வேளாண் கல்லூரி காவலாளி பலி

வேளாண் கல்லூரி காவலாளி பலியானார். கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாண் கல்லூரி காவலாளி பலி
Published on

திருமங்கலம்

மதுரை துரைசாமி புரத்தை சேர்ந்தவர் பிரமானந்த் (வயது46). மதுரை ஒத்தக்கடையில் வேளாண்மை கல்லூரியில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி விருதுநகர் அருகேயுள்ள முத்துகுமார புரத்தில் அங்கன் வாடியில் பணிசெய்து வருகிறார். இதனால் ரேவதி மற்றும் குழந்தைகள் அங்கு வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆயுத பூஜையை கொண்டாட பிரமானந்தம் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் விருதுநகருக்கு சென்றார். திருமங்கலம் அடுத்துள்ள சிவரக்கோட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரமானந்தம் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கிவீசப்பட்ட பிரமானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி ரேவதி கொடுத்த புகாரில் கள்ளிக்குடி போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com