்.
    • இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி விரட்டியான ஐந்திலைக் கரைசலின் தயாரிப்பு முறை மற்றும் அதனை உபயோகிக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்தினை அளித்தனர். இக்கரைசலானது வேப்பிலை, புங்கம், ஆடாதோடா, எருக்கு, ஊமத்தை ஆகிய இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு நிழலுள்ள பகுதியில் வைத்து சேமிக்கப்படுகிறது.

    இது இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதால் செயற்கை பூச்சி விரட்டி களின் உபயோகத்தினை குறைத்து , சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கிறது என்று கூறினர். நிகழ்ச்சியில் ஏராளமனா விவசயிகள் காலந்து கொண்டனர்.

    • வேளாண் கல்லூரி காவலாளி பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை துரைசாமி புரத்தை சேர்ந்தவர் பிரமானந்த் (வயது46). மதுரை ஒத்தக்கடையில் வேளாண்மை கல்லூரியில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி விருதுநகர் அருகேயுள்ள முத்துகுமார புரத்தில் அங்கன் வாடியில் பணிசெய்து வருகிறார். இதனால் ரேவதி மற்றும் குழந்தைகள் அங்கு வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆயுத பூஜையை கொண்டாட பிரமானந்தம் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் விருதுநகருக்கு சென்றார். திருமங்கலம் அடுத்துள்ள சிவரக்கோட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரமானந்தம் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரமானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி ரேவதி கொடுத்த புகாரில் கள்ளிக்குடி போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளி கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேப்பந்தட்டை வட்ட மாநாடு, வேப்பந்தட்டை காந்தி மகாலில் நடைபெற்றது. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் சாமிரை, செயலாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் செங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

    பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீர்தேக்க திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புக்கு மானிய விலையில் தீவனம் வழங்கி பால் உற்பத்தியாளர்களுககு கறவை மாடு கடன் வழங்க வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரை வசதியாக பள்ளி கல்லூரி நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

    மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வசதிகள் வழங்கி விவசாயிகள வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் அம்மைநோய் தடுப்பூசி உரிய காலத்தில் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் புரோட்டா சாப்பிட்டு உள்ளனர். அப்போது உணவு கெட்டுப் போயிருப்பதை அறிந்த மாணவர்கள், அது குறித்து உணவு சமைப்பவர்களிடம் கேட்டுள்ளனர்.
    • தரமான உணவு வழங்கிடவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாதைகளை ஏந்தியவாறு இரவு முதல் சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் கோஷமிட்டனர்.

    வல்லம்:

    தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே தனியார் வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு நான்கு ஆண்டு வேளாண்மை படிப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர் அதில் 450 மாணவ- மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் புரோட்டா சாப்பிட்டு உள்ளனர். அப்போது உணவு கெட்டுப் போயிருப்பதை அறிந்த மாணவர்கள், அது குறித்து உணவு சமைப்பவர்களிடம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் உணவகத்தின் உள்ளே சென்று பார்த்த போது பழைய மீதமான உணவுகள், கெட்டு போன உணவுகள் ப்ரீஸர் பாக்ஸில் நாள் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்று முன் தினம் இரவு மாணவர்கள் கல்லூரி விடுதியில் சாப்பிடாமல் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை கல்லூரி நுழைவாயில் முன்பே 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரமான உணவு வழங்கிடவும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாதைகளை ஏந்தியவாறு இரவு முதல் சாப்பிடாமல் இருந்து வந்த நிலையில் கோஷமிட்டனர். இதில் முதலாம் ஆண்டு மாணவி பசி மயக்கத்தில் மயக்கம் அடைந்தார்.உடனே சக மாணவிகள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பூதலூரா வட்டாசியர் பிரேமா, தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சித்ரா. மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கல்லூரிக்கு, இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கல்லூரி விடுதி மற்றும் கேணாடினில் தரமற்ற கெட்டு போன உணவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உணவு பாதுகாப்புஅதிகா ரிகள் கெட்டுபோன உணவுகளை சோதனை க்காக கொண்டு சென்று ள்ளனர்.

    அதே போல் உரிய தர சான்றிதழ் இன்றி மாணழர்களுக்கு‌ உணவு தயாரித்து தந்து வந்ததும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் உள்ள மெஸ் மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதனையடுத்து மாணவ- மாணவிகளுடன் அதிகா ரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு மாணவ- மாணவிகள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை சாப்பிடாமல் இருந்து வந்த மாணவ மாணவிகளுக்கு வெளியில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

    ×